பா.ஜ.,வின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்: 10 அம்சங்கள் Dinamalar
பதிவு செய்த நாள் :
ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்: 10 அம்சங்கள்

புதுடில்லி : ஜனாதிபதி தேர்லில் பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர், ராம்நாத் கோவிந்த், பீகார் கவர்னர், புதுடில்லி, ஜனாதிபதி தேர்தல்,  ராஜ்யசபா எம்.பி., வணிகவியல், டில்லி ஐகோர்ட், லக்னோ, டாக்டர் அம்பேத்கார் பல்கலை,  BJP presidential candidate Ramnath Govind, Governor of Bihar, New Delhi, presidential election, Rajya Sabha MP, Commerce, Delhi High Court, Lucknow, Dr. Ambedkar University,


ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய 10 அம்சங்கள் :

1. ராம்நாத் கோவிந்த், உ.பி.,யின் கான்பூரில் 1945 ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்தவர்.
2. இவர் கான்பூர் பல்கலை.,யில் வணிகவியல் மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர்.
3. தலிக் சமூக தலைவரான இவர் 1994 முதல் 2006 வரை 12 ஆண்டுகள் உ.பி.,யில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர்.

4. வழக்கறிஞரான இவர், 1977 முதல் 1979 வரை டில்லி ஐகோர்ட்டில் மத்திய அரசின் வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார். அதன் பிறகு 1980 முதல் 1993 வரை சுப்ரீம் கோர்ட்டின் மத்திய அரசு நிலை குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். 1978 ல் சுப்ரீம் கோர்ட் வழக்குறிஞராகவும் பணியாற்றி உள்ளார்.
1993 வரை டில்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞராக ஏறக்குறைய 16 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். 1971 ல் டில்லி பார் கவுன்சில் தலைவராகவும் இருந்துள்ளார்.
5. பார்லி., பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் குழு, பார்லி., உள்துறை விவகாரங்களுக்கான குழு, பார்லி., பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு குழு, பார்லி.,ன் சமூக நீதி மற்றும் அதிகாரத்துவ குழு, பார்லி.,ன் சட்ட மற்றும் நீதிக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக அங்கம் வகித்துள்ளார். ராஜ்யசபா குழு உறுப்பினராகவும்இருந்துள்ளார்.
6. பா.ஜ., தலித் மோட்சாவின் முன்னாள் தலைவராகவும், அனைத்து இந்திய கோலி சமாஜ் அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார். பா.ஜ.,வின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் இவர் இருந்துள்ளார்.
7. லக்னோ டாக்டர் அம்பேத்கார் பல்கலை.,யின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், கோல்கட்டா

Advertisement

இந்திய மேலாண்மை கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
8. ஐ.நா.,வில் இந்தியாவிற்கான பிரதிநிதியாகவும் இருந்துள்ள இவர், 2002 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஐ.நா., பொதுக் குழு கூட்டத்தில், இந்தியா சார்பில் உரை நிகழ்த்தி உள்ளார்.
9. திருமணமான ராம்நாத் கோவிந்த்திற்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
10. 2015 ம் ஆண்டு ஆக. 8ம் தேதி கோவிந்த், பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
20-ஜூன்-201721:25:31 IST Report Abuse

Sathish கெத்தான ஆளா தெரியலியே. உண்மையை சொன்னா ஐயா அப்துல் கலாமிற்கு பின் அந்த பதவியில் யாரை பார்த்தாலும் பிடிக்கவில்லை.

Rate this:
Raj - Chennai ,இந்தியா
20-ஜூன்-201720:45:35 IST Report Abuse

Rajசாதி சாயம் பூசாமல் இருந்தால், அம்பேத்கர் இன்னும் போற்றப்பட்டிருபார்.

Rate this:
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201716:28:27 IST Report Abuse

Tamilanபத்து அம்சங்கள் எல்லாம் ஒன்றும் இல்லை. ஒரே ஒரு அம்சம், மோடி கும்பல்களுக்கு டப்பாங்குத்து பொம்மையாக இருக்க தகுதி படைத்த ஒரே ஒருவர் இவராக இருக்கலாம். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. தன் வோட்டு வங்கியை விரிவு படுத்த இப்படி ஏதாவது வியூகம் வகுத்திருக்கலாம்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஜூன்-201715:44:47 IST Report Abuse

Endrum Indianஇதைத்தான் அரசியல் சதுரங்க காய் நகர்த்துதல் என்பது. இதே ஒரு தலித் அல்லாத நபரை தேர்ந்தெடுத்து இருந்தால் உடனே என்று மீடியாவில் குலைக்க அரசியல்வாதிகள் தயாராக இருந்திருப்பார்கள். பாவம் இப்போ அவர்களும் ஒரு தலித்தை தான் தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள் ஆகவே தான் மீரா குமார் அல்லது ஷிண்டே என்ற பெயர் அடிபடுகிறது.

Rate this:
Prabaharan - nagercoil,இந்தியா
20-ஜூன்-201714:00:45 IST Report Abuse

Prabaharanஇரண்டு கட்சிகளும் காங்கிரஸ், பி ஜெ பி ஒரே மாதிரி தான் போல . பிரதிபா பாட்டில், கோவிந்தா?

Rate this:
spr - chennai,இந்தியா
20-ஜூன்-201713:37:52 IST Report Abuse

spr1971 முதல் இன்றுவரை பொதுவாழ்வில் இருக்கும் இவரைக் குறித்து இதுவரை தெரியவில்லை என்பதே அவருக்கான நல்ல அடையாளம் அவரை "தலித்" பிரதிநிதி என்று முத்திரை குத்தாமல், இத்தனை காலம் பல்வேறு பொறுப்புக்களில் இருந்தும் ஊழல் குற்றச்சாட்டு இல்லாத ஒரு நபர் படித்தவர் தனது மூதாதையர் வீட்டையே ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு அளித்தவர் அப்படி இவரை அறிமுகப்படுத்துவதுதான் இந்தியர்களான நமக்கு மதிப்பு தரும் செயல் நம்மை நாமே மரியாதைக்குறைவாக நடத்திக் கொள்வது சரியல்ல ஆனால் திருமதி மீரா குமார் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் புதிய மக்களவையின் தலைவராக போட்டியின்றி மீரா குமார் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்மணி பல சிறப்பான சேவைகளை ஆற்றியவர் என்பதால் நல்ல தேர்வே தயவு செய்து இவர்களை "தலித்" என்று மட்டுமே அடையாளப்படுத்தாதீர்கள் நாட்டின் முதற்குடிமகன் நேர்மையானவராக ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவராக திறமையானவராக நாட்டுப்பற்று உள்ளவராக சமுதாய அக்கறை உள்ளவராக இருக்க வேண்டுமே தவிர மதம் இனம் மொழி இவற்றால் அடையாளம் காணப்படக்கூடாது அது நமக்கு அவமானம்

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
20-ஜூன்-201712:52:44 IST Report Abuse

ganapati sbநல்ல பல தகுதி திறமை படிப்பு அனுபவம் உள்ளவரைதான் ஜனாதிபதியாக தேர்ந்த்டுத்துள்ளனர் என தெரிகிறது வாழ்த்துக்கள்

Rate this:
Sampath Kumar - chennai,இந்தியா
20-ஜூன்-201712:04:31 IST Report Abuse

Sampath Kumarரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கு யாரு வந்தால் என்ன ?

Rate this:
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
20-ஜூன்-201708:55:36 IST Report Abuse

Ab Cdஇன்னொரு பிரதிபா பட்டீல்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201708:17:59 IST Report Abuse

Srinivasan Kannaiyaபணக்காரர்கள் உயர்ந்த ஜாதிக்கார்கள் இருந்ததாலும்... அவர்களை காப்பாற்ற வெளி உலகிற்கு ராம்நாத் கோவிந்த் அவர்களை முன் நிறுத்தி உள்ளார்.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement