தினகரன்- முதல்வர் மோதல் முற்றுகிறது; சட்டசபையில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ., வெளிநடப்பு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன்- முதல்வர் மோதல் முற்றுகிறது; சட்டசபையில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ., வெளிநடப்பு

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சட்டசபை,  ஆளும்கட்சி, எம்.எல்.ஏ., வெளிநடப்பு, எம்.எல்.ஏ., டிடிவி  தினகரன், முதல்வர்,சென்னை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்க தமிழ்செல்வன், அமைச்சர்,     Dinakaran, MLA, TTV Dinakaran, Assembly, Ruling Party, walkout, Chief Minister, Chennai, Chief Minister Edappadi Palanisamy, Thanga Thamilselvan, Minister,

சென்னை: தமிழக சட்டசபையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., தங்க தமிழ்செல்வன் வெளிநடப்பு செய்தார். ஆளும்கட்சி எம்.எல்.ஏ., வெளிநடப்பு செய்துள்ளது தினகரன் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடையிலான பனிப்போரை வெளிகாட்டியிருக்கிறது. தமிழக சட்டசபை இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் கூடியது. இதில் ஆண்டிப்பட்டியில் ஆரம்ப சுகாதர நிலையம் அமைக்காதது ஏன் என தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் பதில் எதுவும் அளிக்கவில்லை. இதனையடுத்து தங்க தமிழ்செல்வன் அமைச்சரை கண்டித்து வெளி நடப்பு செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வரை சந்தித்து கட்சியில் தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தங்க தமிழ்செல்வன் கோரிக்கை விடுத்திருந்தார். கட்சி எங்களுக்கு; ஆட்சி உங்களுக்கு எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் அவர் ஆளும்கட்சியாக இருந்தும் அரசை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளது கட்சியில் இருக்கும் குமுறலையே வெளிக்காட்டியுள்ளது.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
19-ஜூன்-201722:28:45 IST Report Abuse
Ramamoorthy P பெயரிலேயே தங்கத்தை வைத்திருக்கும் இவருக்கு கிடைத்த தங்க கட்டிகள் எவ்வளவு?
Rate this:
Share this comment
Cancel
tamilan - Bangalore,இந்தியா
19-ஜூன்-201718:08:51 IST Report Abuse
tamilan தங்க தமிழ் செல்வனுக்கு இப்பதான் ஆண்டிபட்டி தொகுதி மேல அக்கறை பொங்கிட்டு வருது.. இவளோ நாள் எங்க போனார்...
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
19-ஜூன்-201718:01:49 IST Report Abuse
Cheran Perumal தினகரனை ஏன்முதல்வர் ஆக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பிக்கூட வெளிநடப்பு செய்யலாம். கோமாளி கூத்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
19-ஜூன்-201717:12:44 IST Report Abuse
muthu Rajendran சட்டமன்றத்தில் ஒரு வினாவை எழுப்ப வேண்டுமானால் எழுதி கொடுத்து 42 நாட்களுக்கு பிறகு பட்டியலிட்டு வரும் நாளன்று அதற்கு பதில் கிடைக்கும். அப்போது வேண்டுமானால் துணை கேள்விகளை கேட்கலாம். மற்றபடி திடீரென்று எதாவது ஒன்றை கேட்கவேண்டுமானால் அதை கேள்வி நேரம் முடிந்து அடுத்த பொருள் குறித்து எடுப்பதற்கு முன் அதாவது ஸிரோ அவர் என்று சொல்லப்படுகிற நேரத்தில் கேட்கலாம். அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் தனியே இது குறித்து வினா எழுப்பினால் பதில் தர இயலும் என்று தான் பதில் தரமுடியும் .எதாவது ஒரு பிரச்சனையை திடீர் என்று கேட்டு அதற்கு பதில் வேண்டும் என்று முரண்டு பிடிக்க முடியாது. மனதில் எதோ வைத்துக் கொண்டு எதையோ செய்ய முயல்கிறார் அவ்வளவு தான் . ஒரு மந்திரி பதவி தான் கொடுங்கய்யா எல்லாம் சரியாகி விடும்
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
19-ஜூன்-201716:44:02 IST Report Abuse
krishna இது போன்ற சுயநல அரசியல் வாதிகள் உள்ளவரை தமிழகத்தில் வளர்ச்சி இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
19-ஜூன்-201716:28:05 IST Report Abuse
karunchilai பங்காளிகளின் தெருச் சண்டை.
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - chennai,இந்தியா
19-ஜூன்-201714:59:27 IST Report Abuse
tamilselvan தங்க தமிழ்செல்வன் நீ வெற்றி அடைத்ததொகுதி மீண்டும் நின்று டெபாசிட் வாங்கடா எஙகள் அம்மாவால் வெற்றி அடைத்த
Rate this:
Share this comment
Cancel
19-ஜூன்-201714:50:30 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்த தகர தமிழ்ச்செல்வன் எல்லாம் பெரிய ஆளாகிவிட்டார்கள் (நாஞ்சில் சம்பத்தே பெரிய ஆளாக வலம்வரும்போது சொல்லவேண்டியதில்லை ) ஆனால் தினகரனுக்கு அடுத்த ஆப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது அதற்குள் எப்படியாவது தப்பித்துவிடலாம் என்று முயற்சிக்கிறார் பாவம்.
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201714:31:02 IST Report Abuse
karthikeyan நன்றி உள்ள ....
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
19-ஜூன்-201714:27:23 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு சந்தோஷம் என்று கூறுவார்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை