மாலியில் பயங்கரவாத தாக்குதல்; 2 பேர் பலி| Dinamalar

மாலியில் பயங்கரவாத தாக்குதல்; 2 பேர் பலி

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (2)
Advertisement

பமாகோ: மாலியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாயினர். 32 பேர் மீட்கப்பட்டனர்.

மாலி தலைநகரான பமாகோ அருகே உள்ள பிரபல ரிசார்ட் ஒன்றில் துப்பாக்கிகளுடன் பயங்கரவாதிகள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பொதுமக்களில் 2 பேர் பலியாயினர். தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக நுழைந்து 32 பேரை மீட்டனர். சிலர் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த 2015 நவ., மாதம் மாலியில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.Advertisement