தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., பாராட்டு: சமூக வலைதளத்தில் வரவேற்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., பாராட்டு: சமூக வலைதளத்தில் வரவேற்பு

Updated : ஜூன் 11, 2017 | Added : ஜூன் 10, 2017 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தி.மு.க., அ.தி.மு.க., பாராட்டு, சமூக வலைதளம், வரவேற்பு, பழனிவேல் தியாகராஜன், பாண்டியராஜன், எம். எல்.ஏ.

தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜனுக்கு, அ.தி.மு.க., - பன்னீர் அணி எம்.எல்.ஏ., பாண்டியராஜன் பாராட்டு தெரிவித்தது, சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை மத்திய தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'நேர்மையுடன் அரசியல்; நேர்மையான அரசியல்வாதி' என்ற தலைப்பில், ஒரு கருத்தை பதிவு
செய்துள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது:
அரசியல் என்றாலே ஊழல், லஞ்சம் என ஆகிவிட்ட மோசமான சூழ்நிலையில், நான் அரசியலுக்கு வந்தேன். தேர்தலில் நிற்கும் போதே, என் தந்தையின் வழியில், 'ஓட்டுக்காக யாருக்கும், ஒரு ரூபாய் கூட, பணம் தர மாட்டேன். அதேபோல், என் மூலமாக பெறப்படும் உதவிகளுக்கு, யாரிடமிருந்தும் ஒரு ரூபாய் கூட, பணம் பெற மாட்டேன்' என்ற கொள்கையில் தான், ஓட்டுகளை கோரினேன்.
எம்.எல்.ஏ.,வாக செயல்பட்ட ஓராண்டில், வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பெரும்பாலானவர்களுக்கு அரசு உதவித் தொகைகளை பெற்று தந்துள்ளேன். தனிப்பட்ட முறையில், பள்ளி, கல்லுாரி சேர்க்கை, அரசு பணிகளுக்கான பரிந்துரை என, பலருக்கும் பல வகைகளில் செயலாற்றி உள்ளேன். நேர்மையான வழியில், பலர் பயனடைய உதவி அளித்தவர்களுக்கு, என் நன்றி.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
அவருக்கு பாராட்டு தெரிவித்து, பன்னீர் அணி எம்.எல்.ஏ., பாண்டியராஜன், 'டுவிட்' செய்தார். அதில், 'இதுபோல வெளிப்படையாக, சொல்ல முடிவதே போற்றுதலுக்குரியது. நண்பருக்கு வாழ்த்துகள்' என, குறிப்பிட்டிருந்தார்.அதற்கு பதில் அளித்த தியாகராஜன், 'கட்சிக்கு அப்பாற்பட்டு, பெருந்தன்மையோடு வாழ்த்து சொல்லியதற்கு நன்றி!' என, கூறியுள்ளார்.
இருவருக்கும், 'நெட்டிசன்கள்' பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya - Hyderabad,இந்தியா
12-ஜூன்-201710:32:44 IST Report Abuse
Sathya மிகவும் பண்பட்ட அரசியல்வாதிகள்.இத்தனை கொடுமைகளிலும் தமிழ்நாடு இன்னமும் sustain செய்வதற்கு இவர்களை போன்றவர்கள் காரணம்.
Rate this:
Share this comment
Cancel
11-ஜூன்-201723:31:59 IST Report Abuse
ChittoorRamanathanKrishnamurthy These two are well educated and highly qualified persoñs. One should have seen the India Today Southern Conclave held at Chennai recently in which both these gentlemen figured, to know their civility in discussions and deep knowledge on the subject. Their respective top leadership is not so gracious and these leaders should not be sidelined because of this magnanimity.
Rate this:
Share this comment
Cancel
murugu - paris,பிரான்ஸ்
11-ஜூன்-201720:08:32 IST Report Abuse
murugu இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ""விடி வெள்ளி ""யாக தெரிவீர்கள் என்பது உறுதி
Rate this:
Share this comment
Cancel
gmk1959 - chennai,இந்தியா
11-ஜூன்-201713:57:19 IST Report Abuse
gmk1959 கட்சி கொள்கைக்கு விரோதமான அண்ணல் கட்சியில் செல்வாக்குடைய தலைவர்கள் திமுகவில் நிறைய பேர்கள் உண்டு அவர்களை அனுசரித்து போனதால் தான் கலைஞர் தாக்கு பிடிக்க முடிந்தது
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
11-ஜூன்-201712:15:40 IST Report Abuse
Giridharan S முதலில் இவர்கள் இரண்டு பெரும் வேறு கட்சியில் இருந்து வந்தவங்களா பாருங்க
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
11-ஜூன்-201723:06:06 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்PT பழனிவேல் ராஜன் திமுக. இவருடைய மகன் தான் தியாகராஜன். இருவரும் ஊழலற்ற திமுகவினர். மதுரையின் பாராட்டுக்கு உரியவர்கள்....
Rate this:
Share this comment
Cancel
venkatesh -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜூன்-201711:14:42 IST Report Abuse
venkatesh Palaniappa vel Rajan thyagarajan is a highly qualified person who hails from a very resected family from madurai.though many of his adversaries moved from Dmk to Admk his father stood by his principles and did not change camps.now his worthy son is continuing the work his father has left.we need more people who put society before money.what a refreshing change.more youngsters should follow him and rid this society from the disease called corruption.i wish him all good luck to carry on the good work.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-ஜூன்-201708:47:08 IST Report Abuse
Srinivasan Kannaiya நல்லது செயதால் பாராட்டுவது... நல்ல அரசியல் நாகரீகம்தானே...
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
11-ஜூன்-201708:27:54 IST Report Abuse
Sridhar இந்த மாதிரியான ஆள் திமுகவில் எப்படி இருக்கமுடியும்? அக்னி குண்டத்துக்கு உள்ளே பனிக்கட்டி ரொம்பநேரம் தாக்குப்பிடிக்க முடியாது. இவர் அரசியல் செய்யாமல் உண்மையாகவே சேவை மனப்பான்மை கொண்டவராக இருப்பாரானால், அதற்க்கு ஒப்ப உள்ள கட்சியை தேடியிருப்பார், தேடவேண்டும்.
Rate this:
Share this comment
SARAVANAN G - TRICHY,இந்தியா
11-ஜூன்-201716:51:49 IST Report Abuse
SARAVANAN Gஅப்போ அவர் அதிமுக வில் தான் சேர வேண்டும் ......................
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
11-ஜூன்-201723:08:07 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்பாஜக வளர்ந்தது எப்படின்னு சொல்றார். நல்லவனுக்கு லஞ்சம் கொடுத்து கட்சியில் தஞ்சம் கொடுப்பார்கள். ஆகுக கொள்ளை அமைச்சர்களிடம் கண்டைனர் கொள்ளையடித்து விட்டு அமலாக்கத்துறை பிடியில் இருந்து கொஞ்சம் தஞ்சம் கொடுப்பார்கள்....
Rate this:
Share this comment
Cancel
ARUN - coimbatore,இந்தியா
11-ஜூன்-201708:08:41 IST Report Abuse
ARUN இவரது தந்தை PTR பழனி வேல் ராஜன் அவர்கள் சிறந்த ஆன்மீக வாதி. தி.மு.க.வின் கொள்கைகள் அவரை கட்டுப்படுத்த அவர் அனுமதித்தது இல்லை
Rate this:
Share this comment
syedabthayar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூன்-201715:37:29 IST Report Abuse
syedabthayarஇவரது தந்தை PTR பழனி வேல் ராஜன் அவர்களை தி மு க ( கலைஞர் ) சுதந்திரமாக செயல்பட அனுமதித்தது ....
Rate this:
Share this comment
Cancel
அன்பு - தஞ்சை,இந்தியா
11-ஜூன்-201708:07:56 IST Report Abuse
அன்பு இருவருக்குமே பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை