ஓபிஎஸ் பச்சைத் துரோகி: நாஞ்சில் சம்பத்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓபிஎஸ் பச்சைத் துரோகி: நாஞ்சில் சம்பத்

Added : ஜூன் 08, 2017 | கருத்துகள் (44)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நாஞ்சிலு் சம்பத், தினகரன், ஜெயக்குமார்

சென்னை: நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி: தினகரனுக்கு பெருகி வரும் செல்வாக்கு யாரும் எதிர்பாராதது. தமிழகத்திற்கு தலைமை தாங்கும் திறன் கொண்டவர் தினகரன். அனைத்து நிர்வாகிகளும், தினகரன் எங்களுக்கு தலைமை தாங்க வேண்டும் என கேட்கின்றனர். அதற்கான ஆற்றலும், திறமையும் அவரிடம் உள்ளது. கட்சி அவரது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. சந்தித்த எம்எல்ஏக்கள் மட்டுமல்லாமல், சந்திக்காதவர்கள் சிந்தனையிலும் தினகரன் தான் உள்ளார். கட்சிக்கு சிக்கல் வரக்கூடாது என்ற எண்ணத்தி்ல உள்ளார். தேர்தல் செலவு பற்றி பதவியில் உள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரியும். 2 மாதத்தில் தேர்தல் வரும் என மைத்ரேயன் சொல்வதும், சீக்கிரம் தேர்தல் வரும் என ஸ்டாலின் சொல்வதும் நடைபெற போவதில்லை. சட்டசபை எவ்வளவு ஆயுள் என மக்கள் தீர்மானித்துள்ளனரோ அதற்கு தினகரன் முயற்சி செய்வார். கட்சியையும், இரட்டை இலையையும் மீட்க தினகரன் முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற்று தரும்.ஓ.பி.எஸ்., பச்சை துரோகி. தினகரன் கட்சி அலுவலகம் செல்வதை பயன்படுத்தி சட்டரீதியாக பிரச்னை ஏற்படுத்துவார் என சந்தேகம். அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டது என்ற நிலை வந்துவிடக்கூடாது. ஜெயக்குமார் மட்டும் தான் எதிராக பேசுகிறார். அவர் நன்றி மறந்து பேசுகிறார்அமைச்சர்கள் யாரும் பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கவில்லை. யாரும் என சந்திக்க மாட்டார் என ஜெயக்குமார் கூறினார். 32 எம்.எல்.ஏ.,க்கள் வந்து சந்தித்துள்ளனர். அரசு கவிழ்ந்துவிடக்கூடாது என்பதில் அவர்களை காட்டிலும் நாங்களும் தீவிரமாக இருக்கிறோம்.ஓ.பி.எஸ்., தவறு செய்துவிட்டோம் என பிராய சித்தம் தேட முயற்சி செய்கிறார். அவர் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. தினகரன் நிலைப்பாடு தான் எனது நிலைப்பாடுஓ.பி.எஸ்., தரப்பு இரண்டு கோரிக்கைகள் நிறைவேறாது. இரண்டு அணிகளும் இணையாது. இவ்வாறு அவர் கூறினார்.ஓ.பி.எஸ்., பச்சை துரோகி: நாஞ்சில் சம்பத்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KKsamy - Jurong,சிங்கப்பூர்
09-ஜூன்-201700:08:44 IST Report Abuse
KKsamy ஒத்துகிறேன் நீ வைகோவிடம் நல்ல ட்ரைனிங் எடுத்திருக்க
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-ஜூன்-201719:05:00 IST Report Abuse
தமிழ்வேல் இது ஒன்னு, எரியிற கூரையில புடுங்குறது
Rate this:
Share this comment
Cancel
kmish - trichy,இந்தியா
08-ஜூன்-201718:48:12 IST Report Abuse
kmish ஐயோ இந்த ஆல் பேசுறத கேட்டா பயித்தியம் பேசுற மாதிரியே தெரியுது , எதோ இவன் சின்ன வயசுல இருந்து அதி.மு.க. ல இருக்குற மாதிரியே பேசுறேன் , யாரவது கேள்வி கேட்டா அதே கேள்வியை திரும்பி கேட்குறான் , ஹஹ்ஹ யாருக்காவது பொழுது போகலேன்னா இந்த ஆள் பதில் சொல்லுற பேட்டியை கேளுங்க ,உங்களால சிரிப்பை அடக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜூன்-201718:15:52 IST Report Abuse
Susil அட போயா , நீர் என்னமோ யோக்கியர் மாதிரி , துரோகம் என்ற வார்த்தையே நீதானே கருணாநிதி , வைகோ ஆகியோரிடம் விசாரித்தால் விடை கிடைக்கும் நீர் யார் என்று
Rate this:
Share this comment
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
08-ஜூன்-201717:32:29 IST Report Abuse
anbu ஓ பி எஸ் துரோகியாக நாமம் சூட்டப்பட்டு வேண்டுமென்றே சதி கும்பலால் வெளியேற்ற பட்டார்.ஆனால் நீயோ அம்மாவின் இடத்தில் இணையாக யாருமில்லை என்று ஓடிப்போனவன்.பிறகு சமையல்காரி பரவாயில்லை என்று நொண்டி சமாதானம் கூறி ஒண்ட வந்த பிடாரியே நீ ஊர் பிடாரியை பிடாரியை பற்றி பேசலாமா?இது நீ பேச வில்லை. இன்னோவா பேச வைக்குது.
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
08-ஜூன்-201716:37:24 IST Report Abuse
A shanmugam ஒருத்தரை ஒருத்தர் இப்படி திட்டிக் கொண்டு ஜெயாம்மா arumpaadu pattu maaperum majority yil amaitha anna thee moo kaa ஆட்சி கூடிய viraivil mugavari இல்லாமல் போக போகிறது.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-ஜூன்-201716:32:12 IST Report Abuse
Endrum Indian ஆத்தாவுக்கு ரொம்ப பிடிச்ச கலர் பச்சை பச்சையா இருக்கணும், அதுக்கு துரோகம் செய்வதால் பச்சை துரோகி. நாஞ்சில் இன்னோவா கார் திரும்ப கேட்கவில்லை அல்லவே உன்னிடமிருந்து, இவ்வளுவு பச்சை பச்சையாய் பேசறப்போ அது தான் தெரியுது. உப்பிட்டவரை (உப்பிவிட்டவரையும் கூடத்தான்) உள்ளளவும் (இருக்கிறவரை மட்டும் என்று கூட எடுத்துக்கொள்ளலாம், அதுக்கப்புறம் மறந்து விடு என்று அர்த்தம்) நினை .
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
08-ஜூன்-201716:29:50 IST Report Abuse
kowsik Rishi ஓ பி எஸ் சரியான அரசியல்வாதி என்றால் இவரும் அண்ணாதிமுகவை கைப்பற்ற பார்க்கிறார் ஏன் அந்த உரிமை சசிகலாவுக்கு டீ டீ வி தினகரனுக்கு ஏன் யாருக்கும் உள்ளது தொண்டர்கள் ஆதரிக்க வேண்டும் ஓ பி எஸ் கூட உள்ளவர்கள் யார் பி எச் பாண்டியன் கூட்டம் அப்பாவுடன் மு.கருணாநிதியுடன் கூட்டு சேர்ந்துகொண்டு செல்வி ஜேஜே ஜெ வின் சொத்து வழக்கை ஆதரித்து வழக்காடிவர் இவர் முனிசாமி, நத்தம் எல்லாம் கட்சிக்கு தொடர்ப்பு இல்லாதவர்கள் இப்போ மது சூதனன் பொண்ணுஸ்வாமி எங்கே ??? ஓ பி எஸ் தன் தவறை உணர்த்து கட்சிக்கு திரும்பட்டும் இல்லை என்றால் தனி கட்சி கண்டு இவர்க்கு உள்ள தொண்டர்கள் பலம் தெளிக்கட்டும் அதை விட்டு விட்டு டீ டீ வி சசிகலாவை இருக்க கூடாது என்று பேசு கோழை தன்மை தர்ம யுத்தம் என்று சொல்லும் ஓ பி எஸ் எங்கே சார் டீ டீ வி சசிகலாவை தான் நீங்கள் எதிர்த்து யுத்தம் செய்யவேண்டும் அவர்கள் இருக்கடூடாது என்று என்று சொல்வது சரியான அரசியல் அல்ல நீங்களும் தான் அண்ணாதிமுகவை கைப்பற்ற ஆசை படுகிறீர்கள் ஓன்று மட்டும் உறுதி இனி எம்.ஜி.ஆர். செல்வி ஜெ ஜெ என்ற ஆளுமை வரபோவதில்லை ஓ பி எஸ் அவர்களை போலெ ஒரு கிஞ்சித்தும் வரமாட்டார் கட்சியை ஆட்சியை கட்டுப்பாட்டில் எம்.ஜி.ஆர். செல்வி ஜேஜே வை போலெ வைத்து கொள்ளலாம் என்று கனவு வெறும் பகல் கனவு சார் ஓ பி எஸ் நீங்கள் எல்லாரும் ஒன்றாக இருந்தால் தான் கட்சி இல்லை என்றால் அண்ணாதிமுக்க உடைத்த கண்ணாடி ஒட்டிப்பார்த்தாலும் ஒரு முகம் கூட ஒழுங்காக தெரியாது சூட்சமத்தை புரிந்து கொண்டு ஓ பி எஸ், ஜெயக்குமார் முதல்வர் டீ டீ வி சசிகலா தொண்டர்கள் செயல்பட்டால் தமிழ் நாட்டில் உங்களுக்கு ஒரு கோட்டை இல்லை என்றால் நீங்கள் எல்லாரும் கோட்டை விட்டவர்கள் தான் மு.க. ஸ்டாலின் பி ஜெ பி உள்ளே நுழைத்து விட்டால் தமிழ் நாடு இனி ஒரு மாமாங்கம் அலைக்கழிக்கப்படும் வேண்டுமா இது ?????
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
08-ஜூன்-201716:24:05 IST Report Abuse
r.sundaram பேட்டரியில் இன்னும் சார்ஜ் தீரவில்லை, அது தீர்ந்தால் நார்மலாகி விடுவார். உப்பை தின்றதற்கு கொஞ்சமாவது செயல்பட வேண்டாமா?
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
08-ஜூன்-201716:21:00 IST Report Abuse
r.sundaram அப்போ சிவப்பு (ஆயிரம் ரூபாய் நோட்டின் நிறம்) துரோகி யார்? அவர்தானோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை