இந்திய அணியின் கனவு தகர்ந்தது| Dinamalar

இந்திய அணியின் கனவு தகர்ந்தது

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
இந்திய அணியின் கனவு தகர்ந்தது

ஓவல்: சாம்பியன்ஸ் டிராபி பைனலில் சொதப்பிய இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்று கோப்பையை கோட்டைவிட்டது.இங்கிலாந்தில் எட்டாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர் (மினி உலக கோப்பை) நடந்தது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி 'பவுலிங்' தேர்வு செய்து அதிர்ச்சி அளித்தார்.பாகிஸ்தான் அணிக்கு பகர் ஜமான் அடிக்க, 50 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 338 ரன்கள் குவித்தது.பின், கடின இலக்கை துரத்திய இந்திய அணி, முகமது ஆமிர், 'வேகத்தில்' ஆட்டம் கண்டது. ரோகித் சர்மா, கோஹ்லி, தவான், யுவராஜ், தோனி விரைவாக கிளம்பினர்.கடைசி கட்டத்தில் ஷதாப் கான் ஓவரில், 'ஹாட்ரிக்' சிக்சர் அடித்த ஹர்திக் பாண்ட்யா, 32 பந்தில் அரைசதம் எட்டி ஆறுதல் அளித்தார். இந்திய அணி, 30.3 ஓவரில், 158
ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.பாகிஸ்தான் சார்பில் முகமது ஆமிர், ஹசன் அலி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.ஆட்டநாயகன் விருதை ஜமான் வென்றார்.

ஹாக்கியில் 'ஹாட்ரிக்' வெற்றி : உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்றுக்கான லீக் போட்டியில், கோல் மழை பொழிந்த இந்திய அணி 7 - 1 என்ற கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இதன்மூலம் 'ஹாட்ரிக்' வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.லண்டனில், ஆண்களுக்கான உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்று நடக்கிறது. இதில் அர்ஜென்டினா, மலேஷியா, இந்தியா, தென் கொரியா என, 10 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. இந்திய
அணி, 'பி' பிரிவில் நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, பாகிஸ்தான், கனடா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.முதலிரண்டு போட்டிகளில் ஸ்காட்லாந்து, கனடா அணிகளை வீழ்த்திய இந்தியா, நேற்று நடந்த 3வது லீக் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதியது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங், 'பெனால்டி கார்னர்' மூலம் முதல் கோல் அடித்தார். பின், 21, 24வது நிமிடங்களில் இந்தியாவின் தல்விந்தர் சிங், 2 கோலடித்து கைகொடுத்தார். முதல் 30 நிமிடங்களின் முடிவில் இந்தியா 3 - 0 என முன்னிலையில் இருந்தது.ஆட்டத்தின் 33வது நிமிடத்தில்
கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங், மீண்டும் கோலடித்தார். தொடர்ந்து அசத்திய இந்தியாவுக்கு 47, 49வது நிமிடங்களில் முறையே ஆகாஷ்தீப் சிங், மோர் பர்தீப் தலா 1 கோலடித்து கைகொடுத்தனர். ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் பாகிஸ்தானின் முகமது உமர் பூட்டா, 1 'பீல்டு' கோல் அடித்து ஆறுதல் தந்தார். பின், 59வது நிமிடத்தில்
இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங், 2வது கோல் அடித்தார்.ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 - 1 என வெற்றி பெற்றது. நாளை நடக்கவுள்ள 4வது லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்தை
எதிர்கொள்கிறது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Susainathan -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201719:09:39 IST Report Abuse
Susainathan it means already decided to get match for failed virat kohli itself
Rate this:
Share this comment
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201722:39:02 IST Report Abuse
Mannai Radha Krishnanபணம் செய்யும் வழி.....சூதாட்டம்....வியாபாரம்....BUSSINESS ....தான் இன்றைய விளையாட்டு போட்டிகள்...
Rate this:
Share this comment
Cancel
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
19-ஜூன்-201712:05:14 IST Report Abuse
Mohammed Abdul Kadar டாஸ் வெண்சு பேட்டிங் செய்யாமல் பீல்டரிங் தேர்வு செய்தது பெரும் தவறு , கோஹ்லிக்கு ஓவர் காண்பிடென்ஸ்
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
19-ஜூன்-201707:39:31 IST Report Abuse
srisubram welldone Harman preet we want goals through penalty corner... we are always getting lot of penalty corner chances but we failed to convert it as a goal.. if we improve it definitely we can win all the games in Hockey..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.