கோர்ட் தடையை மீறிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு பதிவுத்துறையில் ஆட்டம் ஆரம்பம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கோர்ட் தடையை மீறிய
அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
பதிவுத்துறையில் ஆட்டம் ஆரம்பம்

உயர்நீதிமன்ற தடையை மீறி, அங்கீகாரமில் லாத மனைகள் விற்பனையை பத்திரப்பதிவு செய்ததால், ௨௬௦ அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிடப்பட்டது.

 கோர்ட், தடை, பதிவுத்துறை, சஸ்பெண்ட், உயர்நீதிமன்றம்,   மனைகள்,  விற்பனை, விசாரணை,  நீதிமன்றம், பதவி உயர்வு, 
Court, ban, Registration, suspension, high court, Plots, sales, Investigation , court, promotion,

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறி, அவர்க ளில், 54 பேருக்கு பதவி உயர்வு வழங்க, பதிவுத் துறை முடிவு செய்துஉள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தடை விதித்தது


தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனையை பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம், 2016 செப்., 9ல், தடை விதித்தது. இந்த தடையை மீறி, அங்கீகாரமில்லாத மனைகளின் விற்பனை பதிவு நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது.

ஆரம்பத்தில் மறுத்த பதிவுத்துறை, பின், 9,760 பத்திரங்கள் மட்டுமே பதிவானதாக,

நீதிமன்றத் தில் தெரிவித்தது.ஆனாலும், இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தி, சம்பந்தப் பட்ட அதிகாரிகள் பட்டியலுடன், உண்மை விபரங் களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், தடையை மீறி நடந்த பத்திரப்பதிவுகளை ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்கள் மற்றும் சார் பதிவாளர் பொறுப்பைகவனிக்கும் அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முறைகேடு


இதன்பின், நடத்தப்பட்ட விசாரணையில், 95 ஆயிரம் பத்திரங்கள், தடையை மீறி பதிவு செய்யப் பட்டதும், சார் பதிவாளர்கள் மற்றும் அந்த பொறுப்பை கவனிக்கும் ௨௬௦ பேர், அந்த முறை கேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

ஆனாலும், அங்கீகாரமில்லாத மனைகள் தொடர் பான வழக்கு, ஜூன், 15ல் விசாரணைக்கு வந்த போது, இந்த விபரங்களை பதிவுத்துறை தாக்கல் செய்ய வில்லை. அதனால், இது தொடர்பாக நீதிமன்றம் புதிதாக, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

இந்தச் சூழலை சாதகமாக பயன்படுத்திய பதிவுத் துறை,நீதிமன்றத்தால், 'சஸ்பெண்ட்' செய்ய பரிந் துரைக்கப்பட்ட, 260 பேரில், 40 பேருக்கு, சார் பதிவா ளர்களாகவும், 14 பேருக்கு மாவட்ட பதிவாளர்களாக வும், பதவி உயர்வு வழங்க, பட்டியல் தயாரித்து

Advertisement

உள்ளது. இது, பதிவுத்துறையில், பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

'அரசு தலையிட வேண்டும்


'''உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, சுய லாபத்திற் காக, அங்கீ கார மில்லாத மனைகளை பதிவு செய்த அதிகாரி கள், துறையை ஆட்டிப்படைக் கும் அளவுக்கு, செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர். தங்களுக்கு ஒத்து வராத, ஐ.ஜி., உள்ளிட்ட உயர் அதிகாரிகளையே மாற்றும் அளவுக்கு, மேலிட ஆதரவு பெற்று விடுகின்ற னர். அவர்களை எதிர்க்க முடியாததால், நீதிமன்ற உத்தரவை பற்றி கவலைப்படாமல், பதவி உயர்வு வழங்க, பதிவுத்துறை நிர்வாகம் முயற்சித்து வருகிறது. இந்த விஷயத்தில், அரசு அமைதியாக இருப்பதால், நீதிமன்றம் நேரடியாக தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பதிவுத்துறை அதிகாரிகள்


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
19-ஜூன்-201715:44:51 IST Report Abuse

Balajiஇதுபோன்று மோசடி செய்பவர்களைத் தான் இந்த அரசு ஆதரிக்கிறது என்றால் அரசு எவ்வளவு மோசடி செய்யும் என்று பாருங்கள் தமிழகம் திருந்த (திருத்த) வேண்டும் என்றால், உடனடித் தேவை ஜனாதிபதி ஆட்சி தான்......... குறைந்தது இந்த ஆட்சி எஞ்சியுள்ள 4 வருடம் முழுவதும் ஜனாதிபதி ஆட்சியை நிறுவி அனைவருக்கும் சுளுக்கெடுத்தால் தான் கொஞ்சமாவது தமிழகம் திருந்தும்..............

Rate this:
Ravichandran - dar salam ,தான்சானியா
19-ஜூன்-201713:34:16 IST Report Abuse

Ravichandranலஞ்சம் வாங்கினவனுக்கு மீண்டும் ஐ ஏ எஸ் பதவி, பதவி உயர்வு, சட்டத்தை மீறியவர்களுக்கு மேகப்பெரிய பதவிகள். சூப்பர் வாழப்பாடி பழனிச்சாமி, முதல்வராய் இருக்க கொஞ்சமும் தகுதி இல்லாத ஆளு நீங்கள். பேசாமல் சட்டசபையை கலைத்து விட்டு போனால் தமிழகம் உங்களை நன்றியோடு பார்க்கும்.

Rate this:
Varun Ramesh - Chennai,இந்தியா
19-ஜூன்-201713:06:44 IST Report Abuse

Varun Rameshபாவம் இந்த 40 அதிகாரிகளும் எவ்வளவு பணம் கொடுத்து இந்த பதவிக்கு வந்துள்ளனர்? அதையெல்லாம் திருப்பி வசூல் செய்ய வேண்டாமா? இந்த பதவி உயர்வை அடைந்தால் தானே அவர்களுடைய அடிப்படை ஊதியம் அதிகரிக்கும். அடிப்படை ஊதியம் அதிகரித்தால் தானே பென்ஷன் உள்ளிட்ட பணி மூப்பு பண வரவுகள் அதிகரிக்கும். பணிமூப்பிற்குப்பின், மாத ஊதியம் நின்று போகும் நிலையில், பென்ஷனாவது சற்று அதிகம் வந்தால்தானே காலத்தை ஓட்ட முடியும். பணிமூப்படைந்த பின், "இதர" வருமானத்திற்கு வழியில்லாமல் போய்விடுமல்லவா?

Rate this:
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
19-ஜூன்-201710:52:52 IST Report Abuse

இடவை கண்ணன் எல்லாம் கழிசடை கழகங்கள் கொடுக்கும் தைரியம் தான்.... சட்டத்தை மீறும், வளைக்கும் துணிச்சலை இந்த அதிகாரிகளுக்கு இரு கழகங்களும் கொடுக்கின்றன...

Rate this:
Manoj - Trichy,இந்தியா
19-ஜூன்-201718:22:44 IST Report Abuse

Manojஅந்த கழிசடைகளுக்கு எடுப்பு வேலை செய்வது BJP...

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
19-ஜூன்-201710:32:44 IST Report Abuse

நக்கீரன்இங்கே நீதிமன்றங்களும் ஒப்புக்குத்தான். மக்கள் மடையர்களாக இருக்கும்வரை இந்த அவலத்தை நீக்க முடியாது.

Rate this:
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
19-ஜூன்-201710:03:18 IST Report Abuse

Ramaswamy Sundaramஅரசாங்க துறைகளிலேயே அயோக்கியத்தனமான துறை ஒன்று உண்டு என்றால் அது பத்திரப்பதிவு துறை தான்...மற்ற அதிகாரிகள் அரசால் புரசலாக அக்கம் பக்கம் பார்த்து லஞ்சம் வாங்குவார்கள்....ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் போயி பாருங்கள்...படுபாவிகள் ஒரு வெளிப்படையான ஒரு லஞ்ச லிஸ்ட் வைத்திருப்பார்கள்....சார்பதிவாளருக்கு இவ்வளவு ஹெட் கிளார்க்குக்கு இவ்வளவு பேயோனுக்கு இவ்வளவு என்று பத்திர பதிவு செய்ய வந்தவர்களிடம் சிறிதும் பயமோ கூச்சமோ இன்றி அந்த லிஸ்டை நீட்டுவார்கள்....அந்த லஞ்ச பணம் பத்திரத்ததோடு சேர்த்து பகிரங்கமாக சார்பதிவாளரிடம் கொடுக்கப்படும்.. அவனும் அதை வாங்கி ட்ராவ்ர் இல் தள்ளிவிட்டுத்தான் பாத்திரத்தை கையிலேயே எடுப்பான்....இந்த பொறுக்கி பசங்களுக்கு பதவி உயர்வு ஒரு கேடு....அசிங்கம் பிடிச்ச துறை அசிங்கம் புடிச்ச பயலுங்க

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-ஜூன்-201713:10:05 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்வருவாய் துறை மினிஸ்டர் யாருன்னு பாருங்க? மாநில வருவாய் அலுவலர்கள் முதலமைச்சரின் கீழும், வருவாய் துறை தற்சமயம் ஆர்.பி. உதயகுமாரின் கீழும் வருது. இவர்களுக்கு தெரியாமல் நடக்கிறதா என்ன? இல்லை. அமைச்சர் சொன்னதை அதிகாரிங்கள் செய்யிறாங்க....

Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
19-ஜூன்-201713:44:04 IST Report Abuse

திண்டுக்கல் சரவணன்உண்மை தான். பத்திரம் பதிவோர் மீதும் பல தவறுகள் உள்ளன. அதையும் குறிப்பிடுங்கள்....

Rate this:
guru - chennai,இந்தியா
19-ஜூன்-201709:12:24 IST Report Abuse

guruஇதை காரணம் காட்டி உயர்நீதிமன்றம் பத்திர பதிவை மீண்டும் தடை செய்யாமல் இருக்க வேண்டும்

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-ஜூன்-201713:03:55 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்நமக்கு சுயநலம் முக்கியமாக படும் வரை எப்படி திருத்தமுடியும்?...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஜூன்-201708:44:48 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎல்லாம் எடப்பாடிக்கே வெளிச்சம்...

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-ஜூன்-201713:03:18 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்எடுவட்ட பயலுகள்.....

Rate this:
spr - chennai,இந்தியா
19-ஜூன்-201708:00:53 IST Report Abuse

sprஇந்தியா ஒரு முரண்பட்ட கருத்துக்களைக் கொண்ட நாடு என்கிறான் என் நண்பன் "Give and Take policy" வாழ்வில் முன்னேற அவசியம் என்று சொல்லும் பொழுதே "(லஞ்சம்) கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்" என்றால் எப்படி? "கொடுக்கல் வாங்கல் இல்லையென்றால் உறவு எப்படி நீடிக்கும்" என்று சொல்லும் பொழுதே கொடுப்பதுவும் வாங்குவதுவும் குற்றம் என்றால் எப்படி?

Rate this:
francis xavier - Coimbatore,இந்தியா
19-ஜூன்-201706:55:58 IST Report Abuse

francis xavierசார் பதிவாளர் பதவிகள் எல்லாம் ஏறக்குறைய ஏலத்தில் விற்கப்படுவது போல தான். அப்படி ஏலத்தில் எடுத்தவர்கள் போட்ட பணத்தை லாபத்துடன் திரும்ப எடுக்க தான் செய்வார்கள். ஊழலில் நம் நாடு உலகில் முதலிடத்தில் உள்ளது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில். இங்கே நடவடிக்கை என்பதெல்லாம் பெயரளவிற்கு மட்டுமே. அப்படியே வழக்கு நடந்தாலும் தண்டனை அறிவிக்கும் பொது குற்றவாளிகள் உயிருடனே இருக்க மாட்டார்கள். நாசமாய் போகும் நாடு இது தான்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement