உண்மையில் விவசாயிகளுக்காக போராடுகின்றனரா? பொறாமையில் பொங்கும் விவசாயிகள் சங்க தலைவர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உண்மையில் விவசாயிகளுக்காக போராடுகின்றனரா? பொறாமையில் பொங்கும் விவசாயிகள் சங்க தலைவர்கள்

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (36)
Advertisement
அய்யாக்கண்ணு, விவசாயிகள் போராட்டம், ரஜினி, நதிகள் இணைப்பு, திருச்சி, காவிரி நீர்,  தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்கம், தமிழகம், விவசாயிகள், Ayyakannu, Farmers Struggle, Rajini, Rivers Link, Trichy, Cauvery Water, National south Indian river Link Association, Tamil Nadu, Farmers

திருச்சி: விவசாயிகளுக்காக போராடுவதாக கூறிக் கொள்ளும் சங்கத் தலைவர்கள், ஒருவர் மேல் ஒருவர் பொறாமைப்பட்டு சமூக வலைதளங்களில் விமர்சித்து கொள்வது, அவர்கள் உண்மையில் விவசாயிகளுக்காக போராடுகின்றனரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழக விவசாயிகளுக்கு, காவிரி நீர் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகவும், வறட்சியால் வாடும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காகவும், பலவிதமாக போராடி வரும் விவசாய சங்க தலைவர்களில், முக்கியமானவர்களாக இருப்பவர்கள், அய்யாக்கண்ணு மற்றும் பி.ஆர்.பாண்டியன்.


ரூ.1 கோடி: இதில், அய்யாக்கண்ணு, தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்கம் என்ற பெயரில், டில்லியில் விதவிதமான போராட்டங்கள் நடத்தி, நாடு முழுவதும் பிரபலமானவர். அதேபோல், தமிழக விவசாயிகளுக்காக காவிரி நீரைப் பெற்றுத் தரவேண்டும் என்று விதவிதமாக போராட்டங்கள் நடத்தியும், தினமும் அறிக்கைகள் விட்டும் வருபவர் பி.ஆர்.பாண்டியன். இவர்களின் போராட்டங்கள், உரிய பலனைக் கொடுக்கிறதா என்பதை விட, இவர்களின் போராட்ட படங்களும், அறிக்கையும் தினமும் பத்திரிகை, 'டிவி'க்களில் வருகிறதா என்பதில் அதிக கவனம் செலுத்துவர். நதிகள் இணைப்புக்காக நடிகர் ரஜினி, 1 கோடி ரூபாய் தருவதாக அறிவித்துள்ளதை, கேட்டுப் பெறுவதற்காக, நேற்று அவரை சந்திக்க, அய்யாக்கண்ணு, விவசாயிகளுடன் சென்றார். அப்போது, ரஜினி, அய்யாக்கண்ணுக்கு சால்வை அணிவித்து, வரவேற்றார்.


அணை கட்டாதே: இது குறித்து, சமூக வலைதளங்களில், பி.ஆர்.பாண்டியன் பதிவு செய்து உள்ள கருத்து: மத்திய அரசே, நதிகளை இணைக்க தயாரில்லை. இவர்கள் எங்கே இணைக்கப் போகின்றனர். காவிரி நீர், தமிழகம் வருவதை தடுத்து அணை கட்டுகிறான். அதை தடுக்க மத்திய அரசு மறுக்கிறது. காவிரி நீர் கேட்டதால், தமிழன் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது; தீ வைத்து கொளுத்தப்பட்டது. அப்போது வாய் திறக்காத ரஜினி, 1 கோடி ரூபாய் கொடுத்து நதிகளை இணைக்கப் போகிறாராம். அய்யா அய்யாக்கண்ணு அவர்களே, காவிரியில் அணை கட்டாதே என்று ரஜினியை வாய் திறக்க சொல்லுங்கள். நதிகள் இணைப்பதை அப்புறம் பார்க்கலாம். காவிரி நீரின்றி தமிழகம் இல்லை. அதை விடுத்து, விளம்பரத்திற்காக காவிரி போராட்டத்தை திசை திருப்ப வேண்டாம். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.


பொறாமையில் பொங்கும் விவசாய தலைவர்கள்

இதேபோல், பி.ஆர்.பாண்டியனுக்கு ஆதரவாக மயூதரன் என்பவர் செய்துள்ள பதிவில், 'ரஜினியைப் போய் பார்ப்பது என்றால், பார்த்து தொலைக்க வேண்டியது தானே. எதுக்கு இந்த வேலை. 'காவிரி நதிநீர் என்பது தமிழர்களின் உரிமை. அதை தடுப்பது குறித்து தட்டிக் கேட்க வக்கற்றவனிடம் கையேந்துவது விளம்பரத்திற்காகவே' என கூறியுள்ளார். இது, அய்யாக்கண்ணு தரப்பினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களும், பதிலுக்கு பி.ஆர்.பாண்டியன் குறித்து, விமர்சனம் செய்த தயாராகி வருகின்றனர். இப்படி, ஒருவருக்கு ஒருவர், புகழ் பெற்று விடக்கூடாது என பொறாமையில் பொங்கி வழியும் தலைவர்கள் தான், காவிரி நீரை பெற்றுத் தருவர்; அரசின் உதவிகளையும், கடன் தள்ளுபடியையும் பெற்றுத் தருவர் என, விவசாயிகள் நம்புகின்றனர்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-ஜூன்-201717:02:42 IST Report Abuse
இந்தியன் kumar நதிகளை இணைத்தால் விவசாயிகளின் பிரச்சினை தீரும் , ஒவொரு விவசாய பொருளுக்கும் அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் , மழை நீர் சேகரிக்க பட வேண்டும் , தடுப்பணைகள் கட்டி கடலில் நீர் கலப்பதை குறைக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
19-ஜூன்-201716:26:20 IST Report Abuse
Endrum Indian "பொறாமையில்" பொங்கும் அல்ல. "இயலாமையில்", "பொல்லாமையில்", "பொச்செருப்பில்" என்று இருத்தலே நலம்.
Rate this:
Share this comment
Cancel
S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா
19-ஜூன்-201715:53:34 IST Report Abuse
S ANBUSELVAN தற்போதைய அரசும், முந்தையை அரசும், கடந்த 50 ஆண்டுகளை ஆட்சி நடத்தி வந்த திமுக, அதிமுக இவர்கள் விவசாயம் செழிக்க என்ன செய்தார்கள் என்று விவாதம் நடத்தாமல் அவர்களுக்காக போராட்டம் நடத்துபவர்களை கேவலப்படுத்தும் பத்திரிகைகளை பார்த்து கேப்டன் கேவலமாக திட்டியது சரிதானோ என்று தோன்றுகிறது.... விவசாயம் இல்லாமல் வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலை வரட்டும் என்றுதான் இன்றைய ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்....... அய்யாக்கண்ணு போராட்டம் சரியோ அல்லது தவறோ இதே போல் மற்றவர்களிடம் கேள்வி கேட்க ஊடகங்கள் தயாரா ? ஜெயா ஆட்சிக்காலத்தில் அனைத்து ஊடகங்களும் ஜெயாவின் அடிமைகள் போல் இருந்தது குறிப்பிடத்தக்கது......
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
19-ஜூன்-201715:49:59 IST Report Abuse
Balaji எந்த துறையாக இருந்தாலும் ஒரே ஒரு சங்கம் தான் இருக்க வேண்டும் என்று அறிவித்தால் தான் இதுபோன்ற போட்டி, காழ்ப்புணர்ச்சியை அரசியல் செய்வது போன்றவை குறையும்........ அதுமட்டும் அல்லாமல் எந்தத்துறையாக இருந்தாலும் கட்சிக்கு ஒன்னாக சங்கங்கள் இருப்பது யார் எதிர்க்கட்சியாக இருக்கிறார்களோ அவர்களின் சங்கத்தை வைத்து ஆளும்கட்சி சங்கமல்லாத மற்ற சங்கங்களை கூட்டு சேர்த்துக்கொண்டு அரசுக்கெதிராக போராடுவதும் வாடிக்கையாகிவிட்டதும் குறையும்....................
Rate this:
Share this comment
Cancel
S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா
19-ஜூன்-201715:48:07 IST Report Abuse
S ANBUSELVAN அய்யாக்கண்ணுவை தூற்றுவதில் எல்லா ஊடகங்களும் ஒன்றுதான். அவர்களின் நோக்கம் போராடுபவர்களை பற்றி தவறாக பேசி அதனை மட்டும் முன்னிலை படுத்தி அவர்களை கேவலப்படுத்த வேண்டும் என்பது தான்... அய்யாக்கண்ணு போராடியதால் தான் தற்போது மற்ற மாநில விவசாயிகளும் தற்போது போராடி வருகின்றனர். அதற்கு காரணம் விவசாயிகளை மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கம், விவசாயிகள் அல்லாத மக்கள் (உதாரணம் சென்னை மக்கள் மற்ற மாவட்ட மக்கள் எப்படி போனால் என்ன என்று இருப்பதுண்டு.), மற்றும் ஊடகங்கள் புறக்கணித்து அவர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை... தீபா தீபக் சண்டை, நடிகையின் கள்ளக்காதல், நடிகை வீட்டு நாய் போன்ற முக்கியமானவைகளுக்கு மட்டும் பிரேக்கிங் நியூஸ் என்று தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளில் முதல் பக்கத்திலும் வெளியிட்டு தங்களது தரம் எப்படி பட்டது என்று நிரூபித்து வருகின்றன...
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
19-ஜூன்-201718:27:31 IST Report Abuse
Pasupathi Subbianநான் முன்பிருந்தே கூறி வருகிறேன். திருச்சி காரன் என்ற வகையில் திரு அய்யா கண்ணு அவர்கள் விவசாயிகளின் தலைவராக ஆக தகுதியில்லை என்று , இப்போது அடுத்தவர்கள் கூறும்பொழுது அது உங்களுக்கு தாமதமாக புரியும்....
Rate this:
Share this comment
Cancel
S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா
19-ஜூன்-201715:41:34 IST Report Abuse
S ANBUSELVAN இது போன்ற கட்டுரைகளை தினமலர் வெளியிடுவது ஏன்? விவசாயிகளுக்காக போராடுபவர்களை தூற்றி அவர்களிடையே பிரிவை ஏற்படுத்தத்தானே ?
Rate this:
Share this comment
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
19-ஜூன்-201714:34:06 IST Report Abuse
jambukalyan உண்மையிலேயே விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க யாரும் தயாரில்லை - அதை வைத்து சொந்த லாபம்/அரசியல் லாபம் தேடிக்கொள்வதில்தான் எல்லோரும் அக்கறை காட்டுகின்றனர்?
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
19-ஜூன்-201712:33:22 IST Report Abuse
CHANDRA GUPTHAN யாரும் தடுப்பணை கட்டவேண்டும், மணல் கொள்ளை தடுக்க வேண்டும் என்று போராடவில்லை. விவசாய கடனை தள்ளுபடி செய் என்பது மட்டுமே இவர்களின் குறிக்கோள். தமிழக நீர் நிலைகளை மேம்படுத்தி வீணாகும் தண்ணீரை சேமித்து தமிழக நதிகளை இணைக்கலாமே. பிறகு முக்கிய நதிகளை இணைக்கலாம். அதெல்லாம் நாங்க செய்யமாட்டோம். ரஜினி ஒரு கோடி கொடுத்தா அய்யாக்கண்ணு வாங்கிய கடன் மட்டுமே அடையும். இவன் ஒரு டுபாக்கூர், செய்திகளில் வரவேண்டும் என்பதே இவன் குறிக்கோள். விளம்பர பிரியன்
Rate this:
Share this comment
Cancel
19-ஜூன்-201712:24:43 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் விவசாயிகளையே கேவலப்படுத்தியவன் இந்த அய்யாக்கண்ணு.
Rate this:
Share this comment
S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா
19-ஜூன்-201718:09:02 IST Report Abuse
S ANBUSELVANஎந்த விவசாயியை கேவலப்படுத்தியவர்? முதலில் உங்கள் முகமூடியை கழற்றுங்கள்.......
Rate this:
Share this comment
Cancel
jysen - Madurai,இந்தியா
19-ஜூன்-201712:22:04 IST Report Abuse
jysen They look more like circus clowns. They have brought contempt for the whole Tamil people. The government put these fellows in jail.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை