ஆராய்ச்சி மலர்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஆராய்ச்சி மலர்

Added : ஜூன் 15, 2017
Advertisement
ஆராய்ச்சி மலர்

இணையத்தில் அடையாளத் திருட்டும், அதன் மூலம் ஏற்படும் இழப்பும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க, இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வழியை உருவாக்கியுள்ளனர். ஒரு நபரின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்விகளுடன், அவர் கணினியின் மவுசை நகர்த்தும் பாணியையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது அந்த புதிய முறை. இந்த இரு தகவல்களை வைத்து, ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் உதவியுடன், அடையாளத் திருடர் யார் என்பதை 95 சதவீதம் துல்லியமாக கண்டுபிடிக்கலாம் என்று, 'பிலாஸ் ஒன்' இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவித்துள்ளது.

***

மனித உடலில் பெரிய உறுப்பும், சிக்கலானதுமானது கல்லீரல். அதை புரிந்துகொள்ள தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன. 'செல்' என்ற ஆய்விதழில் அண்மையில் வெளியான கட்டுரை ஒன்று, மனிதனின் கல்லீரல் தினமும் வளர்ந்து, பின், 40 சதவீதம் வரை சுருங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சியும் சுருக்கமும் 24 மணி நேரத்திற்குள் நடப்பது மிகப் பெரிய ஆச்சரியமில்லையா?

***

உலகின் மொத்த மக்கள் தொகையில், 10 சதவீதத்தை பீடித்திருக்கும் உடல் குறைபாடு எது? உடல் பருமன் தான். 'நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின்' இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் படி, உலகில், 2 பில்லியன் பேருக்குமேல் அதிக உடல் எடை அல்லது பருமன் நோய்க்கு ஆளாகியுள்ளனர். கடந்த, 25 ஆண்டுகளில், 195 நாடுகளில் உள்ள மக்களின் உடல் நல புள்ளிவிபரங்களை வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

***

தேர்வு பற்றிய பதற்றமும் பயமும் மாணவர்களை பாடாய்படுத்துகிறது. இதை குறைக்க சமூக ஊடகங்கள் உதவக்கூடும் என, அமெரிக்காவிலுள்ள இல்லினாய் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தேர்வு பயம் இருப்பதாக ஒப்புக்கொண்ட மாணவர்கள், அதை தங்களது சமூக வலைதளத்தில் தெரிவித்தனர். அவர்கள், 'எனக்கு உதவுங்களேன்' என்று கோரி, சமூக வலைதள வாசிகளின் அறிவுரைகளையும் ஆறுதலையும் பெற்றனர். இதனால் தங்கள் தேர்வு பயம் குறைந்ததாகவும், பயந்த மாணவர்கள், தேர்தல் பயம் அதிகமில்லாத மாணவர்களுக்கு இணையாக தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றதாகவும் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை