பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்| Dinamalar

பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்

Updated : ஜூன் 20, 2017 | Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (215)
Advertisement
பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர், ராம்நாத் கோவிந்த், பீகார் கவர்னர், அமித்ஷா

புதுடில்லி : ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்வதற்கான பா.ஜ., ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்தது. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்திற்கு பிறகு பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தற்போது பீகார் கவர்னராக உள்ள ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்திருப்பதாக அறிவித்தார்.


உபி.,யை சேர்ந்தவர்

இவர் உ.பி.,யில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். வழக்கறிஞரான இவர், 2015 ஆகஸ்ட் 8 ம் தேதி பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார். 1945, அக்., 1 ம் தேதி கான்பூரில் பிறந்த இவர், பா.ஜ., தலித் பிரிவின் தேசிய தலைவராக இருந்தவர். தற்போது இவருக்கு வயது 71. இவர், ஜூன், 23ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அமித்ஷா தெரிவித்தார். பா.ஜ., தங்கள் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து விட்டதால் காங்கிரசும் தங்களின் வேட்பாளரை எந்த நேரத்திலும் வெளியிடலாம் அல்லது பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X