Tn tribal dettlement finally gets electricity for first time since independence | சத்தியமா நம்புங்க! : இந்த கிராமத்திற்கு தற்போது தான் மின்சாரம் கிடைத்துள்ளது....| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சத்தியமா நம்புங்க! : இந்த கிராமத்திற்கு தற்போது தான் மின்சாரம் கிடைத்துள்ளது....

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மின்சாரம், சுதந்திரம், கிராமம், கோவை, இந்தியா, செம்புக்கரை, தமிழக அரசு, காட்டு யானைகள்,  மின்சார வசதி, கவுண்டம்பாளையம், எம்.எல்.ஏ. ஆறுகுட்டி, Electricity, Freedom, Village, Coimbatore, India, Chembukarai, Tamil Nadu Government, Wild elephants, electricity facility, Goundampalayam, MLA Arukutti

கோவை : நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆனநிலையில், இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் உள்ள ஒரு குக்கிராமத்திற்கு தற்போது தான் மின்சார வசதியே கிடைத்துள்ளது என்பதை நம்பமுடிகிறதா!!!
கோவை மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கிராமமான செம்புக்கரைக்கு கடந்த சனிக்கிழமை ( ஜூன் 17ம்) தேதி தான் முதன்முறையாக மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள், தற்போது தான் மின்சார பல்பு ஒளிர்ந்ததையே நேரில் பார்த்திருக்கிறார்கள்....

மலைப்பகுதி கிராமங்களான செம்புக்கரை மற்றும் தூமானூர் பகுதிகளுக்கு மி்னசார வசதி வழங்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், மின்சார வாரியத்தால் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது எடுத்தஎடுப்பிலேயே கிடப்பில் போடப்பட்டது. பின் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுகுட்டியின் நடவடிக்கைகளால், கடந்த ஜனவரி மாதம் இந்த ஒப்பந்தம் மீண்டும் உயிர்பெற்றது. 200 குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமங்களில், நான்கில் ஒருபகுதி மக்களுக்கு தான் தற்போது மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆனநிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்திற்கு தற்போது தான் மின்சார வசதியே கிடைத்துள்ளது.

தமிழக அரசு இலவசமாக வழங்கிவரும் இலவச டி.வி. மிக்சி, பேன், கிரைண்டர் உள்ளிட்டவைகள் இப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தாலும், மின்சார வசதி இல்லாததனால், பல ஆண்டுகளாக அவைகள் இவர்களது வீட்டினும் வெறும் காட்சிப்பொருளாகவே இருந்து வந்துள்ளன.
காட்டு யானைகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் மி்ன்கம்பங்கள் நடுவதில் பிரச்னைகள் உள்ளிட்ட காரணங்களால், இப்பகுதிகளில் மின்சார வசதி ஏற்படுத்த காலதாமதம் ஆனதாகவும், தற்போது பணிகள் துவங்கப்பட்டு துரிதகதியில் நடைபெற்று வருவதால், எஞ்சிய பகுதிகளுக்கும் மிகவிரைவில் மின்வசதி செய்து தரப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
19-ஜூன்-201712:44:37 IST Report Abuse
samuelmuthiahraj இதுவரை தமிழத்தை ஆண்டிட்ட முதல்வர்களும் மின்துறை அமைச்சர்களும் துணை முதல்வர்களும் தங்களது செயல்பட தன்மைக்கு தகுந்த தண்டனைக்கு உள்ளாக்கிடவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
19-ஜூன்-201712:36:25 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்தமாதிரி கிராமங்கள் பல ஆயிரம் நம் நாட்டில் உள்ளது என்று பதவி என்ற உடனேயே இதற்கென சிறப்பு திட்டத்தை போட்டு செயல்படுத்தி வருகிறார் மோடி , மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயலும் அதை சிறப்பாக நடைமுறை படுத்தி வருகிறார். மாநிலங்கள் இவருடன் சேர்ந்து பணியாற்றினால் விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Suresh Ramasamy - Coimbatore,இந்தியா
19-ஜூன்-201711:22:49 IST Report Abuse
Suresh Ramasamy மின்சாரத்தை யாருக்குமே குடுக்காதீங்க..அப்ப தான் தமிழகம் மின்மிகை மாநிலமாகவே இருக்கும்.இவனுங்க எந்த நம்பிக்கைல மிக்சி..மின்விசிறி குடுத்தானுங்க.முட்டாள் பயலுக.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
19-ஜூன்-201711:14:53 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> என்னாய்ய்யஇந்த முன்னாள் இந்நாள் மந்திரி மற்றும் பணம் படைச்சவனுகலாம் ஒரு நிமிஷம் கரெண்ட் போனால் தவிப்பானுக பாவம் அவங்க ஏழைகள் தானே ஜஸ்ட் வோட்டு மட்டுமே போட்டானுக பலன் என்ன பிக் ஜீரோ தானே இதுபோல இன்னும் பலக்கிராமங்களே இருக்கலாம் இந்தியாலே நிச்சயமா. பல கிராமங்கள்லே குடிநீர் கிடையாதுங்க தெருவுக்கு தெரு குழாய்கள் இருக்கும் அவ்ளோதான் திறந்தாள் புஸ்ஸுன்னுகாற்றுத்தான் வரும் எவன் வந்தாலும் ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ பணம்தான் சேர்ப்பான் தன் குடும்பங்களின் வசதியே பெறுக்குவான் வேகமா சொத்து சேர்க்கவேண்டிய நிலை
Rate this:
Share this comment
Cancel
ganesh - Chennai,இந்தியா
19-ஜூன்-201710:02:47 IST Report Abuse
ganesh இந்தியாவில் இன்னும் பல கிராமம் மின்சாரம் இல்லாமல் தான் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
19-ஜூன்-201709:35:23 IST Report Abuse
எப்போதும் வென்றான் நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடம் ஆனது தெரியும் ...இந்த கிராமம் எப்போது உருவாச்சு ?? அதை சொல்ல வேண்டும்...
Rate this:
Share this comment
Tamilan - coimbatore,இந்தியா
19-ஜூன்-201710:09:28 IST Report Abuse
Tamilanஇந்த கிராமம் உருவாகும்போது இந்தியாவே இல்லைங்க. எங்க வீட்ல இருந்து 10 மைல் தொலைவில் தான் இருக்கு. காலம் காலமா அவங்க அங்கதான் இருக்காங்க...
Rate this:
Share this comment
கோீூபகக - BENGALURU,இந்தியா
19-ஜூன்-201713:38:18 IST Report Abuse
கோீூபகககுட் ரிப்ளை......
Rate this:
Share this comment
Gopi - Chennai,இந்தியா
19-ஜூன்-201715:50:14 IST Report Abuse
Gopiசரியா சொன்னீங்க தமிழன் அவர்களே. இவர்கள் பழங்குடியினர் என்பதை படித்து தெரிந்து கொண்டேன். உண்மையில் சொல்லப்போனால் சென்னைக்கு பக்கத்தில் போரூரில் - ( இப்பொழுது செங்குன்றம் வரைக்கு சென்னை தான் அப்பல்லாம் பூந்தமல்லீலேர்ந்து சென்னை டவுனுக்குள்ள வர நான் மெட்றாஸ் போயிட்டு வரேன், பட்டணம் போயிட்டு வரேன்னு தான் சொல்லுவாங்க ) கரண்ட் கிடையாது. கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முக்கியமான இடம். ஏன்னா இங்கிருந்து தான்அருகிலுள்ள திரைப்பட ஸ்டுடியோக்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. நாம அப்பவே அவ்வளவு விவரம் தெரிஞ்ச முன்னோடிகள்...
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
19-ஜூன்-201717:50:38 IST Report Abuse
Shriramஅதியமான் இது இப்பத்தான் 3 வருஷம் முன்னாடி மோடி வந்த பின்னாடி உருவாச்சு ,, போடாங்கோ...
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
19-ஜூன்-201709:33:15 IST Report Abuse
balakrishnan நமது தமிழ்நாடு ஒரு வளர்ந்த நாடு, இங்கேயே இப்படி ஒரு கிராமம் இருந்திருக்கிறது, இத்தனைக்கும் தமிழகத்தில் சுமார் 40 - 50 ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்க ஆரம்பித்து விட்டார்கள், இது போல எத்தனை கிராமங்கள் இந்திய முழுவதும் இருக்கிறதோ
Rate this:
Share this comment
19-ஜூன்-201712:34:19 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்//நமது தமிழ்நாடு ஒரு வளர்ந்த நாடு// திராவிட கட்சிகளுக்கு சொம்படித்தது போதும், தமிழ்நாடு தற்போது லஞ்சம் ஊழலில் தான் வளர்ந்த நாடு. நாட்டை சீரழித்து விட்டு என்னவோ இவர்கள் தான் இந்த வளர்த்தது போல பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி திட்டங்களை செயல்படுத்த நிதியும் இல்லை அந்த நிதியை திரட்ட மனமும் இல்லை இவர்களுக்கு....
Rate this:
Share this comment
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
19-ஜூன்-201714:10:39 IST Report Abuse
பாமரன்கரெக்டு அண்ணாமலை... நாட்டிலேயே வளர்த்த மாநிலங்கள்னா அது மபி, உபி, ராஜஸ்தான் சத்திஸ்கர் மணிப்பூர் ஏன்... குஜராத் போன்றவைதான்...அங்கேயே போயிடுங்களேன்???? உங்களையெல்லாம் மேலே சொன்ன மாநிலங்களில் ஒரே ஒரு வாரம் இருக்க விட்டா போதும்... எல்லாத்தையும் மூடிக்கிட்டு தமிழ்நாட்டுல இருப்பீங்க... உங்க சொம்புகளும் வெளியே வராது.......
Rate this:
Share this comment
19-ஜூன்-201714:59:15 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்பாமரன் , நீ வாழ்கிற ஊரைக்கூட போட தைரியமில்லை உனக்கு, நீ வேண்டுமானால் கிணத்து தவளையாக இருக்கலாம் , நான் படித்து முடித்த உடனேயே பல மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் பணியாற்றியவன் (மொத்தம் 11 வருடங்கள் தமிழ்நாட்டிற்கு வெளியில்தான் பணியாற்றி இருக்கிறேன் ) . சும்மா என்னிடம் பம்மாத்து காட்டாதீர்கள்....
Rate this:
Share this comment
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
19-ஜூன்-201716:11:47 IST Report Abuse
பாமரன்அண்ணாமலை... 11 வருஷம்....ம்ம்ம்ம்.. ஓகே.. நான் 1988 ல இருந்து பல மாநிலங்களில் காஷ்மீர் தவிர எல்லா மாநிலத்திலையும் இருந்து வர்றேன்... இப்போ சென்னையில்தான் வாசம்... இப்போ சொல்லுங்க எங்கே நம் தமிழ்நாட்டைவிட நல்லதா பார்த்தீர்ன்னு ... நான் இன்னொரு முறை முயற்சி செய்யறேன்... (அதென்ன உங்க மாதிரி பாஜக சொம்புகளுக்கு மட்டும் மரியாதையா எழுத வர மாட்டேங்குது ...??)...
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
19-ஜூன்-201717:52:31 IST Report Abuse
Shriramஅவரு நம்மூருதான் லாகூரு,ஹாஹாஹா நீங்க வேணுன்னா பிஜேபி புடிக்கலேன்னா லாகூரு போய்டுங்கன்னு உங்க தம்பி நான் சொல்லுவேனா அண்ணா பாமரன் அண்ணா...
Rate this:
Share this comment
Cancel
Raman - kottambatti,இந்தியா
19-ஜூன்-201708:24:46 IST Report Abuse
Raman தமிழ் நாட்டிலேயே நிலைமை இப்படி என்றால் வட மாநிலங்களில் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கலாம்.... இதிலே எல்லா கிராமத்திலும் மின்சாரம் வந்துடிச்சின்னு கதை வேற..
Rate this:
Share this comment
19-ஜூன்-201715:00:57 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்கதை யாரும் சொல்லவில்லையே பெயர் மாற்றி மோசடி கும்பல். பல ஆயிரம் கிராமங்கள் இன்னும் மின்சாரம் பெறவில்லை என்றுதான் சிறப்பு திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது....
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
19-ஜூன்-201717:53:50 IST Report Abuse
Shriramராமா தமிழிநாட்டுலேயேவா ? அப்படி என்ன இருக்கு இங்க ? ஆமாமா சிங்கப்பூராக்கிட்டாரு அம்மா சுட்டாளின்...
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-ஜூன்-201708:22:24 IST Report Abuse
A.George Alphonse Well done Mr.Aarukutty for your initiative and efforts for providing power supply to these poor people. May God bless you and your family for good health and long lives. These poor people always remember you whenever the lights are glowing in their houses and areas and they all bless you.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஜூன்-201708:16:20 IST Report Abuse
Srinivasan Kannaiya மனசு இருந்து இருந்தால் எப்போவோ மின்சாரத்தை பார்த்து இருப்பார்கள்... அடிக்கடி எல்லா இடத்திலேயும் மின்சாரம் கொடுத்து விட்டோம் என்று சொன்னது பொய் என்று ஆகிவிட்டது அல்லவா.. இன்னும் பல குக்கிராமங்கள் மின்சாரம் என்னவென்றே தெரியாத நிலையில்தான் உள்ளது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை