மொழி தடையை நீக்கும் கருவி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மொழி தடையை நீக்கும் கருவி!

Added : ஜூன் 15, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மொழி தடையை நீக்கும் கருவி!

எந்த மொழியிலிருந்தும், வேறு எந்த மொழிக்கும் மொழிபெயர்க்கக்கூடிய கருவிகள், அறிவியல் புனை கதைகளில் மட்டுமே வரக்கூடியவையாக இருந்தன. அதாவது, அண்மைக்காலம் வரை! ஆஸ்திரேலியாவை சேர்ந்த 'லிங்மோ' வரும் ஜூலையில், 'டிரான்ஸ்லேட் ஒன் டு ஒன்' என்ற கருவியை சந்தைக்கு கொண்டு வர உள்ளது. ஐ.பி.எம்., வாட்சனின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்கும் இந்த கருவியை, காதில் அணிந்துகொள்ளலாம். 'வை பை' மூலம் இயங்குவதால் இந்த கருவிக்கு மின் கம்பிகள் தேவையில்லை. லிங்மோ கருவிக்குள் செயற்கை நுண்ணறிவு மூலம் மொழிபெயர்ப்பு நடப்பதால், அதை அணிந்தவருக்கு முன் நின்று, ஒருவர் புரியாத மொழியில் பேசினால், உடனுக்குடன் அவருக்கு அந்த பேச்சின் மொழிபெயர்ப்பு காதில் ஒலிக்கும். தற்போதைக்கு மாண்டரின், ஜப்பான், பிரஞ்சு, இத்தாலி, ஜெர்மன், போர்சுகீசு, ஆங்கிலம் மற்றும் ஸ்பெயின் ஆகிய எட்டு மொழிகளில், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மொழிபெயர்க்கும் திறனைக் கொண்டுள்ளது, 'ஒன் டு ஒன்' கருவி; இதன் விலை, 11 ஆயிரத்து 500 முதல், 14 ஆயிரத்து 500 ரூபாய் வரை இருக்கும். இரு வேறு மொழிகளைப் பேசுபவர்கள் இந்த கருவிகளை அணிந்து கொண்டால், மொழித் தடைகள் இன்றி, உடையாட முடியும். கூகுளின் டிரான்ஸ்லேட் சேவை, ஸ்கைப்பின் மொழிபெயர்ப்பு சேவை ஆகியவற்றின் துல்லியம் வெகுவாக கூடியிருக்கிறது. என்றாலும், எங்கும் எடுத்துச் செல்லும் மொழிபெயர்ப்புக் கருவிக்கு தேவை இருப்பதாகச் சொல்கிறது லிங்மோ!

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
15-ஜூன்-201716:10:04 IST Report Abuse
Syed Syed கிரேட். பாராட்டுகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை