ஜனாதிபதி தேர்தலில் வெவ்வேறு நிற சீட்டு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஜனாதிபதி தேர்தலில் வெவ்வேறு நிற சீட்டு

புதுடில்லி :'ஜனாதிபதி தேர்தலில், எம்.பி.,க்க ளுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் வெவ்வேறு நிற ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்படும்' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

 ஜனாதிபதி தேர்தல், புதுடில்லி, ஜனாதிபதி, தேர்தல், எம்.பி., எம்.எல்.ஏ., தேர்தல் கமிஷன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஓட்டுச் சீட்டு, Presidential Election, New Delhi President, Election, MP, 
 MLA, Election Commission, President Pranab Mukherjee, Votes,


தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம், 17ல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. 28ம் தேதியுடன், மனு தாக்கல் முடிகிறது.

இந்த தேர்தலில், எம்.பி.,க்கள் மற்றும் அனைத்து மாநில, எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப் போட உள்ளனர். ஓட்டுச் சீட்டு முறையில்தான் தேர்தல் நடத்தப்பட உள்ளது. எம்.பி.,க்களுக் கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும், வெவ்வேறு நிறத்தில் ஓட்டுச் சீட்டு வழங்கப்பட உள்ளன.

இது பற்றி தேர்தல் கமிஷன் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், 28ல் முடிகிறது. தே.ஜ., கூட்டணியும், எதிர்க் கட்சிகளும் தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தி, மனுவை யாரும் வாபஸ் பெற வில்லை என்றால், ஜனாதிபதி தேர்தல் நடத்து வதற்கான பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கும். எம்.பி.,க்களுக்கு பச்சை நிறத்திலும்,

எம்.எல்.ஏ.,க் களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்படும்.
அருணாச்சல், பீஹார், சத்தீஸ்கர், ஹரியானா, ஹிமாச்சல், ஜார்க்கண்ட், ம. பி., ராஜஸ்தான், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், டில்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கான ஓட்டுச் சீட்டுகளில், வேட்பாளர்களின் பெயர் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

ஆந்திரா, அசாம், கோவா, குஜராத், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழகம், தெலுங்கானா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், ஹிந்திக்கு பதில், தங்கள் மாநில மொழியில் அச்சடிக்க கோரிக்கை விடுத்துள்ளன. அதனால், இந்த ஓட்டுச்சீட்டுகள் மட்டும், அந்தந்த மாநில மொழிகளில் அச்சடிக்கப்படும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஹரியானாவில், 'இங்க்' பிரச்னை ஏற்பட்டது. அதனால், இம்முறை, 'சிறப்பு பேனா'க்கள் வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. ஓட்டளிக்க செல்லும் போது, ஓட்டுச்சாவடியில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம் இந்தப் பேனா வழங்கப்படும். இந்தப் பேனாவை பயன்படுத்தி தான் ஓட்டளிக்க வேண்டும்.

எம்.பி., யின் ஓட்டு மதிப்பு, 708 ஆக இருக்கும். ஆனால், எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு, மாநிலத்துக்கு மாநிலம், மக்கள் தொகைக்கு ஏற்ப மாறும். லோக்சபாவின், 543 எம்.பி.,க்கள், ராஜ்ய சபாவின், 233எம்.பி.,க்கள், அனைத்து மாநிலங் களிலும் உள்ள, 4,120 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட உள்ளனர்.

அந்தந்த மாநில தலைமை செயலகங்கள் மற்றும் பார்லிமென்ட் வளாகத்தில், ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு நடக்கும். ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும், டில்லிக்கு எடுத்து வரப் பட்டு, அடுத்த மாதம், 20ல், ஓட்டு எண்ணிக்கை நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

ரொக்க மாகவே செலுத்த வேண்டும்:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், டிஜிட்டல் மூலம் பண பரிவர்த்தனை செய் வதைமத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புப வர்கள், டிபாசிட் தொகையைான, 15 ஆயிரம் ரூபாயை, ரொக்கமாகவே செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது பற்றி தேர்தல் கமிஷன் அதிகாரி கூறியதாவது:

