அண்ணா நூலக அரசியலுக்கு முற்றுப்புள்ளி; ஏழு ஆண்டுக்கு பின் நிதி ஒதுக்கி அங்கீகாரம் Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அங்கீகாரம்!
அண்ணா நூலக அரசியலுக்கு முற்றுப்புள்ளி;
ஏழு ஆண்டுக்கு பின் நிதி ஒதுக்கி அங்கீகாரம்

அரசியல் ரீதியாக அண்ணா நுாலகத்தை புறக்கணித்து வந்தஅரசு, 7 ஆண்டுகளுக்கு பின், அந்த நுாலகத்துக்கு நிதி ஒதுக்கி, அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அண்ணா நூலக,அரசியல்,முற்றுப்புள்ளி,ஏழுஆண்டுக்கு,பின் நிதி ஒதுக்கீடு, அங்கீகாரம்

சென்னை, கோட்டூர்புரத்தில், 3.48 லட்சம் சதுர அடி பரப்பில், 178 கோடி ரூபாய் செலவில், அண்ணா நுாற்றாண்டு நுாலகம் கட்டப்பட்டு, 2010ல், தி.மு.க., ஆட்சியில் திறக்கப்பட்டது.

பின், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த நிலையில், நுாலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற, அப்போதைய

முதல்வர், ஜெயலலிதா முடிவு செய்தார்.அதற்கு நீதிமன்றம் தடை விதித்ததால், நுாலகம் தொடர்ந்து செயல்பட்டது.

ஆனாலும், சரியாக பராமரிக்கப்படாமலும், புத்தகங் கள் வாங்கப்படா மலும், புறக்கணிக்கப்பட்டு வந்தது. இது குறித்து, நமது நாளிதழில், விரிவாக செய்திகள் வெளியா கின. சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கும் தாக்கலானது.

பின், உயர் நீதிமன்ற உத்தரவுபடி, நுாலக பராமரிப்பு பணிகள் துவங்கின. ஆனாலும், தமிழக அரசின் கொள்கை விளக்க புத்தகத்திலும், பட்ஜெட்டி லும், அண்ணா நுாலகத்தின் பெயர் எங்கும் இடம் பெற வில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம், சட்ட சபையில் வெளியான அரசின் கொள்கை விளக்க புத்தகத்தில், அண்ணா நுாலகம் குறித்த தகவல்கள், வண்ண படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

மேலும், அமைச்சரின், 37 அறிவிப்புகளில், அண்ணா நுாலகத்திற்கு புத்தகங்கள் வாங்க,ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது, ஏழு ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என, நுாலக வாசகர்கள், ஊழியர் கள் தெரிவித்தனர். இதன் மூலம், ஜெ., ஆட்சி யில் துவங்கிய, அண்ணா நுாலக அரசியலுக்கு, பழனிசாமி ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-ஜூன்-201715:26:53 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்ஐந்து கோடி.. ஏழாண்டுக்கு பிறகு.. வெள்ளையடிக்க கூட பணம் பத்துமா தெரியாது.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-ஜூன்-201709:58:24 IST Report Abuse

Kasimani Baskaranநல்லது....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement