நதிகள் இணைப்புக்கு ரூ.1 கோடி; மத்திய அரசிடம் தர ரஜினிகாந்த் சம்மதம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நதிகள் இணைப்புக்கு ரூ.1 கோடி
மத்திய அரசிடம் தர ரஜினிகாந்த் சம்மதம்

சென்னை: 'அறிவித்தபடி, நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, ஒரு கோடி ரூபாய் நிதி தாருங் கள்' என, நடிகர் ரஜினியை சந்தித்த விவசாயிகள் வலியுறுத்தினர்.

 நதிகள்,இணைப்புக்கு,ரூ.1 கோடி, மத்திய, அரசிடம், தர,ரஜினிகாந்த் சம்மதம்

சில ஆண்டுகளுக்கு முன், காவிரி பிரச்னைக் காக, சென்னையில், உண்ணாவிரதம் இருந்த நடிகர் ரஜினி, 'நதிகள் இணைப்பு திட்டத்துக்கு, தன் பங்களிப்பாக, ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்' என்றார். ஆனாலும், நதிகள் இணைப்பு திட்டத்தை, மத்திய அரசு இன்னும் செயல்படுத்தவில்லை.
இந்நிலையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், சென்னை,

போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில்,நேற்று அவரை சந்தித்துப் பேசினர்.
இது குறித்து, விவசாயிகள் சங்கத் தலைவர், அய்யாக்கண்ணு கூறியதாவது
:

நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே, தமிழகத்தில், வரும் காலங்களில் சாகுபடி நடக்கும். எனவே, மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து, முதலில்,தென்மாநில நதிகளை இணைக்க வேண்டும்.
இது குறித்து, நாங்கள் முன்வைத்த கோரிக்கையை, மத்திய அரசு ஏற்கவில்லை. நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, நடிகர் ரஜினி ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறியிருந்தார். அவர் நிதியை வழங்கி, மத்திய அரசிடம்பேசினால், திட்டம் நிறைவேறும் என்று நம்புகிறோம்.

இதுதொடர்பாக, ரஜினியை சந்தித்து பேசினோம். என்னுடன் வந்த, 16 விவசாயிகளையும் வீட்டிற்கு அழைத்து, வரவேற்பு அறையில் அமர வைத்தார்; மோர் கொடுத்து உபசரித்தார். 'வாக்குறுதி அளித்த

Advertisement

படி, நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, நிதி தர வேண்டும்' என, ரஜினியி டம் கேட்டோம். உடனே, தன் உதவியாளரை அழைத்து, ஒரு கோடி ரூபாய் எடுத்து வரும்படி கூறினார்.

ஆனால், 'பணத்தை நாங்கள் வாங்குவது சரியாக இருக்காது. மத்திய அரசிடம் நீங்களே கொடுங்கள்' என, கூறிவிட்டோம். இது குறித்து, மத்திய அரசிடம் பேசுவதாக, ரஜினி உறுதி அளித்தார் என அய்யாக்கண்ணு கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
20-ஜூன்-201712:07:51 IST Report Abuse

kowsik Rishiஒரு சினிமா ஆக்டர் அவ்வளவு தான் ரஜனி - எம்.ஜி.ஆர். செல்வி ஜெ ஜெ வுடன் ஒப்பு சொல்ல ரஜினி ஒன்றும் இல்லை எம்.ஜி.ஆர். செல்வி ஜெ ஜெ ஒரு சிறந்த அரசியல் கட்சியில் தொண்டர்கள், கட்சிக்கு உழைத்தவர்கள் தங்கள் வேலையில் - ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்கள் ரஜனி தமிழ் கூட நன்றாக பேச முடியாதவர் செல்வி ஜெ ஜெ, எம்.ஜி.ஆர் அப்படியல்லா சும்மா இந்த ரஜினியை எம்.ஜி.ஆர். செல்வி ஜெ ஜெ வின் அரசியல் மகாமகத்திற்கு ஒப்பிடாதீர்கள் கோழை 1991 ஆண்டவன் சொன்னார் என்று பொய் சொல்லி மு.கருணாநிதிக்கு பயந்து ஆள்க்காட்டி வேலை செய்து செல்வி ஜெ ஜெ வின் தீர பழிக்கு காரணமானவர் - இதையே இதே ரஜினி ஸ்டாலினை பற்றி மாறனை பற்றி ராஜாவை பற்றி கனிமொழியைப்பற்றி மு.கருணாநிதியை பற்றி சொல்லி இருக்க முடியுமா செல்வி ஜெ ஜெ வை ஒரு ருப்பாய் வழக்கில் சிக்க்கவைக்க முதல் காரணம் இந்த ரஜினி சொன்ன பேச்சு தான் செல்வி ஜெ ஜெ பதவி இழந்த அடைத்த நாளே சிறை வசம் என்று வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் ரஜினி - நீர் என்னதான் சொன்னாலும் செல்வி ஜெ ஜெ விற்கு நீங்கள் இழைத்த அரசியல் வன்கொடுமை தீராத பழியாக தான் உங்களை தொடரும் - மிக பெரிய தவறு சார் - பேசியபிறகு நீர் தான் அன்று அரசியல் களத்தில் இறங்கி வந்திருக்கவேண்டும் - அதை செய்யாமல் மு.கருணாநிதிக்கு காவடி தூக்கிவிட்டு இன்று இந்த நாடகம் வேண்டாம் சார் இந்த நிமிடம் வரை அரசியல் செய்யும் நீர் அரசியல் பற்றி பேசமாட்டேன் என்று சொல்வது சுத்த கோழை தனம் அதற்கெல்லாம் ஒரு தில் வேண்டும் சார் வந்து தான் பாருங்கள் சிரியாய் சிரிக்கும் சார் என்ன நினைத்துக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று பேசுகிறீர் - இறைவன் என்ன உங்களின் ஹோல் சயில் சாராக்க சார் அரசியலில் இறைவனை பேசுவதை இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் உங்களை போன்ற ..... இறைவன் வரமாட்டார் மு.கருநிதி அப்போ இப்பபோ மு.க. ஸ்டாலின் பேசுகிறாரா என்று பாருங்கள் போங்க சார் போய் கர்நாடகாவிலோ, மஹாராஷ்டிராவில் ஒரு பஞ்சாயத்தி தேர்தல் வென்று காட்டுங்கள் பார்க்கலாம் - கர்நாடாவில் ஒரு எம். எல். ஏ பதவி தேர்தல் வென்று காட்டுங்கள் - தமிழ் மக்களை ஆளவந்துவிட்டீர்கள்

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
19-ஜூன்-201723:46:38 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranகொடுக்க நினைப்பவனை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது . சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் காவிரி பிரச்சினையின் போது உண்ணாவிரதம் இருந்து நதிகளை இணைக்க ரூ. ஒரு கோடி கொடுக்க ரஜினிகாந்த் உறுதியளித்தார்..இன்னும் கொடுத்தபாடில்லை . இதை எண்ணிப்பார்க்கும்போது ஒரு கதை ஞாபத்திற்கு வருகிறது : ஒரு ஊரில் ஜமீன்தார் ஒருவரை பார்த்து அவரை புகழ்ந்து படி பரிசுகள் பெற விரும்பி பக்கத்து நாட்டை சேர்ந்த ஒரு ஏழை புலவன் வந்தான். . சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்து வாயில் வெற்றிலை பாக்கை குழைத்துக்கொண்டிருந்த ஜமீன்தார் அவனை எதிரில் இருந்த இருக்கையில் அமர சொன்னார். .அவனோ அதை மறுத்து அவரை புகழ்ந்து செவி மணக்க செந்தமிழில் ஒரு கவிதை பாடினான் , மிக்க மகிழ்ச்சியடைந்த ஜமீன்தார் அருகில் இருந்த அவரின் காரியதரிசியிடம் 'இந்த புலவனுக்கு ஒரு கோடி பொற்காசுகள் கொடு ' என்று உத்தரவிட்டார். புளகாங்கிதம் அடைந்த அந்த புலவன் தன பசியையும் மறந்து மேலும் அந்த ஜமீன்தாரை புகழ்ந்து பற்பல கவிதைகள் பாடினான் . மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்ட ஜமீன்தாரும் ஏழை புலவனுக்கு , பொன் , பொருள் , முத்துமாலை 20 ஏக்கர் நிலம் என்று பற்பல பரிசில்களை வழங்க அவருடைய காரியதரிசிக்கு உத்தரவிட்டார். ஆனால் ,காரியதரிசியோ கற்சிலை போல் இருந்த இடத்தைவிட்டு அகலவில்லை .அதனால் துணுக்குற்ற புலவன் ஜமீன்தாரிடம் ' என் கவிதைகளை ரசித்து இந்த ஏழையின் மனம் குளிரும் வகையில் பற்பல பரிசில்களை நீங்கள் அறிவித்தாலும் ,உங்கள் காரியதரிசி இருந்த இடத்தை விட்டு அகலாது நிற்கின்றாரே? தயவு கூர்ந்து எனக்கு நீங்கள் அளித்த பரிசில்களை விரைவாக இந்த ஏழை புலவன் பெற்றிட ஆவண செய்யவும் ''என்று இறைஞ்சி கேட்டபோது . 'பக' 'பக' வென்று கேலியாக புலவனை பார்த்து சிரித்து எள்ளி நகையாடிய ஜமீன்தார் ' புலவரே நீவிர் எனது மனம் குளிரும்படி பல கவிதைகளை பாடினீர் . நானும் உங்கள் மனம் குளிரும் வகையில் பரிசில்களை வழங்க சொன்னேன். ' நமது கணக்கு முடிந்தது. உங்கள் கவிதையால் எனக்கு என்ன பயனும் இல்லை. அது போன்று நான் வழங்க சொன்ன பரிசில்கள் உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை ' நீங்கள் செல்லலாம் என்று மேனியில் அணிந்திருந்த பட்டு அங்கவஸ்திரத்தை உதறியபடி ஜமீன்தார் உள்ளே சென்றுவிட்டார். . ரஜினிகாந்த் நதிகளை இணைப்பதற்கு தருவதாக சொன்ன ஒரு கோடி இந்த வகையை சேர்ந்ததுதான்.

Rate this:
Guptha K - Bangalore,இந்தியா
19-ஜூன்-201723:31:20 IST Report Abuse

Guptha Kஎல்லாரும் பணம் கொடுக்க வேண்டும். முதலில் தமிழக நதிகளை இணைக்க வேண்டும். மழை நீர் சேமிக்க வேண்டும். இதை செய்வோம் முதலில். எல்லாரும் பணம் கொடுத்தால் இது சாத்தியம்.

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
19-ஜூன்-201723:18:25 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranஇதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. நம் நாட்டில் ஜனாதிபதியின் அதிகாரம் வெறும் ஏட்டளவில்..ரபபர் ஸ்டாம்ப் பதவிக்கு தலித் அல்லது சிறுபான்மையினம் ,உயர் அல்லது பிற்படுத்தப்பட்ட சாதி என்று யாராயினும் எதுவும் கிழிக்கப்போவதில்லை .அரசியல் கட்சியில் தொண்டனுக்காவது ரூ. 500 /- . பிரியாணி பொட்டலம் , போகவரச்செலவு என்று ஒருவகையில் பயன் இருக்கும் .பாமர மக்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சம் . கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் ,அம்பையர் ,மற்றும் அதை சார்ந்தோர்க்கு நல்ல வருமானம் கிடைக்கும் .அதை வேடிக்கை பார்க்கும் ரசிகர்களுக்கு வேதனையும் ,பணச்செலவும் ,காலவிரயம் தான் மிச்சம்.ஆளும் .மத்திய அரசுக்கு ஏதேனும் இடர்பாடு வந்தால் அதனை தடுத்து காத்து முட்டுக்கொடுக்க ஒரு காவலன் வேண்டும் .அவர்தான் ஜனாதிபதி.

Rate this:
Sanveena - Chennai,இந்தியா
19-ஜூன்-201719:26:11 IST Report Abuse

SanveenaState government please stop all the hydrocarbon and methane projects and save Thanjavur our NER KALANJIYAM. Please put a rule that river sand should not be taken. Only then our future generations will have food and water. There are lots of ways to get methane. Cow dung is the cheapest and best way to get methane. We cannot ask others for food and water. Please save agriculture and completely ban all the hydrocarbon projects

Rate this:
Suresh Ulaganathan - Bangalore,இந்தியா
19-ஜூன்-201719:12:53 IST Report Abuse

Suresh Ulaganathanமுதலில் நதிகளில் நீர் ஓடவேண்டும். தமிழ் நாட்டில் உள்ள எல்லா ஆறுகளிலும் மணல் லாரிகள் தான் தென்படுகிறது. மழை வந்தால் நீரை தேக்க முடியாது என்று அரசு பொய் சொல்கிறது. காரணம் மணல் அள்ள முடியாது. பின் எதற்கு இந்த நதி நீர் இணைப்பு நிதி.

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
19-ஜூன்-201721:21:06 IST Report Abuse

Nakkal Nadhamuniநதிகளெல்லாத்தயும் இணைச்சா லாரிகள் சுலபமா போகமுடியும், அதுக்குத்தான்......

Rate this:
R.SANKARA RAMAN - chennai,இந்தியா
19-ஜூன்-201718:16:21 IST Report Abuse

R.SANKARA RAMANநதிகள் இணைப்பிற்கு கர்நாடகாவையும், கேரளாவையும், ஆந்திராவையும் குறை சொல்லும் நண்பர்களே தமிழ்நாட்டில் AIIMS நிறுவ தஞ்சாவூரும் மதுரையும் போட்டி போடுகிறதே அதற்கென்ன சொல்கிறீர்கள் ..

Rate this:
GANESUN - MANAMA,பஹ்ரைன்
19-ஜூன்-201717:39:38 IST Report Abuse

GANESUNமுதலில் எல்லோரும் செய்ய வேண்டியது மழை நீரை சேமிப்பது..

Rate this:
GANESUN - MANAMA,பஹ்ரைன்
19-ஜூன்-201717:02:15 IST Report Abuse

GANESUNஒரு ரூபாய் கொடுத்தால் ஒரு கோடி கொடுத்த மாதிரி.....

Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-ஜூன்-201716:33:33 IST Report Abuse

A.George AlphonseMr.Rajinikanth no need of giving one crore from his pocket for these farmers.He earned through his hard work and restless shootings.We don't have any right to demand from him for this purpose. There are many actors in our state earning crors of rupees in cinema and no one promised or ready to donate for this Inter linking rivers and the central government is not yet proposed or talk about this issue till now.Only these farmers are talking themselves and even our own Tamil nadu government is also not bothered or worry about this Inter linking rivers.We have to appreciate Mr.Rajinikanth for his generocity by coming forward to donate huge amount before the project proposal or starts.The act of Our Farmers seems to be like" Edam Amayavillai Veettukku Asthivaram poda Aarampiththadhu" pole meaningless, brainless and useless idea and efforts.Why these farmers are not going to CM.Ministers,MPS and MLAS and ask them to donate money for international linking rivers. They are only doing this gimmicks, magics and dramas for publicity.

Rate this:
மேலும் 64 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement