India most corrupt nation in Asia, most Indians believe PM Modi is checking it | ஊழல் நாடுகள் பட்டியல் முதலிடத்தில் இந்தியா:ஆனால் மோடி அரசு ‛ஓகே' | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஊழல் நாடுகள் பட்டியல் முதலிடத்தில் இந்தியா:ஆனால் மோடி அரசு ‛ஓகே'

Updated : ஜூன் 07, 2017 | Added : ஜூன் 07, 2017 | கருத்துகள் (175)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மோடி, ஆசியா, ஊழல், இந்தியா, பிரதமர் மோடி, டிரான்பரன்சி இன்டர்நேசனல், கருத்துக்கணிப்பு, மோடி அரசு, Modi, Asia, Corruption, India, Prime minister modi, Survey, Modi government, Transparency International, Narendra modi

புதுடில்லி: ஆசிய கண்டத்தில் ஊழல் மலிந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழல் ஒழிப்பில் திறம்பட செயல்பட்டுவருவதாக இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் சர்வே நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரான்பரன்சி இன்டர்நேசனல் எனும் சர்வதேச அமைப்பு, ஆசிய கண்டத்தில் அதிக ஊழல் மலிந்துள்ள நாடுகள் குறித்த கருத்துக்கணிப்பை மக்கள் மற்றும் ஊழல் - ஆசிய பசிபிக் - குளோபல் ஊழல் பாரோமீட்டர் என்ற தலைப்பில் அறிக்கையாக வெளியிட்டது.
2015ம் ஆண்டு ஜூலை முதல் 2017ம் ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளில் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஊழல் பட்டியல்: ஆசிய அளவில் இந்தியா முதலிடம்

கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்பதனடிப்படையிலான கருத்துக்கணிப்பின்படி, ஊழல் பட்டியலில் இந்தியா (69 சதவீதம்) முதலிடத்திலும், ஜப்பான் (0.2 சதவீதம்) கடைசி இடத்திலும் உள்ளது.
இந்தியா ஊழல் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழல் ஒழிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு நேர்மாறாக, தென்கொரியா நாடு, ஊழல் பட்டியலில் பின்தங்கி இருந்தாலும், ஊழல் ஒழிப்பில் தங்கள் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்று அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (175)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Madurai,இந்தியா
11-ஜூன்-201714:21:50 IST Report Abuse
Mano ஆனால் மோடி அரசு ஓகே. கேவலமா இருக்கு .
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
11-ஜூன்-201712:05:43 IST Report Abuse
bal இது இந்திய ரத்தத்தில் ஊறிய ஒரு விஷயம். இதை மாற்ற ஓர் நடு நிலை மக்கள் ஜனநாயகம் வேண்டும் அல்லது ராணுவ ஆட்சி வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Cheran - Kongu seemai,இந்தியா
09-ஜூன்-201701:57:41 IST Report Abuse
Cheran மாப்பிளை அவர்தான் ஆனால் போட்டு இருக்குற சட்டை என்னுது அப்படி இருக்கு இந்த செய்தி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X