நதிகளால் தான் கடல்கள் வற்றாமல் இருக்கின்றன. அதே போல, நதிகள் மூலம்தான் கடலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் போய் சேருகின்றன. ஆண்டுதோறும் 1.15 மில்லியன் முதல், 2.41 மில்லியன் டன் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பை கடலில் கலப்பதாக, 'நேச்சர்' இதழ் தெரிவிக்கிறது. மேலும், உலகமெங்கும் கடந்த ஆண்டு அதிகளவிற்கு கடலில் குப்பையை கலந்த, 20 பெரு நதிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது நேச்சர். அப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே நதி கங்கை. சீனாவின் ஐந்து பெரு நதிகள் கடலை மாசுபடுத்துவதில் முன்னணி வகிக்கின்றன.