மணல் தட்டுப்பாடு நீடிப்பு : ஒப்பந்ததாரர்கள் ஓட்டம் Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஓட்டம்!
மணல் தட்டுப்பாடு நீடிப்பு :
ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்

தமிழகத்தில், மணல் தட்டுப்பாடு தொடர்வ தால், கட்டுமான பணிகளை செய்யாமல், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர்.

மணல்,தட்டுப்பாடு,நீடிப்பு,ஒப்பந்ததாரர்கள்,ஓட்டம்

தமிழகத்தில், 29 மணல் குவாரிகளை, பொதுப் பணித்துறை இயக்கி வருகிறது. இவற்றில் இருந்து, தினமும், 5,000 லோடு மணல்

அள்ளப்படுகிறது. இது, மாநிலத்தில் நடக்கும் கட்டு மான பணிகளை பூர்த்தி செய்யும் நிலையில் இல்லை. கிடைக்கும் மணலையும், கூடுதல் விலை யில் விற்க, வெளிமாநில பர்மிட்லாரிகள் மூலம், கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு கடத்தப்படுவ தால், தமிழகத்தில், மணல் தட்டுப்பாடு நீடிக்கிறது.

அதேநேரத்தில், பொதுப்பணித்துறை கட்டடங்கள் பிரிவு மூலம், டெண்டர் விடப்பட்டு, மருத்துவ மனைகள், நீர் நிலைகள், பாலங்கள் என, ஆயிரத்துக் கும் மேற்பட்ட இடங்களில், பல்வேறு துறைகளின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. மணல் தட்டுப்பாடுகாரணமாக, மணல் விலை உயர்ந்துள்ள தால், சிறிய ஒப்பந்ததாரர்கள், கட்டுமான பணிகளை கிடப்பில் போட்டு விட்டு, ஓட்டம் பிடித்துள்ளனர்.

பெரிய ஒப்பந்ததாரர்கள், மணல் தேவை குறைவான பணிகளை மட்டும் செய்துவருகின்றனர். எனவே,

Advertisement

மூன்று மாதத்திற்குள் முடிந்து, பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வர வேண்டிய பல கட்டுமான திட்டங்கள், பாதியில் முடங்கி உள்ளன. பணி களை விரைவுபடுத்த,அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. - நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜூன்-201718:50:00 IST Report Abuse

தமிழ்வேல் கிடப்பில் இருக்கும் கட்டிடங்களுக்காவது தெர்மோகோலை உபயோகிக்க கூடாதா ?

Rate this:
mohan - chennai,இந்தியா
19-ஜூன்-201708:40:21 IST Report Abuse

mohanஇருக்கும் மணலை வெளி நாட்டிற்கு விற்று விட்டார்கள்... பின்னர் தமிழ் நாட்டிற்கு மணல் எப்படி இருக்கும். இது 20 வருட காலமாக மிக பெரிய அளவில் நடந்துள்ளது...இப்பொழுது இருக்கும் மணலையும் வெளிநாட்டிற்கு விற்பதற்கு வைத்துள்ளனர்....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement