தடுப்பணைகள் கட்டும் விவகாரம்; தமிழக அரசு மீது ஸ்டாலின் பாய்ச்சல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தடுப்பணைகள் கட்டும் விவகாரம்
தமிழக அரசு மீது ஸ்டாலின் பாய்ச்சல்

வேலுார்: ''பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க, மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவை, தமிழக அரசு அமைக்க வேண்டும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

தடுப்பணைகள்,கட்டும்,விவகாரம்,தமிழக,அரசு,மீது,ஸ்டாலின் பாய்ச்சல்


வேலுார் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து, குப்பம் செல்லும் சாலையில், ஆந்திர மாநிலத்திற்கு சொந்தமான பாலாறு என்ற கிராமத்தில், பாலாற்றின் குறுக்கே புதிதாக

தடுப்பணையை, ஆந்திர மாநில அரசு கட்டி வருகிறது. மேலும், இதற்கு அருகில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள, கங்குந்தி தடுப்பணையின் உயரத்தை, 5ல் இருந்து, 15அடியாக உயர்த்தியு உள்ளது.

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், நேற்று காலை, 10:30 மணிக்கு, பாலாறு கிராமத்திற்கு வந்தார். புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்துடன் கூடிய தடுப்பணை மற்றும் அதன் எதிரில் உயர்த்தப் பட்ட கங்குந்தி தடுப்பணையை பார்வையிட்டார்.

பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:


பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு, எந்தவித அறிவிப்பும் இன்றி தடுப்பணைகளை கட்டி வருகிறது. ஏற்கனவே கட்டிய, 22 தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தியுள்ளது. இதை தடுக்க, தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

Advertisement

ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதால், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த பிரச்னையில் தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radhika - Chennai,இந்தியா
19-ஜூன்-201718:26:34 IST Report Abuse

RadhikaI heard that there is some river in Ooty which is going to other states. Why dont we build a dam over there and save water and supply to whole Tamilnadu. Instead of safeguarding the politcal parties, policians have to think about it and resolve this. If we start building that dam, we dont have to request or fight for water from any other state.

Rate this:
Ambit Kaur - Thiruvananthapuram,இந்தியா
19-ஜூன்-201716:38:37 IST Report Abuse

Ambit Kaurதமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர் குலைத்தவரே திராவிட கருணாநிதி தான் .முல்லை பெரியாறு ,காவேரி நதி நீர் பங்கீடு ஆகியவற்றை கருணாநிதி முறையாக கையாளவில்லை . முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உச்ச நீதி மன்றம் மூலம் சாதித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் .மேலும் தமிழகத்தில் உள்ள தற்போதைய அணைக்கட்டுகளில் பல கர்ம வீரர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது .அது - கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், 30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால் திட்டம் , புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த்தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்களும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. அதனால் தான் அவர் ஆட்சியை பொற்கால ஆட்சி என்கிறோம் .கருணாநிதி ,எம்ஜியார் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராய் இருந்து கட்டிய அணைக்கட்டுகளை விட காமராஜர் காலத்தில் கட்டப்பட்டவை அளவிலும் ,பாசன அளவிலும் பெரியவை .மேலும் காவிரி பிரச்சனையின் மூலாதாரமே திராவிட மூத்தாசான் கருணாநிதி தான் - அது பற்றிய சிறு பதிவு இந்திய பிரதமர்கள் வி பி சிங்,நரசிம்மராவ் ,குஜ்ரால் ,தேவ கௌடா,வாஜிபாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் பதவிகள் வகித்தபோது ,காவேரி பிரச்சனைக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர் தான் இந்த கருணாநிதி . தனது மகனுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சோனியா காந்தி அரசில் ( மன்மோகன் சிங் பொம்மை பிரதமர் ) நல்ல பசையான துறைகளை வாங்க நேரடியாக டெல்லி சென்றவர் அப்போதே மத்திய நீர்வளத்துறையை கேட்டு பெற்றிருந்தால் இந்நேரம் கருணாநிதி காவிரி பிரச்சனை தீர்த்ததற்காக உலக புகழ் பெற்றிருப்பார் .ஆனால் அந்த அக்கறை அவருக்கு கிடையாது .காவிரி பிரச்சனையில் அவரின் துரோகங்கள் வரிசையாக 1). “கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை" என்று 6.3.1970 அன்று தமிழக பேரவையில் கருணாநிதி பேசி இருக்கிறார் என்பது வரலாறு. இது கருணாநிதியின் முதல் துரோகம்.2).இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது. கர்நாடக அரசின் இந்த அத்துமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தவர் தான் திராவிட கருணாநிதி. இது கருணாநிதியின் இரண்டாவது துரோகம்.3.) 4.8.1971 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் காவேரி நீர் உரிமை பிரச்சனை குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தமிழக பேரவை மற்றும் மேலவைக்கு தெரிவிக்காமலேயே தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார் கருணாநிதி வேறு ஒன்றும் இல்லை சர்க்காரியா கமிஷன் எனும் கத்தி /துப்பாக்கி தான் இது கருணாநிதியின் மூன்றாவது துரோகம்.4.)18.2.1892-ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சி மற்றும் மைசூர் சமஸ்தானம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தான் காவேரி தொடர்பான முதல் ஒப்பந்தம் ஆகும். 1924-ஆம் ஆண்டு இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரண்டாவது ஒப்பந்தம் 50 ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும் என்றும், மறு ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படுத்திக் கொள்வது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியவர் திராவிட கருணாநிதி இது கருணாநிதியின் நான்காவது துரோகம் .இப்படி கர்நாடகா கடந்த 40 வருடங்களில் முக்கியமாக கருணாநிதி ஆட்சிக்காலத்தில் - அணைகள் கட்டியதை - ஹேமாவதி ஆற்றில் 34 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட அணை ,கபினி ஆற்றில் 19 டி.எம்.சி கொள்ளளவு அணை - ஹேரங்கி ஆற்றில் 6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணை - தடுக்காத /கண்டுகொள்ளாத /கவனிக்காத /கவலைப்படாத /வருத்தமற்ற/ கூர் நோக்காத /ஆராயாத கருணாநிதி தமிழர் நலன் /திராவிடர் நலன் குறித்து கவலை கொண்டது இல்லை 5.காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது. ஆனால், அதை முறைப்படி அமலாக்க அதை முதலில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டும். அதில் வெளி யிடப்பட்டுவிட்டால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை கர்நாடகத்துக்கு மேலும் அதிகமாகும். ஆனால், இதை கெஜட்டில் வெளியிடாமல் இழுத்தடித்து வந்தது மத்திய காங்கிரஸ் அரசு .இதை கெஜட்டில் ஏன் வெளியிடவில்லை ? என்று மத்திய அரசை அந்த நேரம் உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. அப்போது மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணி கட்சியாக பதவி சுகங்களை ஏகத்திற்கும் அனுபவித்து வந்த திமுக இது குறித்து துளி கூட கவலைப்படவேயில்லை . இது கருணாநிதியின் ஐந்தாவது துரோகம் .மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட நீதி மன்றம் மூலம் சாதித்தவர் காவேரித்தாய் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் 6.காவேரி பிரச்சனையில் ஆரம்ப காலத்தில் இருந்து கர்நாடக மக்களின் வன்மத்தை தூண்டி வளர்த்தவர் தேவ கவுடா தான், கேட்டால் நான் விவசாய குடும்பம் என்பார் .காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் (மத்திய அரசின் கெஜட்) வெளியிடக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவ கௌடா கோரிக்கை விடுத்தார் -அதில் தேவ கௌடா சாதித்தார் .அப்பேற்பட்ட தமிழின விரோதி இந்திய பிரதமராக பதவி வகிக்க ஆதரவுக்கரம் நீட்டியவர் இந்த கருணாநிதி தான்.இது கருணாநிதியின் ஆறாவது துரோகம் .7.இது எல்லாவற்றையும் முழுங்கி சாப்பிடக்கூடிய அளவிற்கு கருணாநிதி செய்த மாபெரும் துரோகம் இதோ - 1998 ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் தேதி திமுக ஆட்சியின் போது , சென்னையில் முதல்வர் கருணாநிதி ,பிரதமர் தலைமையில் ஆன காவேரி ஆணையம் அமைப்பதற்கான மத்திய அரசின் வரைவு அறிக்கையை விவாதிக்க கூட்டம் கூட்டினார் .அதில் காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை கர்நாடக அரசு அமுல்படுத்தாத பட்சத்தில் ,பிரதமர் தலைமையிலான காவேரி ஆணையமே, கர்நாடக அணைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அதிகாரம் சம்பந்தப்பட்ட ஷரத்து இருந்தது .அதனை கருணாநிதி நீக்கி விட்டார் .காரணம் அவரின் குடும்பத்தார் கர்நாடகாவில் வாங்கி குவித்துள்ள அளவற்ற/ கணக்கற்ற சொத்துக்கள் தான் . அந்த ஷரத்து இருந்தால் இப்போது உச்சமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்காததை சுட்டிக்காட்டி அதன் அணைகளை மத்திய அரசு கையகப்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புகள் / வழி இருந்திருக்கும் .அதனை இரக்கமின்றி அடைத்தவர் /மூடியவர் கருணாநிதி தான். அன்று அந்த ஷரத்து இல்லாததை குறிப்பிட்டு தான் ஜெயலலிதா அவர்கள் காவேரி ஆணையத்தை பல் இல்லாத ஆணையம் என்று விமர்சனம் செய்தார் . இது கருணாநிதியின் ஏழாவது துரோகம் .8.இப்படி அடுக்கடுக்காக காவேரி நதி நீர் விஷயத்தில் துரோகங்கள் செய்தவர் இந்த கருணாநிதி தான் .முன்பு ஒரு தமிழ் கவிஞர் - காவேரியை கடக்க இனி ஓடங்கள் தேவையில்லை ஒட்டகங்கள் போதும் - என்று சொன்னது போல தமிழகத்தில் காவேரி பாய்ந்த கழனிகள் எல்லாம் வறண்ட பாலைவனங்களாக மாற துரோகங்கள் செய்து தனது குடும்பத்தின் சொத்துக்களை பல பல பல பல மடங்காக பெருக்கியவர் ஆரிய எதிர்ப்பு புகழ் திராவிட கருணாநிதி தான் .காவேரி பாய்ந்த நிலத்தை கருக வைத்த அரசியல்வாதி கருணாநிதி தான் .ஆம் இவரின் துரோகங்களை தமிழர்கள் குறிப்பாக திருவாரூர் ,தஞ்சாவூர் ,நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூட இன்னும் அறியாதது தமிழகத்தின் சாபக்கேடு தான், ஆம் தமிழகத்தின் சாபக்கேடு

Rate this:
Manian - Chennai,இந்தியா
27-ஜூன்-201702:30:35 IST Report Abuse

ManianWell organized arguments. Thanks....

Rate this:
Balaji - Khaithan,குவைத்
19-ஜூன்-201714:34:18 IST Report Abuse

Balajiதமிழகத்தில் ஸ்திரமில்லாத ஆட்சி நடப்பதால் அனைவரும் கல்லெறிந்து கொண்டு இருக்கிறார்கள். மற்ற மாநிலத்தவர்கள் தங்கள் மாநில வளர்ச்சி பற்றி யோசித்து (கொள்ளையடித்தாலும்) திட்டங்களை மேற்கொள்கிறார்கள்.. ஆனால் இங்கு பதவி யாருக்கு என்பதை முடிவு செய்வதற்குத்தான் குழுக்கள் கூட்டங்கள் நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது... இதுக்கு ஜெ வும் ஒரு காரணம். ஜெ இருந்த வரை தமிழகத்தை யாராலும் சீண்ட முடியாத நிலையிலேயே வைத்திருந்தார்... ஆனால் அவர் இல்லாதது அனைவருக்கும் (மற்ற மாநிலத்தவர்களுக்கு) மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது..........

Rate this:
guru - chennai,இந்தியா
19-ஜூன்-201713:32:30 IST Report Abuse

guruஇதுவே கழக ஆட்சியாக இருந்திருந்தால் , ஆந்திராவுக்கு தடுப்பணைகளை இவரே கட்டி கொடுத்திருப்பார்

Rate this:
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
19-ஜூன்-201712:09:03 IST Report Abuse

CHANDRA GUPTHANஇவனும் இவங்கப்பனும் வாயில எதை வெச்சுண்டிருந்தார்கள்? இன்னும் இந்த பொறம்போக்குகளை நம்பும் தமிழக மக்களை இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் திருத்த முடியாது .

Rate this:
19-ஜூன்-201710:44:19 IST Report Abuse

PandiKalaதமிழகத்திற்கு எதிராக ஆந்திர கேரள அரசுகள் கட்டும் தடுப்பணைகளுக்கு தமிழகத்து மணலை கடத்தும் புண்ணியவான்கள் இங்கு உள்ள ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகள்.

Rate this:
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
19-ஜூன்-201709:49:56 IST Report Abuse

Idithangi இவர் துணை முதல்வாராய் இருந்த போது எத்தனை தடுப்புமுனை காட்டினார் என்று ஆதாரத்தோடு தெரிவிக்க வேண்டும்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-ஜூன்-201717:53:55 IST Report Abuse

Kasimani Baskaranகல்லணை கட்டியதே திமுகதான்......

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஜூன்-201708:43:32 IST Report Abuse

Srinivasan Kannaiyaமுதலமைச்சர் கனவில் இருக்கும் அவர் பாயத்தான் செய்வார்...

Rate this:
arudra1951 - Madurai,இந்தியா
19-ஜூன்-201707:39:20 IST Report Abuse

arudra1951இவரை நம்பாதீர்கள். இவர் காலத்தில் தான் தமிழ் நாடே குட்டிச்சுவர் ஆகிப்போனது. எப்படியாவது நாற்காலியை பிடிக்க துடிக்கிறார்

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
19-ஜூன்-201707:30:42 IST Report Abuse

தேச நேசன் ராகுல் தான் உங்களுக்கு நெருக்கமா கிவிட்டாரே அவரிடம் சொல்லி தடுப்பணை கட்டுவதை எதிர்த்து ஆந்திர காங்கிரசாரைப் போராட வைக்கலாமே

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement