வீட்டு வசதித்துறை அறிவிப்புகள் அதிகாரிகளின் தில்லாலங்கடி வேலை Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தில்லாலங்கடி
வீட்டு வசதித்துறை அறிவிப்புகள்
அதிகாரிகளின் தில்லாலங்கடி வேலை

மத்திய அரசின் மானிய உதவி திட்டங்களை, தமிழக அரசின் புதிய அறிவிப்புகளாக வெளியிட, அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டுவசதித்துறை,அறிவிப்புகள்,அதிகாரி, தில்லாலங்கடி வேலை

நடப்பு நிதி ஆண்டுக்கான, தமிழக அரசின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், சட்டசபையில் துவங்கி உள்ளது. இதற்காக, துறைவாரியாக அறிவிக்க வேண்டிய, புதிய திட்டங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.வீட்டு வசதி துறைக்கான புதிய அறிவிப்புகள் பட்டியலை, வீட்டு வசதி வாரியம்

மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.
இதில், மத்திய அரசு செயல்படுத்தி வரும், அனை வருக்கும் வீடு திட்டங்களில், நடப்பு நிதி ஆண்டில், எத்தனைபேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்; எந்த பிரிவில், எத்தனை குடும்பங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்ற குறிப்புகள் எல்லாம், அறிவிப்பு களாக சேர்க்கப்பட்டுள்ளன.இந்த பட்டியல், அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மத்திய அரசு திட்டங்களை, தமிழக அரசின் புதிய திட்டங் கள் போன்று அறிவிப்பாக வெளியிட அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சர்ச்சைஎன்ன

''வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், தங்கள் புதிய திட்டங்கள் குறித்த பரிந்துரைகளை அளிக்காமல், மத்திய அர சின் திட்டத்தை செயல்படுத்தும் விதத்தை அறிவிப்புகளாக அளித்துள்ளனர். மத்திய

Advertisement

அரசின் திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்பதால், அந்த விபரங்களை, கொள்கை விளக்க குறிப்பில் சேர்க்கலாம். புதிய அறிவிப்பு களாக வெளியிட்டால், தமிழகத்தில், திட்டங் களே இல்லையா என்ற கேள்வி எழும். எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி களிடம் பேசி வருகிறோம்.
-வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி. - நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dselva -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201710:34:35 IST Report Abuse

dselvaThe central government is full powers and enjoying state contribution of taxes but it announces tobakkoor schemes like swah ha oh hfa amrut smart city but in all schemes the government of india contribution is meger only for swach bharat mission it is 20%to 30% in housing for all it is only about 30% of total cost in smart city it is only about 50% nowadays all states under big financial crisis due to various reasons low income state wefare schemes to poor etc with lesser contribution the govt is makking dam dam to peoples worst policy

Rate this:
Kallanai - KALIKADU,இந்தியா
16-ஜூன்-201712:48:16 IST Report Abuse

Kallanaiஇரண்டு வீடுகளுக்குமேல் வைத்திருக்கும் அனைவரிடமும் கூடுதல் வீடுகளை பறிமுதல் செய்து இல்லாதவர்களுக்கு கொடுத்தால் அனைவருக்கும் வீடு சாத்தியமே

Rate this:
Kallanai - KALIKADU,இந்தியா
16-ஜூன்-201712:44:45 IST Report Abuse

Kallanaiஅனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் மத்தியஅரசு மற்றும் மாநில அரசு இரண்டுமே நிதி வழங்கவேண்டும் இதுவரை தமிழ்நாடு முழுவதும் இரண்டரை லட்சம் பேர் பொது இ சேவை மூலம் விண்ணப்பித்துள்ளார்கள் இவை அனைத்திற்கும் திட்டம் உள்ளதா எவ்வளவு இடம் தேர்வாகி உள்ளது அவை மாவட்டம் வாரியாக எவ்வளவு மாநில நிதி எவ்வளவு மத்திய நிதி எவ்வளவு என்பதை தெளிவுபத்தவேண்டும்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஜூன்-201708:56:38 IST Report Abuse

Srinivasan Kannaiyaநம்ம திராவிடர்கள் நீரில் வெண்ணை எடுக்கும் திறமை வாய்ந்தவர்கள்... அடுத்தவன் பிள்ளையை தன் பிள்ளை என்று சொல்லுவதில் திறமைசாலிகள்..

Rate this:
Muthusamy Thiagarajan - Coimbatore,இந்தியா
16-ஜூன்-201708:16:46 IST Report Abuse

Muthusamy ThiagarajanWith this term the AIADMK mafia gang dynasty will come to an ,dead .That is the birth of a new Dawn in TN politics.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-ஜூன்-201708:16:20 IST Report Abuse

Kasimani Baskaranசரக்கில்லாத காரணத்தால் "மத்திய அரசு திட்டங்களை, தமிழக அரசின் புதிய திட்டங் கள் போன்று அறிவிப்பாக வெளியிட அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளது" என்று இருக்கவேண்டும்...

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
16-ஜூன்-201707:07:10 IST Report Abuse

தேச நேசன் அரசே வீடுகட்டித்தருவது போன்ற ஆபத்தான திட்டங்கள் தான் நம்மை கடும் சிக்கல்களுக்குள்ளாக்கி விட்டுள்ளன எல்லோர்க்கும் அரசே வீடுகட்டித்தருவது என்பது கனவில்கூட நடக்காத விஷயம் ஒரு சிலருக்கு மட்டும் அரசு வீடுகள் என்பது எப்படி சமத்துவத்தை உருவாக்கும்? இதில் பலனடைந்தது வாரிய ஊழியர்களும் கட்சிக்காரர்களும் மட்டுமே

Rate this:
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
16-ஜூன்-201706:27:01 IST Report Abuse

சந்தோசு கோபுசொந்தமா செய்த திட்டங்களை சொல்லிக் காட்ட வக்கில்லாத 'அதிமுக என்னும் மாஃபியா இயக்க' அரசாங்க எப்பவுமே இப்படி தான் மற்றவங்க திட்டங்களை திருடி தங்கள் சாதனையா சொல்லி கொள்ளும்.. பணம், திட்ட நிதிகளை மட்டுமில்லை திட்டங்களை கூட திருடும் கட்சி வெத்துவேட்டு அதிமுக..

Rate this:
Giridharan S - Kancheepuram,இந்தியா
16-ஜூன்-201706:15:56 IST Report Abuse

Giridharan Sகல்வி துறையில் கூடத்தான் பல விதமான அறிவிப்புகள் வெளியிடுவார் கல்வி அமைச்சர்னு உங்க பேப்பர்ல கூட போடீங்க அதில் எது வந்தது வீடு வசதி மான்ய கோரிக்கை நடக்கும்போது அறிவிப்புகள் வரட்டும் அப்புறம் பார்க்கலாம்

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
16-ஜூன்-201701:00:03 IST Report Abuse

ramasamy naickenதமிழகத்தில் நீர்நிலைகளை நாசம் பண்ணியதே இந்த வீடு வசதி துறையும், குடிசை மாற்று வாரியமும்தான். காலத்திற்கு ஏற்ப இவை இரண்டையும் உடனே கலைத்து விடுவதுதான் நல்லது.

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement