ஜனாதிபதி வேட்பாளர் யார்? அத்வானிக்கு ஆதரவாக போஸ்டர் Dinamalar
பதிவு செய்த நாள் :
ஜனாதிபதி வேட்பாளர் யார்?
அத்வானிக்கு ஆதரவாக போஸ்டர்

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பா ளராக, தே.ஜ., கூட்டணி யாரை அறிவிக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. 'அத்வானியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என, டில்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால், பா.ஜ.,வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 ஜனாதிபதி வேட்பாளர், அத்வானி, போஸ்டர், புதுடில்லி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,  அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், வெங்கைய நாயுடு, காங்கிரஸ், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், President candidate, Advani, Poster, New Delhi, President Pranab Mukherjee, Arun Jaitley, Rajnath Singh, Venkaiah Naidu, Congress, Foreign Minister Sushma Swaraj, Lok Sabha Speaker Sumitra Mahajan

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம், ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம், 17ல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் துவங்கிவிட்டது; இதையடுத்து, ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

பா.ஜ., குழு


மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, ஜனாதிபதியை போட்டியின்றி தேர்வு செய்ய விரும்புகிறது. இதற்காக, அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், வெங்கைய நாயுடு ஆகியோர் அடங்கிய குழுவை, பா.ஜ., அமைத் துள்ளது.

இந்த குழு, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உட்பட பலரை சந்தித்து பேசியது. ஆனால், 'ஜனாதிபதி

வேட்பாளர் யார் என அறிவிக்காமல், ஆதரவு தரு வது பற்றி எதுவும் சொல்ல முடியாது' என, காங்கி ரஸ் தெரிவித்து விட்டது.
மேலும், 'வரும், 20ம் தேதிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என பா.ஜ., அறிவிக்க வேண்டும்; இல்லாவிட்டால், எதிர்க் கட்சிகள் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்' என, மார்க்சிஸ்ட் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய, பா.ஜ., தலைவர்கள் கூட்டம், டில்லியில் இன்று நடக்கிறது. இதன்பின், தே.ஜ., கூட்டணி கட்சிகளின் தலைவர் களின் கூட்டமும் நடக்கும் என தெரிகிறது. இதில், ஜனாதிபதி வேட்பாளர் பற்றி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசீலனை


வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரது பெயர் கள், ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் பரிசீலனை யில் உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் சார்பில், வேட்பாளரை நிறுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

மஹாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான, கோபால கிருஷ்ண காந்தியை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விரும்புகிறது.பிரதமர் மோடி, அமெரிக்கா உட்பட மூன்றுநாடுகள் பயண மாக, 24ல் புறப்பட்டுச் செல்கிறார். அதற்கு முன், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை, பா.ஜ., அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, 'பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும்' என, பா.ஜ.,வில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

ஆனால், அத்வானியை வேட்பாளராக அறிவிக்க, பிரதமர் மோடிக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது. இந்நிலையில், டில்லியில், பா.ஜ., அலுவலகம் அமைந் துள்ள அசோகா சாலை உட்பட பல இடங்களில், ஜனாதிபதி வேட்பாளராக அத்வானியை நிறுத்த வலியுறுத்தி, போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சிவசேனா மறுப்பு


மஹாராஷ்டிராவுக்கு மூன்று நாள் பயணமாக, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா வந்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, மத்தியிலும், மாநிலத்திலும், பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேவை, மும்பையில் உள்ள அவரது வீட்டில், அமித் ஷா நேற்று சந்தித்து பேசினார்.

ஜனாதிபதி வேட்பாளரை பிரதமர் மோடி முடிவு செய்வார் என்றும், அதற்கு சிவசேனா ஒத்து ழைக்க வேண்டும் என்றும், உத்தவ் தாக்க ரேயை, அமித் ஷா வற்புறுத்தியதாக கூறப்படு கிறது. இந்த கோரிக்கையை, உத்தவ் தாக்கரே நிராகரித்து விட்டதாக, மஹாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbu - chennai,இந்தியா
19-ஜூன்-201715:01:37 IST Report Abuse

Subbuபி.ஜே.பி. இந்த அளவிற்கு வளர்ந்து ஆட்சியை பிடித்தது என்றால் அதற்கு முழு மூல காரணம் திரு அத்வானி அவர்களின் கடும் உழைப்பும் விடமுயற்சிகலுமே காரணம், நேர்மையான நாட்டுப்பற்றுள்ள அவரைத்தான் ஜனாதிபதியாக்கி பி.ஜெ.பி. கட்சி தன் நன்றியை தெரிவிக்கவேண்டும்,

Rate this:
sundaram - Kuwait,குவைத்
19-ஜூன்-201714:08:04 IST Report Abuse

sundaramஇளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். எச். ராஜா, தளபதி, லாலு புத்திரர்கள், கனிமொழியார் மகன், உதயநிதி, ......

