vaigai river | வைகை கரையில்...| Dinamalar

வைகை கரையில்...

Updated : ஜூன் 14, 2017 | Added : ஜூன் 06, 2017 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

வைகையை போற்றுவோம்...
நீண்ட பராம்பரியமும் நெடிய வரலாறும் கொண்ட வைகை நதி இன்று மதுரையின் கூவமாக மாறிவருகிறது.
யாரும் எந்தவித அச்சமும் கூச்சமும் இல்லாமல் கழிவு நீரை வைகை நதியில் கலக்கவிடுகின்றனர்.வீடுகள்,கடைகள்,அலுவலகங்களில் இருந்து திறந்துவிடப்படும் கழிவு நீரானது சாக்கடை போல ஒடுகிறது.
எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கொட்டலாம் என்ற நிலையில் வைகை ஆறு திறந்த வெளி குப்பைக்கிடங்காகவே காட்சி தருகிறது.
கடந்த தலைமுறையினர் கூட வைகையை சுத்தமாக பார்த்திருக்கின்றனர், குளித்து மகிழ்ந்திருக்கின்றனர், இருபது வருட இடைவெளியில் ஏன் இப்படி ஒரு அவலமான சூழல்.
இத்தனைக்கும் இப்போதுதான் சுற்றுச்சுழல் பற்றிய விழிப்புணர்வும் அது குறித்து செய்திகளும் அதிகமாகி இருக்கிறது.

ஆறு தாய்க்கும் மேலாக போற்றப்பட வேண்டும், கடவுளாக கருதி வணங்கப்பட வேண்டும், அடுத்த தலைமுறைக்கும் தேவை எனக்கருதி பராமரிக்கப்பட வேண்டும்.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
12-ஆக-201703:18:30 IST Report Abuse
Nagan Srinivasan ஆற்றின் இருபுறங்களிலும் நிறைய குப்பைத்தொட்டிகள் மற்றும் கழிவு நீர் வடிவு குழாய்கள் என்று தனியாக செய்தல் வேண்டும். இதற்கான செலவை வாரியாக மதுரை மக்களிடம் இருந்து பெறலாம். கடலில் இருந்து குடிநீர் செய்யும் தொழில் நுட்பம் OTECPOWER என்ற ஹூஸ்டன் நிறுவனித்திடம் உள்ளது. அதன் மூலம் ராமநாதபுர மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய நீர் பெற முடியும். இதற்கு மத்திய அரசு மாநில அரசு முயற்ச்சிக்க வேண்டும். மோடி அவர்கள் தங்கள் வெளிநாடு பயணங்களை நிறுத்தி விட்டு மாநில உள்நாட்டு பயணங்கள் மேற்கொண்டால் நன்று. மாநில அரசு அமைச்சர்கள் இந்த திட்டங்கள் பணத்தை கொள்ளை அடிப்பதை விட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
sam - Doha,கத்தார்
28-ஜூலை-201708:15:44 IST Report Abuse
sam idarku indha arasangam yenna sollapogirathu. edhir katchi neengal saiya vendeya vaikalai seithu kattumbothavathu, neengal thirudha vendum. adhai vittu vittu tamil nattai sudu kadaga aaki kattuvom yendrum ungal katchi eedupattal, ungalai makkal nitchyamaga mannika mattargal
Rate this:
Share this comment
Cancel
PALANI - CHENNAI,இந்தியா
22-ஜூலை-201710:36:27 IST Report Abuse
PALANI ஆலயங்கள் ஆயிரம் இருந்தும், நம் தமிழ் நாட்டில் வற்றா ஆறுகள் இல்லை. வைகை, தாமிரபரணி, பாலாறு, வடபெண்ணை, தென்பெண்ணை என்பவை முக்கிய ஆறுகள் என்றாலும் பிற மாநிலங்களில் இருந்து நாம் எதிர் நோக்கும் ஆறுகள் காவிரியும், கிருஷ்ணா நதி நீரும். மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரையும் நாம் பாதுகாப்பதில்லை. வீணாக கடலில் கலக்க விடுகின்றோம். இந்நிலையில், கௌரவப் / உரிமைப் பிரச்சினை, அரசியல் ஆதாயம் என்று அண்டை மாநிலங்களுடன் சண்டைபோட்டுக் கொண்டிருக்கின்றோம். மழைக்காலங்களுக்கு முன்பு ஆறுகளைத் தூர் வாரி ஆயத்த நிலையில் நாம் வைத்திருந்தாலே பெருமளவு நீரை நாம் சேமிக்க முடியும். அத்துடன் கடலில் கலப்பதைக் கூட தடுக்க முடியும். சமீப காலங்களில், இளைஞர்கள் முயற்சி செய்து ஊர்ப் பொதுமக்களுடன் சேர்ந்து அவர்களாகவே பொதுப்பணிகளில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு, வைகை ஆறு பாயும் இடங்களில் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து குப்பைகளை போடாதவாறு, கழிவு நீர்க்க கலக்காதவாறு திட்டங்களைத் தீட்டி வைகை ஆற்றைக் காப்பாற்றலாம். நிகழ்காலங்களில் வாழ்பவர்கள் பொறுப்புக்களின்றி வாழ்வதனால், வருங்கால சந்ததிகள் (பிள்ளைகள், பேர பிள்ளைகள், கொள்ளு பேரன்கள் மற்றும் பேத்திகள், அவர்களின் வழித்தோன்றல்கள் இவர்கள் தானே வருங்கால சந்ததிகள்) பெரும் இடறல்களைச் சந்திக்க நேரிடும். எனவே, ஆறுகளின் அவல நிலைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் அல்லது நாமாகவே களத்தில் இறங்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X