தேர்தல் கமிஷனில் குவியும் கட்டுகள்; கெடு முடிவதால் அ.தி.மு.க.,வினர் தீவிரம் Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
தீவிரம்!
தேர்தல் கமிஷனில் குவியும் கட்டுகள்;
கெடு முடிவதால் அ.தி.மு.க.,வினர் தீவிரம்

இரட்டை இலை சின்னம் தொடர்பான விவ காரத்தில், பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய, தேர்தல் கமிஷன் அளித்த கெடு, இந்த வார இறுதியில் முடிவடைவதால், சசிகலா அணி சார்பில், நேற்று மீண்டும் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 தேர்தல்,கமிஷன், குவியும், கட்டுகள்,கெடு,முடிவதால் அ.தி.மு.க.,வினர், தீவிரம்

இரட்டை இலை


இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக, கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது.

இதற்காக, சசிகலா அணியும், பன்னீர்செல்வம் அணியும், போட்டிபோட்டு ஆவணங்களை தாக்கல் செய்து வருகின்றன.
பிரமாணப் பத்திரங்கள் அடங்கிய காகித கட்டுகளை, லாரிகளில் ஏற்றி வந்து, தலைமை தேர்தல் கமிஷன் வரவேற்பறையில்,இரு அணிகளுமே,கொட்டி வைத்து விட்டு செல்கின்றன.இந்த தாக்கல் வைபவம், ஒவ்வொரு முறையும் முக்கிய பிரமுகர் ஒருவர் தலைமையில்நடக்கிறது.

பன்னீர்செல்வம் அணிக்கு மனோஜ் பாண்டியன் என்றால், சசிகலா அணிக்கு அமைச்சர், சி.வி.சண்முகம் வருகிறார்.இவர்கள் வரமுடியாத சில சமயங்களில், இந்த அணிகளைச் சார்ந்த வழக் கறிஞர்கள் வந்து, ஆவணங்களை இறக்கி வைத்து விட்டு செல்கின்றனர்.
அந்த வகையில், ஏற்கனவே கடந்த திங்களன்று வந்து ஆவணங்களை தாக்கல் செய்திருந்தாலும், நேற்று மீண்டும் சசிகலா அணி சார்பில், 47 ஆயிரத்து, 151 ஆவண கட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன.

Advertisement


கடும் போட்டி:


கடந்த மார்ச், 20ல் துவங்கிய இந்த ஆவண தாக்கல் வைபவங்கள், தொடர் கதையாகி வருகின்றன. வரும் 16ம் தேதியுடன் தேர்தல் கமிஷன் விதித்திருந்த காலக்கெடு முடிவடை கிறது. அதற்குள், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துவிட வேண்டுமென்பதால், தேர்தல் கமிஷனுக்கு லாரி பிடிப்பதில், இரு அணிகளிலும் கடுமையான போட்டி நிலவுகிறது.
- நமது டில்லி நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
15-ஜூன்-201717:11:11 IST Report Abuse

Endrum Indianதேர்தல் கமிஷன் கடைசியில் இப்படித்தான் செய்யும் இவ்வளவு கட்டுக்களை பார்த்தால். ரெண்டையும் எடை போடும், எடையில் யார் இன்னொருவரை விட 10 % அதிகமோ அவர்கள் தான் அ.தி.மு.க. ஒரிஜினல் என்று அறிவித்து அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும். இதையெல்லாம் ஒருத்தன் படிச்சி பார்க்கணுமென்றால் குறைந்தது 12 வருடம் ஆகும், அதெல்லாம் டைம் வேஸ்ட்.

Rate this:
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
15-ஜூன்-201710:06:22 IST Report Abuse

Ramaswamy Sundaramஹாஹாஹா...இந்த ஆவணங்கள் எல்லாத்தையும் தேர்தல் ஆணையம் பிரிக்கிறதுக்கே மாச கணக்காகும்...அப்புறம் எங்க படிக்கிறது? மொத்தத்தில் தேர்தல் ஆணையம் ஒரு காமெடி பீஸ் ஆகி கொண்டு வருகிறது....ஏற்கனவே இந்த பெருமைக்கு உச்ச நீதிமன்றத்தை உட்படுத்தினார் தாளித்து நீதி அரசர் கொடைவள்ளல் கர்ணன்....நடக்கட்டும்

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
15-ஜூன்-201701:51:31 IST Report Abuse

ramasamy naickenஎப்படியும் அவர்கள் இதை பிரித்து படித்து பார்க்க போவதில்லை. எல்லாம் எடைக்கு, எடைதான். வரும் காசில் பாவ் பாஜி வாங்கி சாப்பிட போகிறார்கள்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement