ஜெ., உருவபடம் திறக்க மோடி வருவாரா? | சட்டசபையில் ஜெ., உருவப்படம் திறக்க பிரதமர் மோடி வருவாரா? Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வருவாரா?
சட்டசபையில் ஜெ., உருவப்படம் திறக்க
பிரதமர் மோடி வருவாரா?

முதல்வரின் கோரிக்கையை ஏற்று, சட்டசபை யில், ஜெயலலிதா உருவப் படத்தை திறந்து வைக்க, பிரதமர் மோடி வருவது, ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பொறுத்து அமையும் என, பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.

 சட்டசபையில்,ஜெ., உருவப்படம்,திறக்க,பிரதமர்,மோடி,வருவாரா?

முதல்வர் அழைப்பு


டில்லியில், பிரதமர் மோடியை, மே, 25ல், சந்தித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்திற்கு தேவையான நிதி ஆதாரங்கள் கோரி மனு அளித்தார்.

அப்போது, சட்டசபையில், முன்னாள் முதல்வர் ஜெ., உருவப்படத்தை திறக்க வரும் படி அழைப்பு விடுத்தார். 'தன் கோரிக்கையை, பிரதமர் ஏற்றுள்ளார்; ஜூலையில், விழா

நடத்தப்படும்' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இது குறித்து, தமிழகபா.ஜ.,
பிரமுகர்கள்
கூறிய தாவது:

ஜனாதிபதி தேர்தலில், அ.தி.மு.க., வின் ஆதரவை, கட்சி மேலிடம் கோரியுள்ளது. அதற்கு, மூன்று அணியாக பிளவு பட்டுள்ள, அ.தி. மு.க., இன்னும் பதில் கூறவில்லை.தமிழக சட்ட சபை கூட்டத் தொடர், ஜூலை, 19ல், நிறைவடைகிறது. ஜூலை, 17ல், ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப் பதி வும், 20ல், ஓட்டு எண்ணிக்கையும் நடக்க உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில், அ.தி.மு.க.,வின் முடிவை பொறுத்தே, ஜெ., படத்திறப்பில், பிரதமர் பங்கேற்பது குறித்து மேலிடம் முடிவு செய்யும்.மேலும், சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால், தண் டனை விதிக்கப்பட்டவர் என்பதால், ஜெ., உருவப் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க, தி.மு.க., கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர் பாக, சபாநாயகருக்கு கடிதம் எழுதிய தோடு, சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளது. விமர்சனங்களையும், சீர் துாக்கி பார்க்க வேண்டியுள்ள தால், இதில் முடிவு எடுக்க தாமதமாகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க., நம்பிக்கை:சட்டசபை கூட்டத்தொடர்,

Advertisement

ஜூலை, 17ல் முடிகிறது.சில வாரங்கள் கழித்து, கூட்டம் முடிந்ததற் கான அறிவிப்பை, கவர்னர் வெளியிடுவார்.இடையே, ஜெ., உருவ படத்தை திறக்க, பிரதமர் வருவதாக இருந்தால், சபையை கூட்டும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது.

சட்டசபையில் உள்ள தலைவர்களின் உருவப் படங்கள் வரிசையில், ஜெ., உருவப் படம் இடம் பெறுமா என்பது, பிரதமர் மோடி யின் கையில் உள்ளது. ஜெ.,யின் உற்ற நண்பர் என்பதால், பிரதமர் பங்கேற்பார் என, அ.தி.மு.க., வினர் நம்பிக்கையில் உள்ளனர்.

-- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Palanivelu - Toronto,கனடா
18-ஜூன்-201720:21:44 IST Report Abuse

K.Palaniveluஅப்பழுக்கில்லாத நேர்மையாளராக, எந்த ஊழலிலும் குற்றம் சாற்றப்படாதவராக திகழும் நமது பாரத பிரதமர் மோடி எக்காரணத்தைக்கொண்டும் ஜெயலலிதாவின் படத்தை திறந்துவைக்க வரக்கூடாது.அப்படி வந்தால் அவரது கெளரவம் பாதிக்கப்படும்.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஜூன்-201715:42:09 IST Report Abuse

K.Sugavanamவேணும்னா வருவாரு..வரலை இன்னா முதல்வரே திறந்து வச்சிடலாம்..

Rate this:
Mahendra Babu R - Chennai,இந்தியா
18-ஜூன்-201713:53:42 IST Report Abuse

Mahendra Babu Rதவறாமல் வருவார்..... ஆயிரம் அர்த்தங்கள்

Rate this:
Giridharan S - Kancheepuram,இந்தியா
18-ஜூன்-201713:27:36 IST Report Abuse

Giridharan SGive and Take Policy. அதான் போட்டு வாங்கறது பேஷ் பேஷ் இந்த deal ரொம்ப நல்லாயிருக்கு

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-ஜூன்-201712:26:42 IST Report Abuse

Nallavan Nallavanநாட்டுக்கு ரொம்ப முக்கியம் .....

Rate this:
Kedi - Bavani,இந்தியா
18-ஜூன்-201709:58:28 IST Report Abuse

Kediஅட மானம் கெட்ட குமாரசாமி

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement