சாரலே வா...சந்தோஷம் தா...| Dinamalar

சாரலே வா...சந்தோஷம் தா...

Updated : ஜூன் 01, 2017 | Added : ஜூன் 01, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சாரலே வா...சந்தோஷம் தா...


குற்றால சீசனுக்காக பலரும் காத்திருக்கின்றனர்.

எத்தனை முறை குளித்தாலும் எத்தனை வருடங்கள் குளித்திருந்தாலும் அலுக்காத ஒரே விஷயம் குற்றால அருவி குளியல்.

மேகம் கூடுவதும் கலைவதுமாக இருக்கிறது,கூடிடும் மேகங்கள் மழையாக பெய்யவேண்டி அருவிகளும் காத்திருக்கிறது.

மெயினருவியில் லேசாக விழும் நீரில் குளிக்க கூட்டமாக நிற்கின்றனர்.

பழைய குற்றாலம் அருவியில் இப்போதுதான் ஈரப்பதம் தெரிய ஆரம்பித்திருக்கிறது.வெயில் காலத்தில் செய்திருக்க வேண்டிய தரைதளம் போடுவது போன்ற மராமத்து வேலைகளை இப்போது செய்து கொண்டு இருக்கின்றனர்.

ஆளற்ற தேசத்தில் பட்டாம் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன.

பசிக்கொடுமையா? என்னவென்று தெரியவில்லை அந்த பட்டாம் பூச்சிகளை பிடித்து அங்குள்ள குரங்குகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன.இங்குள்ள குரங்குள் அசைவமா?அல்லது பட்டாம் பூச்சி சைவமா?தெரியவில்லை?

ஐந்தருவியில் மட்டும்தான் ஆறுதலாக தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது,இந்த வாரத்திற்குள் சீசன் களைகட்டிவிடும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் என எதிர்பார்ப்போம்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை