சிங்கம் ஒன் டூ திரி...திரிவேதா...| Dinamalar

சிங்கம் ஒன் டூ திரி...திரிவேதா...

Added : ஜூன் 04, 2017
Advertisement
சிங்கம் ஒன் டூ திரி...திரிவேதா...

உன் சிக்குபுக்கு ரயில் சிரிப்பில் இதயம் துடிக்குது எக்ஸ்பிரஸ் வேகத்தில்... கொள்ளை அழகு! வெள்ளைக்காரி, நீ நடிக்கலாம் ஷேக்ஸ்பியர் நாடகத்தில்; தென்றலாய் பிறந்து மயிலிறகாய் தவழும் நீ, மிதக்கலாம் மேகத்தில்! ஜொலிக்கும் தங்கங்கள் எல்லாம் தங்கமென நினைத்து மோதும் உன் பாதத்தில்... சுடர்விடும் தீபத்தின் திரியாய் நடிப்பில் ஒளிவீசும் நடிகை திரிவேதா மனம் திறக்கிறார்...* சினிமா என்ட்ரி ?விளையாட்டாக வந்து 'வேட்டைக்காரன்', 'சுறா' படங்களில் சின்ன கேரக்டர் என்ட்ரி ஆனேன்.* நீங்கள் நடித்தது...'சிங்கம் ஒன்', 'சிங்கம் டூ', 'சிங்கம் திரி' படங்களில் அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்து இருக்கிறேன்.* நெக்ஸ்ட் ஹீரோயினா?நடிகர் பொன்னம்பலம் இயக்கிய 'இடியுடன் கூடிய மழை' படத்தில் பேயா நடிச்சிருக்கேன். இன்னும் ரிலீஸ் ஆகலை, நீங்களும் வெயிட் பண்ணுங்க அழகான பேயை பார்க்க.* நடிப்பு திறமைஎவ்வளவு தான் திறமையா நடிச்சாலும், சின்ன கேரக்டர்கள் தான் கிடைக்குது. அதுவும் பெரிய ஹீரோயின்கள் கூட நடிக்கும் போது என் நடிப்பு திறமை வெளியே தெரியுறதில்லை.* 'பன்னீர் புஷ்பங்கள்' சாந்தி கிருஷ்ணா மாதிரி உள்ளீர்களேஆமா, நிறைய பேர் சொல்லி இருக்காங்க நடிகை சாந்தி கிருஷ்ணா மாதிரி இருக்கேன்னு. இன்னும் சிலர் அமலா, மீனா சாயலில் இருக்குறதா கூட சொல்வாங்க.* உங்கள் பெருமை...'சிங்கம் டூ' படத்தில் மனோரமாவுடன் கடைசி பிரேமில் நின்ற ஒரே நடிகை நான் தான்.* நடிகர் சங்கம்இன்றைய நடிகர் சங்கம் நல்லாவே இயங்கி கொண்டிருக்கிறது. ஆனால், என்னை போன்ற சின்ன ஹீரோயின்கள் கருத்துக்களை கொஞ்சம் கேட்கணும், திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்.* பிரபலமாகும் சக நடிகைகள்...பிரபலமானா என்ன, எனக்கு சந்தோஷம் தான்... நானும் ஒரு நாள் பெரிய ஹீரோயினா வருவேங்குற நம்பிக்கை இருக்கு.* விரும்பும் ஹீரோ ?அஜித் தான் நான் விரும்பும் ஹீரோ. செஞ்ச உதவியை சொல்லிக்காட்டி 'பப்ளிசிட்டி' தேடாத ஒரே நடிகர் இவர் தான்.* சினிமா பாலிடிக்ஸ்...அய்யோ... நிறைய இருக்கு 'நீ எல்லாம் ஏன் நடிக்க வரே'ன்னு கூட கேட்பாங்க. சிலர் தட்டிக் கொடுத்து பேசுவாங்க, பலர் மட்டம் தட்டியே பேசுவாங்க.* நடிப்பு தவிர...கர்நாடக சங்கீதம், பரதம், ஹிப்பாப் டான்ஸ் தெரியும். இப்போ டிவி சீரியல்களில் 'டப்பிங்' பேசும் வாய்ப்பும் கிடைச்சிருக்கு.* முயற்சி தொடருமா...கண்டிப்பா... ஒரே, ஒரு படத்தில் மட்டும் நான் பெரிய கேரக்டர்ல நடிச்சா போதும், தமிழ் சினிமாவுல ஒரு ரவுண்டு வருவேன். இது என்னோட 7 ஆண்டு போராட்டம் ஒரு நாள் வெற்றி வாகை சூடுவேன்...trivetha1@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X