ஜனாதிபதி தேர்தல் விதிப்படி, வேட்பு மனுதாக் கல் செய்பவர்கள், தேர்தல் அதிகாரியிடம், மனு தாக்கல் செய்யும் போதே, டிபாசிட் தொகையை ரொக்கமாக செலுத்த வேண்டும். தேர்தல் அதிகாரியுடன், வங்கி அதிகாரி ஒருவரும் இருப்பார்.
அவர், பணத்தை வாங்கி, எண்ணி சரிபார்ப்பார். ரிசர்வ் வங்கியில் பணத்தை செலுத்திவிட்டு, அதன் ரசீதை, தேர்தல் அதிகா ரியிடம் வேட்பாளர்கள் வழங்க லாம். ஆனால், மின்னணு முறையிலோ, காசோலையாகவோ டிபாசிட் தொகையை செலுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
19-ஜூன்-201712:51:01 IST Report Abuse

Needhiyin Pakkam Nil நாங்கள் மட்டும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தணும் ஆனால் அரசுத்துறையான தேர்தல் கமிஷன் மட்டும் ரொக்கமாக தான் பரிவர்த்தனை செய்யும் என்ன எழவு டா இது, சட்டம் போடும் அரசாங்கம் தான் முதலில் டிஜிட்டலுக்கு மாறனும் அப்புறம் தான் மக்களுக்கு உத்தரவு போடணும், உனக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா............

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஜூன்-201708:39:40 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎந்த கலராக இருந்தால் என்ன வரபோறது ஆதரவு கொடுத்தவங்களுக்கு ஆதரவாக நடந்துகிறதுதானே..

Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
19-ஜூன்-201708:12:24 IST Report Abuse

பாமரன்நாட்டின் முதல் குடிமகன் தேர்தலில் நிற்க டிபாஸிட் தொகை ரொக்கமாக மட்டுமே செலுத்தனும்... வாழ்க டிஜிட்டல் இந்தியா... கேட்டால் இதுக்கும் ராகுல் காரணம், ப.சி காரணம்னு சொல்லிவிட்டு போலி தேசபக்தாஸ் வருவாக...

Rate this:
Madhu - ,
19-ஜூன்-201722:46:08 IST Report Abuse

MadhuSuper...

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
19-ஜூன்-201707:35:15 IST Report Abuse

தேச நேசன் இதப்பத்தி பெரும்பாலான தமிழக எம்பிக்களுக்குக் கவலையில்லை ஓட்டுக்கு இவ்வளவுன்னு நிர்ணயித்தால் தான் பேரம் பேசுவார்கள் இல்லாவிடில் செல்லாத ஓட்டுக்கூட போடுவார்கள் பருப்பில்லாத கல்யாணமா? பணமில்லாத தேர்தலா ?

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-ஜூன்-201713:45:47 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்கரெக்ட்டா சொன்னேள்.. சேம் சைடு கோல்.....

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-ஜூன்-201705:06:56 IST Report Abuse

Kasimani Baskaranஎதிரிக்கட்சிகள் கண்டிப்பாக கோமாளித்தனம் செய்வார்கள் என்று நம்பலாம்...

Rate this:
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
19-ஜூன்-201703:41:03 IST Report Abuse

குஞ்சுமணி சென்னைஅடிமைகளுக்கு ஓட்டு போடத்தெரியாதே அவங்க என்ன பண்ணப்போறாங்க ?

Rate this:
skv - Bangalore,இந்தியா
19-ஜூன்-201705:40:45 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>என்னாத்த செய்வாங்க இஷ்டத்துக்கு வோட்டுப் போட்டுட்டு ங்கே ன்னு முழிப்பானுக மலக்காலிலே பிடிக்காதா சமத்துகளும் அடக்கம் (உதாரணம் MAraakkappan என்பவர் இனிஷியலை ராக்கப்பன் MA ) என்றுபோட்டுட்டானோ அவ்ளோ தான் நம்பிடுவானுகளே பார்த்தால் அந்தாளுக்கு கையெழுத்தேபோடாமால் இருக்கும் கைநாட்டாவே இருக்க வாய்ப்புண்டு...

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-ஜூன்-201713:46:46 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இவர்களுக்காக தமிழிம்ஸை ஓட்டு போடப்போறாராம்...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement