ஆளுங்கட்சி செயலரின் 1க்கு 5 வசூல் வேட்டை!| Dinamalar

ஆளுங்கட்சி செயலரின் 1க்கு 5 வசூல் வேட்டை!

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ஆளுங்கட்சி செயலரின் 1க்கு 5 வசூல் வேட்டை!

''மாசம், 10 பேர், வேலையை விட்டு ஓடுறதுக்கு கடிதாசி கொடுக்காவ வே...'' என்றபடியே வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''நிறைய பேர், வேலையே கிடைக்காம அலையுறாங்க... நீங்க, யாரை சொல்றீங்க...'' என, கேட்டார் அந்தோணிசாமி.
''விருதுநகர் மாவட்டத்துல, மாசத்துக்கு, 5ல இருந்து, 10 எஸ்.எஸ்.ஐ.,க்கள், 'விருப்ப ஓய்வுல போறோம்'னு, கடிதம் கொடுக்காவ... எல்லாருமே, உடல்நிலையை காரணம் காட்டி தான், விருப்ப ஓய்வு கேட்காவ வே...
''ஆனா, உயர் அதிகாரிகள், 'டார்ச்சர்' தாங்க முடியாம தான், நிறைய பேர் ஓட்டம் பிடிக்காவ... எந்த நிகழ்ச்சியா இருந்தாலும், மொபைல் போன்ல, வீடியோவா, 'ரிக்கார்டு' பண்ணி, உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப சொல்லுதாவ வே...
''இதனால, நிறைய பிரச்னைகளை எஸ்.எஸ்.ஐ.,க்கள் சந்திக்காவ... அதான், தொல்லையை தோள்ல போடாம, பென்ஷனை வாங்கிட்டு, வீட்டுல இருக்கலாம்னு, வி.ஆர்.எஸ்., எழுதி
கொடுக்காவ...
''இப்படி, நிறைய பேர் எழுதி கொடுக்குறதால, அதை அனுமதிக்கிறதுலயும், தாமதம் ஏற்படுது வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''முற்றுகை போராட்டம் நடத்த போறாங்க...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார் அந்தோணிசாமி.
''யாரு பா...'' என கேட்டார் அன்வர் பாய்.
''தினகரன் அணி சார்புல, கர்நாடக மாநில, அ.தி.மு.க., செயலர் புகழேந்தியும், சம்பத்தும் தமிழகம் முழுக்க, பொதுக்கூட்டங்கள் நடத்திட்டு இருக்காங்க...
''இந்த கூட்டங்கள்ல, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை, வரம்பு மீறி தாக்கி பேசுறாங்க... அதுலயும், புகழேந்தியின் பேச்சு, ரொம்பவும் அநாகரிகமா இருக்குங்க...
''இதனால, பன்னீர் அணியினர் கொதிச்சு போயிருக்காங்க... கர்நாடக மாநிலத்துல இருக்கிற, ஜெ., பேரவை, எம்.ஜி.ஆர்., இளைஞரணின்னு பல அணிகளின் நிர்வாகிகளும் சேர்ந்து, புகழேந்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு பண்ணிஇருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''ஒரு வேலைக்கு, ஐந்து பேரிடம் வசூல் பண்றார் ஓய்...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.
''அட... யாரு பா அது...'' என்றார் அன்வர் பாய்.
''மதுரை மாவட்டத்துல இருக்கிற, அ.தி.மு.க., ஒன்றிய செயலர் ஒருத்தரை தான் சொல்றேன்... இவர் ஒன்றியத்துல, 34 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்ப இருக்கா ஓய்...
''இதுக்கு, ஒரு பணியிடத்துக்கு, ஐந்து பேர்கிட்ட, தலா, 3 லட்சம் ரூபாய் வரைக்கும் வசூல் பண்ணிட்டு இருக்கார்... இதுல ஒரு பங்கு, பொதுக்குழு உறுப்பினர் ஒருத்தர் மூலமா, மாவட்ட செயலருக்கு போயிடறது ஓய்...
''இதுல, பெரிய வேடிக்கை என்னன்னா, சொந்த கட்சிக்காராளை விட, தி.மு.க., மாதிரியான மாற்று கட்சிக்காரா சிபாரிசுக்கு தான், ஒன்றியம் முன்னுரிமை கொடுக்கறார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
பெஞ்சில் இருந்து எழுந்த அன்வர் பாய், ''செல்லபாண்டி, தங்கராஜ், ராஜன் செல்லப்பா எல்லாம் வர்றாங்க... பேச ஆரம்பிச்சா, விட மாட்டாங்க... கிளம்புவோம் பா...'' என்றபடியே வேகமாக நடக்க, பெரியவர்களும் பின்தொடர்ந்தனர்.

Advertisement

மேலும் டீ கடை பெஞ்ச் செய்திகள்:

அக்டோபர் 18,2017

அக்டோபர் 17,2017

அக்டோபர் 16,2017

அக்டோபர் 15,2017

அக்டோபர் 14,2017

அக்டோபர் 13,2017


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201718:56:21 IST Report Abuse
நெல்லை மணி, ''விருதுநகர் மாவட்டத்துல, மாசத்துக்கு, 5ல இருந்து, 10 எஸ்.எஸ்.ஐ.,க்கள், 'விருப்ப ஓய்வுல போறோம்'னு, கடிதம் கொடுக்காவ. இந்த செய்தியை நம்ப முடியலேய. இந்த பதவிக்கு எத்தனையோ லட்சங்கள் பணம் கப்பம் கட்டி வாரானுக. ஒரு சாதாரண PC போலீஸ் கான்ஸ்டபிலே பணத்தை அரிப்பு வைத்து அரிக்கிறான். எஸ்.எஸ்.ஐ பதவி என்றால் பெரிய அரிப்பு வைத்து அரிப்பானுக. பிறகு எதற்கு விருப்ப ஓய்வுல போறானுக?
Rate this:
Share this comment
Cancel
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201718:45:20 IST Report Abuse
நெல்லை மணி, ஒரு பணியிடத்துக்கு, ஐந்து பேர்கிட்ட, தலா, 3 லட்சம் ரூபாய் வரைக்கும் வசூல் பண்ணிட்டு இருக்கார். அப்படியானால் 4 பேர் ஏமாற்றப்படுவார்கள் அல்லவா? அந்த 4 பேரும் புகார் அளிக்க மாட்டார்களா? சனநாயக நாடு விளங்கிடும்?
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
19-ஜூன்-201713:35:04 IST Report Abuse
Giridharan S எல்லா துறைகளிலும் இந்த torture இருக்கத்தான் செய்கிறது அதற்காக விருப்ப ஓய்வில் சென்றால் எப்படி. தைரியமாக எதிர்கொள்ளவேன்றும். ஆனால் உண்மை என்னவென்றால் பழைய ஆட்கள் எல்லாம் இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாமல் திணறுகிறார்கள் காரணம் உயர் அலுவலர்களாக இருப்பவர்கள் நேரடி நியமனம் பெற்று வருபவர்கள் அதான். Experience always speaks
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.