சொல்கிறார்கள் | Dinamalar

சொல்கிறார்கள்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
சொல்கிறார்கள்

தொடர் விக்கல்பயம் வேண்டாம்!
தொடர் விக்கல் குறித்து கூறும், இரைப்பை மற்றும் குடல் சிகிச்சை நிபுணர் டாக்டர், பி.பாசுமணி: 'விக் விக்' என சத்தம் வருவதால் தான், அதற்கு, 'விக்கல்' எனப் பெயர் வந்தது. ஆங்கிலத்தில், 'ஹிக்கப்' என்பர். பெரும்பாலும் விக்கல், சில நிமிடங்களில் சரியாகி விடும்; சிலருக்கு சில மணி நேரம் கூட நீடிக்கும். 48 மணி நேரத்திற்கு மேல் நீடிப்பதை, 'தொடர் விக்கல்' என்றும், ஒரு மாதத்திற்கு நீடிப்பதை, 'தீராத விக்கல்' என்றும் கூறுகிறோம். விக்கலுக்கு காரணம் கண்டுபிடிப்பது கஷ்டம்.
அதிகமாக சாப்பிடுவது, சிரிப்பது, ஆல்கஹால் எடுத்துக் கொள்வது என, தலை முதல் கால் வரையுள்ள விஷயங்களால், எந்தக் காரணத்தாலும் விக்கல் வரலாம். உதாரணத்திற்கு, காதுக்குள் இருக்கும் சவ்வின் மீது, அழுக்கு அல்லது முடி உரசினாலும் கூட விக்கல் வரலாம்.முக்கியமாக, 'டையப்ரம்' அதாவது, உதரவிதானத்தின் இடது பக்கம் துடிப்பதைத் தான், 'விக்கல்' என்கிறோம். சில நேரங்களில் நெஞ்சுவலி, வியர்வையோடு சேர்த்து மாரடைப்பில் கூட விக்கல் வரும். குறிப்பாக, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், புகை பிடிப்போருக்கு நெஞ்சுவலி, வியர்வையோடு விக்கலும் சேர்ந்து வந்தால், அது, 'ஹார்ட் அட்டாக்' ஆக இருக்கலாம்.அதிக எடை உடையவர்கள், அதிக மசாலா உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் அடிக்கடி, தொடர் விக்கல் வரும். நிமோனியாவால் கூட விக்கல் வரும். ஆனால், பெண்களை பொறுத்தவரை பயப்படத் தேவையில்லை. ஏனெனில், தீராத விக்கல், 85 சதவீதம், ஆண்களுக்குத் தான் அதிகம் வரும்.
விக்கலை நிறுத்த, மூச்சை இழுத்துப் பிடிக்க வேண்டும். ஐஸ் கட்டிகளை சாப்பிடலாம்; சர்க்கரையை விழுங்கலாம்; யாரையாவது பயமுறுத்தச் சொல்லலாம்; வயிற்றை அழுத்தலாம். இப்படி விக்கலுக்கான கை வைத்தியங்கள் நுாற்றுக்கணக்கில் உள்ளன. இதெல்லாம், 'வேகஸ்' என்னும் நரம்பின் டோனை மாற்றுவதற்கான முயற்சிகள்.
இவற்றைச் செய்தும் நிற்கவில்லை என்றால் மருத்துவரை அணுகி, அவர் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரை சாப்பிடலாமே ஒழிய, நீங்களே எந்த மாத்திரையையும் சாப்பிடக் கூடாது; குறிப்பாக, துாக்க மாத்திரையை சாப்பிடவே கூடாது. இதனால், துாக்கம் தான் வருமே தவிர, விக்கல் நிற்காது.
விக்கலால் பெரும்பாலும் சோர்வு உண்டாகும், சாப்பிட முடியாது. எல்லாவற்றையும் விட மன உளைச்சலுக்கு ஆளாவோம். எனக்குத் தெரிந்து, 48 மணி நேரம் கடந்து, விக்கலால் அவதிப்பட்டு சரியானவர்களும் இருக்கின்றனர்.ஆனால், அந்த இடைவெளியில் அவர்கள் மிகவும் பயந்து போய்விடுவர். மற்றபடி, இது வேறெந்த பிரச்னையையும் வரவழைக்காது. அதனால், நான்கு நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தால் கூட பயப்படத் தேவைஇல்லை.

Advertisement

மேலும் சொல்கிறார்கள் செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்