சிவில் சர்வீஸ் தேர்வில் ஜி.எஸ்.டி., பற்றி கேள்வி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிவில் சர்வீஸ் தேர்வில் ஜி.எஸ்.டி., பற்றி கேள்வி

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (4)
Advertisement
தேர்வு,  ஜி.எஸ்.டி, சிவில் சர்வீஸ் தேர்வு, மோடி, மத்திய அரசு,  மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பினாமி சட்டம், வித்யாஞ்சலி யோஜனா, GST, Goods and Services Tax, Exam, Civil Service Exam, Modi, Central Government, Vidyanjali Yojana, UPSC, Union Public Service Commission,

புதுடில்லி: சிவில் சர்வீஸ் முதல் கட்ட தேர்வில், ஜி.எஸ்.டி., பற்றியும், மோடி அரசின் திட்டங்கள் பற்றியும், கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீஸ் தேர்வுகளை, ஆண்டுதோறும் மூன்று பிரிவாக நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான முதல் கட்ட தேர்வு, நேற்று நடந்தது. இந்த தேர்வை எத்தனை பேர் எழுதினர் என்ற விபரத்தை யு.பி.எஸ்.சி., தெரிவிக்கவில்லை.

இந்த தேர்வில், ஜூலை முதல் அமல்படுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி., குறித்தும், மத்திய மோடி அரசின் திட்டங்கள் குறித்தும், கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவதால் ஏற்படுத்தும் பலன்கள் என்ன என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மேலும், மோடி அரசின் பினாமி சட்டம், வித்யாஞ்சலி யோஜனா உட்பட பல திட்டங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

Advertisement