தனியார் பள்ளிக்கு சவால் விடும் அரசு பள்ளி: நவீன தொழிற்நுட்பத்தில் கற்பித்தல் பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளிக்கு சவால் விடும் அரசு பள்ளி: நவீன தொழிற்நுட்பத்தில் கற்பித்தல் பணி

Added : ஜூன் 15, 2017 | கருத்துகள் (15)
Advertisement
சேலம்,  அரசு பள்ளி, தனியார் பள்ளி,  ஆசிரியர்கள், மாணவர்கள், மாரியம்மன் கோவில்,  நடுநிலைப் பள்ளி ,Selam, Government School, Private School, Teachers, Students, Marriamman kovil, Middle School

சேலம்: சேலம் மாவட்டத்தில் இயங்கும் அரசு பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டம், கந்தம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இட பற்றாக்குறை காரணமாக, மாரியம்மன் கோவிலிலும், மரத்தடியிலும் பள்ளி நடந்து வந்தது.
தலைமையாசிரியர், ஆசிரியர்கள் முயற்சியால், இன்று, மூன்று மாடிகளுடன் தொடுதிரை பலகை, கணினி வழிக்கல்வி, 4டி அனிமேஷன் என, நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி, கற்பித்தலில் புதுமை படைத்து வருகிறது.

கடந்த, 1926ல், மிகச் சிறிய இடத்தில் துவங்கப்பட்ட இப்பள்ளி, 2004ல், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தனியார் பள்ளிகளின் மோகத்தால், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தது. இதை மாற்ற என்ன செய்யலாம் என, யோசித்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம், முக நுால் நண்பர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவி மூலம், பள்ளியை தரம் உயர்த்த முயற்சி எடுத்தனர்.

இதன்படி, மாணவ, மாணவியருக்கு தனித்தனியே நவீன கழிப்பறைகள், மாணவியருக்கு நாப்கின் எரியூட்டும் இயந்திரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆழ்துளை கிணறு, ஒவ்வொரு வகுப்பிலும், பாடம் தொடர்பான வண்ண ஓவியங்கள், அனைத்து மாணவர்களுக்கும் இருக்கை வசதி, யு.பி.எஸ்., வசதியுடன் கூடிய கணினி அறை.ஹோம் தியேட்டர், புரொஜக்டருடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ், தொடுதிரை பலகை, நவீன அறிவியல் ஆய்வகம், நுாலகம், மாடித்தோட்டம், 4டி அனிமேஷன் கல்வி, இங்கிலாந்தில் உள்ள ஆசிரியர்களுடன் இணையம் வழியே ஆங்கிலம் மற்றும் கணிதம் கற்பிக்கப்படுகிறது.


பள்ளி தலைமை ஆசிரியை சுபலஷ்மி கூறியதாவது:


உள்கட்டமைப்பு வசதிகளை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்தியதால், மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. ஆசிரியர்கள், வீடு வீடாக சென்று, உள்கட்டமைப்பு வசதி பற்றி தெரிவிக்கின்றனர். மாணவர்களின் திறனை கண்டு, சிறந்த அரசு பள்ளியாக அறிவிக்கப்பட்டு
உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
annaidhesam - karur,இந்தியா
16-ஜூன்-201708:25:16 IST Report Abuse
annaidhesam வாழ்த்துக்கள்..இது போன்று ஒரு சில அதிசயங்கள் இன்னும் நடந்து கொண்டு இருப்பது ..நேர்மையும் கடமை உணர்வும் உள்ளவர்கள் இருப்பதுற்கு சாட்சி..
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
15-ஜூன்-201718:31:44 IST Report Abuse
Gopi பாலைவனத்தில் ஒரு சோலைவனம். வெறும் பாத்திரம் என்று தூக்கி போட்டவர்கள் இதை அட்சய பாத்திரம் என்ற அறிய மறந்துவிட்டனர். என்று அரசு பள்ளி கல்லூரி மருத்துவமனை போக்குவரத்தை தேடி அனைத்து மக்களும் செல்கின்றனரோ அன்றே இந்தியா உயர்ந்து ஒளிரும்
Rate this:
Share this comment
Cancel
இராஜேஷ்MA,D.YogaSc,D.co-op,CLIS,CJA தமிழகத்தின் மற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு இப்பள்ளியின் சீரிய சிந்தனையை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இதை போல் முன்னேற்றத்தை ஏற்படுத்தட்டும். நன்றி...
Rate this:
Share this comment
Cancel
Gideon Jebamani - Yonkers,யூ.எஸ்.ஏ
15-ஜூன்-201713:45:29 IST Report Abuse
Gideon Jebamani What this school Principal and their team of staff attempting is a remarkable one. Of course it is a long way to go for freedom.
Rate this:
Share this comment
Cancel
karthi -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூன்-201713:35:40 IST Report Abuse
karthi great achievement... congrats
Rate this:
Share this comment
Cancel
Rohini karthik - Chennai,இந்தியா
15-ஜூன்-201713:34:56 IST Report Abuse
Rohini karthik The best inspiration and example...
Rate this:
Share this comment
Cancel
Ashok - Trichy,இந்தியா
15-ஜூன்-201712:36:05 IST Report Abuse
Ashok இதற்கெல்லாம் விருது கொடுக்காமல் இருந்தால் எப்படி? மிக பெரிய பாராட்டு விழா நடத்தி இவர்களுக்கு மிக பெரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும். வேலை செய்யாத ஜென்மங்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
15-ஜூன்-201712:24:06 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் தன்னார்வத்தின் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள். அதே நேரம் இதையெல்லாம் செய்யவேண்டிய அரசு இந்த திராவிட கட்சிகளின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பது வருத்தம் அளிக்கிறது. மருத்துவர் அன்புமணி சொன்னது போல கல்வியும் , மருத்துவமும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும், அது இனிமேல் வியாபாரமாக இருக்கக்கூடாது. வரியை சரியாக வசூலித்து , இயற்கை வளத்தை அரசே நேரிடையாக விற்று (மணல் , நிலக்கரி , கிரானைட் போன்றவை ) கஜானாவில் சேர்த்தால் இந்த திட்டம் அனைத்து பள்ளிகளிலும் சாத்தியமே.
Rate this:
Share this comment
Cancel
nanban - mumbai,இந்தியா
15-ஜூன்-201711:22:26 IST Report Abuse
nanban வாழ்க,வெல்க
Rate this:
Share this comment
Cancel
15-ஜூன்-201710:53:39 IST Report Abuse
BharathKumarS Great work teachers... let it be the example for other government schools in all over tamil nadu..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை