மத்திய அமைச்சர்கள் செயல்பாடு சாட்டையை சுழற்றுகிறார் பிரதமர் Dinamalar
பதிவு செய்த நாள் :
மத்திய அமைச்சர்கள் செயல்பாடு
சாட்டையை சுழற்றுகிறார் பிரதமர்

புதுடில்லி:மத்திய அரசு நிர்வாகத்தை வேகப் படுத்த நடவடிக்கை எடுத்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பார்வை யிட்டு அனுப்பிய கோப்புகளின் விபரங்களை அனுப்பி வைக்கும்படி, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 மத்திய,அமைச்சர்கள்,செயல்பாடு,சாட்டையை,சுழற்றுகிறார்,பிரதமர்

நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்றது முதல், மத்திய அமைச்சர்களின் செயல்பாடு களை கண்காணித்து, அரசு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அவர்களின் செயல் திறனை மதிப்பிட்டு, அமைச் சரவை பொறுப்புகளை மாற்றி வழங்கி வருகிறார். இந்நிலையில், ஜூலையில், ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடன், மத்திய அமைச்சரவையை மீண்டும் மாற்றியமைக்க,அவர் முடிவு செய்துள்ளார்.

அதற்கு முன், மத்திய அமைச்சர்களின் பணி மற்றும் செயல் திறனை கண்டறியும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர்கள் அனைவரும், தங்கள் துறை வசம் வந்து, அனுப்பப்பட்ட கோப்பு விபரங்களை கேட்டுள்ளார்.

மத்திய அரசு பதவியேற்ற, 2014 முதல், தற்போது வரை ஒவ்வொரு துறை வாரியாக வந்த, கோப்புகள், அதைபார்வையிட்டு திருப்பி அனுப்பிய நாள், பார்வையிட எடுத்துக் கொண்ட காலம், நிலுவை யில் வைக்கப்பட்ட கோப்புகள் என, அனைத்து விபரங்களையும் அனுப்பி வைக்கும்படி, மத்திய அமைச்சர்களுக்கு,பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், பொது மக்களிடம் இருந்து வந்த

Advertisement

கோரிக்கைகளை பரிசீலித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான விபரங்களையும் அனுப்பி வைக்க அறிவுறுத் தியுள்ளது.

ஏற்கனவே, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டு, அதன் பின், சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம், பிரதமர் அலுவலகம் விபரம் கோரியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Chennai,இந்தியா
12-ஜூன்-201723:02:01 IST Report Abuse

Karthikமுதலில் உங்களின் செயல்களை மூலம் செயல் திறனை மதிப்பிட்டு செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் போய் மற்றவர்களை .....

Rate this:
Jeya - Kanyakumari,இந்தியா
12-ஜூன்-201719:50:18 IST Report Abuse

JeyaKadavulidam mattum than namathu kurayai sollamudiyum. Avarthan kazhtathai theerkamudiyum

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
12-ஜூன்-201719:36:14 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranமூன்று வருடம் முடிந்துவிட்டது, இன்னும் இந்திய மக்கள் நிம்மதியாக சாப்பிட முடிகிறது, தூங்க முடிகிறது, அவர்கள் அங்கும் இங்கும் உலாவ முடிகிறது .10TH படித்தவர்களில் பெரும்பகுதியினர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதே போன்று +2 படித்த மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர், நாட்டில் பஸ் , ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. மோடி அரசு மக்களுக்கு செய்த நன்மைகளை பாரீர்

Rate this:
sankar - trichy,இந்தியா
12-ஜூன்-201720:47:21 IST Report Abuse

sankarகருணாவும் சோனியாவும் இருக்கும் பொது நிறைய ஊழல் செய்ய முடிந்தது இப்போ முடியல . அதான் பெரிய வித்யாசம் . மோடி அதை நிறை வெற்றி வைக்க வேண்டும்...

Rate this:
Basic Instinct - Coimbatore,இந்தியா
12-ஜூன்-201723:31:40 IST Report Abuse

Basic Instinctநல்ல வருவாய். வாழ்வாதாரம் உயர்ந்துவிட்டது. இந்த நிலை நீடித்தால் இந்தியர்கள் எல்லாம் லட்சாதிபதிகள். மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். சந்தோசத்தை விட என்ன வேண்டும். GDP கும், சந்தோஷத்திற்கும் சம்பந்தமில்லை...

Rate this:
yila - Nellai,இந்தியா
13-ஜூன்-201711:57:04 IST Report Abuse

yilaலோக் பால்கொண்டு வர தைரியம் இல்லாத கூட்டங்கள் ஊழல் இல்லை என்று கூவுது.........

Rate this:
மேலும் 101 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X