பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

பேச்சு, பேட்டி, அறிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'விவசாயிகளுக்கு வருமானம்னு ஒண்ணு இருந்தா தானே, அதை இரட்டிப்பாக்க முடியும்... மீளாத கடன் சுமையில தத்தளிச்சிட்டு இருக்கிற விவசாயிகள், வங்கி கடன்களை தள்ளுபடி பண்ணுங்கன்னு கரடியா கத்துறாங்க... அது, உங்க காதுல விழலையா...' என, கேட்க தோன்றும் வகையில், மத்திய அமைச்சர்பிரகாஷ் ஜாவடேகர் பேச்சு:விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, ஏழு அம்ச திட்டத்தை, பிரதமர் துவங்கி வைத்துள்ளார். அதன்படி, நீர்ப்பாசன மேம்பாடு, தரமான விதைகள், அறுவடை கால நஷ்டத்தை தவிர்த்தல், யூரியா பயன்பாட்டை குறைத்தல் உள்ளிட்டவற்றால், விவசாயிகளின் லாபத்தை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு, ஏழு கோடி மண்வள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.
தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேட்டி: ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர்களை, பா.ஜ., இப்போது தான் சந்திக்க துவங்கி உள்ளது. எல்லாரும் சேர்ந்து, பொது வேட்பாளரை நிறுத்தினால், ஆட்சேபம் எதுவும் இல்லை என, எதிர்க்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால், தி.மு.க., அதை ஆதரிக்கும்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட, 50 சதவீத இடஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனாலும், ஊரகம், மலைப்பிரதேசம், எளிதில் அணுக முடியாத பகுதிகளில் சேவை செய்த மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கி, சேர்க்கையில் இடம் வழங்க தடை இல்லை எனவும் தீர்ப்பளித்தது. இருப்பினும், இடஒதுக்கீட்டுக்காக, தமிழக அரசு, சட்டத்தை முறையாக கையாளவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை: பல்கலை சட்டங்களில், துணைவேந்தரை நியமனம் செய்யும் தேர்வுக்குழு தொடர்பாக ஒரு திருத்தம் செய்து, தமிழக அரசு அவசர சட்டத்தை வெளியிட்டு உள்ளது. துணைவேந்தரின் கல்வித் தகுதி குறித்து, கவர்னருடன் ஆலோசித்து, அரசாணை வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது, ஆளுங்கட்சியின் அதிகார அத்துமீறல், விருப்பு வெறுப்பு சார்ந்த நடவடிக்கைக்கும் வழிவகுக்கும்.
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில், 2003ம் ஆண்டு வரை இலவச மின் இணைப்பும், 2011ம் ஆண்டு வரை கட்டண மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனால், டீசல் மோட்டார், ஜெனரேட்டர் உள்ளிட்டவற்றின் மூலம், விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர். செலவு அதிகரிப்பதோடு, விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும், மின் இணைப்பு வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

மேலும் பேச்சு, பேட்டி, அறிக்கை செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.