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-ஜூன்-201713:35:12 IST Report Abuse

இந்தியன் kumarமுதல் குடிமகன் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.

Rate this:
Rajasekar - trichy,இந்தியா
19-ஜூன்-201713:20:26 IST Report Abuse

Rajasekarமோடி, ப்ரியங்கா சோப்ராவுக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன். நல்ல துணிச்சலான பெண், பிரதமர் எதிரே கால் மேல் கால் போட்டு உட்காருகிற தைரியம் யாருக்கு இருக்கு. இந்த தகுதி ஒன்று போதாதா, நாட்டை நன்றாக வழிநடத்தி செல்வார்.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
19-ஜூன்-201712:42:17 IST Report Abuse

ganapati sbபிரணாப் முகர்ஜி வங்காளத்திலிருந்தும் வங்காளத்தில் காங்கிரஸ் வெல்லவில்லை அப்துல்கலாம் தமிழகமாக இருந்தாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல வில்லை. முர்மு ஸ்ரீதரன் ஸ்வாமிநாதன் போன்ற ஒருவரை ஜனாதிபதியாக்கினால் ஒரிசாவில் வடகிழக்கு மாநிலங்களிலும் பழங்குடியினர் கேரளாவில் தமிழகத்தில் மக்கள் ஆதரிப்பார் என்ற தவறான யூகம் உண்மை என கொண்டாலும் கூட அவர்களை துணை ஜனாதிபதியாக வேண்டுமானால் நியமிக்கலாம். அனைவரை விட முத்த தலைவரான அத்வானியே அதிபர் பதவிக்கு உரியவர் . அத்வானியே எனக்கு ஜனாதிபதி பதவியில் செயல்படும் அளவு உடல் நிலை சரியில்லை வேறு தகுதி வாய்ந்த யாரை வேண்டுமானால் நியமியுங்கள் என கூறி விட்டால் பின்னர் யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம்.

Rate this:
bhaski karan - tirupur,இந்தியா
19-ஜூன்-201711:58:16 IST Report Abuse

bhaski karanஎப்பவுமே கூஜா தூக்கறவங்களுக்கு வாய்ப்பு தருவார்

Rate this:
Rockie - Nellai,இந்தியா
19-ஜூன்-201711:38:17 IST Report Abuse

Rockieதேசிய அளவில் இவர் நமது தமிழகத்தின் ஸ்டாலின். பாவம் கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை.

Rate this:
Rajasekar - trichy,இந்தியா
19-ஜூன்-201713:58:03 IST Report Abuse

Rajasekarபொன். ராதா , ஹ.ராஜா , தமிழிழை பொருத்தமா இருக்குமே....

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
19-ஜூன்-201711:01:33 IST Report Abuse

narayanan iyerShri. Advaniji is the best candidate for presidential post. There should not be any second thought for BJP. Vandhe maatharam.

Rate this:
Rajasekar - trichy,இந்தியா
19-ஜூன்-201713:54:37 IST Report Abuse

Rajasekarஇன்னொரு கரசேவை செய்யறதுக்கு வசதியா இருக்குமா....

Rate this:
Srinivasan Kothandaraman - Chennai,இந்தியா
19-ஜூன்-201710:47:35 IST Report Abuse

Srinivasan Kothandaramanநம்ப தளபதி நல்ல தேர்வு ?

Rate this:
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-201710:00:22 IST Report Abuse

Venkiசகுனி மோடி நிச்சயம் அத்வானிக்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார் மோடியால் பாஜக அகில இந்திய அளவில் மண்ணை கவ்வும்

Rate this:
shiva.G - chennai,இந்தியா
19-ஜூன்-201710:33:09 IST Report Abuse

shiva.Gவெங்கி அன்னே சொல்றது தவறு மோடி இதுவரை இந்தியாவில் இருந்த பிரதமர்களில் சிறந்த திறமைசாலி இன்று அமெரிக்கன் ஐரோப்பியன்ஸ் சீனர்கள் எல்லோரும் மோடி செய்யும் பொருளாதார சீர்திருத்தங்களை பார்த்து வாயை பிளக்கின்றனர் கொஞ்சம் பொறுத்து இருந்து பாருங்கள் உண்மை புரியும்...

Rate this:
Rajasekar - trichy,இந்தியா
19-ஜூன்-201713:39:58 IST Report Abuse

Rajasekarஇந்தியால யாரும் சொல்லமாட்டீங்குறாங்க ஜி. நான் எப்புடு நம்புறது. இதுவரை வெளிநாடு சொல்லி ஏமாத்துனது போறும்....

Rate this:
shiva.G - chennai,இந்தியா
24-ஜூன்-201718:34:32 IST Report Abuse

shiva.Gஅண்ணா ராஜசேகர் அண்ணா கொஞ்சம் நாள் பொறு தலைவா மாற்றங்கள் உடனே கிடைத்துவிடாது செய்து இருக்கும் சீர்திருத்தங்கள் பலன் போக போக தான் கிடைக்கும்....

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement