வரைய தெரியாதவர்களுக்கு கூகுளின் உதவி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வரைய தெரியாதவர்களுக்கு கூகுளின் உதவி!

Added : ஜூன் 15, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வரைய தெரியாதவர்களுக்கு கூகுளின் உதவி!

சில மாதங்களுக்கு முன், கூகுள், ஒரு விளையாட்டு இணையதளத்தை துவங்கியது. 'குயிக் ட்ரா' என்ற அந்த தளத்தில், எவரும், கோட்டோவியங்களை வரையலாம். அந்தத் தளத்தை இயக்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள், ஒரு பொருளின் பெயரை அறிவிக்கும். உடனே சில வினாடிகளில் அதை கோட்டோவியமாக நீங்கள் வரைய வேண்டும். அது எப்படி இருந்தது என்பதை, கூகுளின் புத்திசாலி மென்பொருள் மதிப்பிடும்.பல லட்சம் பேர் பங்கேற்று வரும் அந்த தளத்தின் தகவல்களை வைத்து, அண்மையில், 'ஆட்டோ ட்ரா' என்ற தளத்தை துவங்கியிருக்கிறது. இதில், நீங்கள் ஒரு பொருளை வரைய வரைய, அந்தத் தளத்தின் மேல் பகுதி, 'மெனு'வில், ''நீங்கள் வரைந்துகொண்டிருப்பது இதுவா?'' என்று நீங்கள் வரையும் பொருளை ஒத்த பல படங்களை காட்டும். அதில் சரியானதை நீங்கள் தேர்ந்தெடுத்ததும், நீங்கள் வரைந்த கோட்டோவியத்துக்குப் பக்கத்தில், அதைவிட அசத்தலான ஓவியம் வந்துவிடும். இதை வீட்டுப்பாடம், அலுவலக அறிக்கை போன்ற எதற்கும் எடுத்துப் பயன்படுத்தலாம். வரையத் தெரியாதவர்களுக்கான தளம் இது என்று கூகுளே விளம்பரப்படுத்தி வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashok Kumar.c - Melmalaiyanur,இந்தியா
16-ஜூன்-201715:42:24 IST Report Abuse
Ashok Kumar.c நல்ல விஷயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை