கை கழுவுதலின் பின்னால் உள்ள உளவியல்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கை கழுவுதலின் பின்னால் உள்ள உளவியல்

Added : ஜூன் 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கை கழுவுதலின் பின்னால் உள்ள உளவியல்

பல கலாசாரங்களில், ஒரு நடத்தை, சிந்தனை அல்லது செய்கையை விட்டுவிட்டு புதிய ஒன்றுக்கு மாறுவதை, 'கை கழுவுதல்' என்று சொல்கின்றனர்.
இது, உண்மையிலேயே பலனளிக்குமா என்று கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சோதித்துப் பார்த்தனர்.
ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது போன்ற ஒரு குறிப்பிட்ட குறிக்கோளைப் பற்றி சிலரை சிந்திக்க வைத்தனர் ஆராய்ச்சியாளர்கள். பிறகு, அவர்களில் சிலருக்கு ஈரக் காகித நாப்கினைத் தந்து கைகளை துடைக்கச் செய்தனர். சிலர் மட்டும், அந்த நாப்கினை சும்மா பார்த்தால் போதும் என்றனர். அதன் பின், ஆரோக்கியமான பண்டத்தையும், ஆரோக்கியத்துக்கு எதிரான பண்டத்தையும் தந்தனர். கையைத் துடைத்தவர்கள் ஆரோக்கியம் பற்றிய சிந்தனையை மறந்துவிட்டு, சாக்லேட் போன்றவற்றையே தேர்ந்தெடுத்தனர். கையைத் துடைக்காதவர்கள், இன்னும் ஆரோக்கியமான சிந்தனையோடே இருந்ததால், சாக்லேட்டை தவிர்த்தனர். இதனால், பழைய அனுபவம், சிந்தனை, செய்கையை உதறிவிட்டு புதிய குறிக்கோளை நோக்கித் திரும்பவேண்டும் என்றால் கைகளை கழுவுவது உதவலாம் என, 'ஜர்னல் ஆப் எக்ஸ்பெரிமென்டல் சைக்காலஜி: ஜெனரல்' இதழில் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை