ஜனாதிபதி தேர்தல்: சுவாரஸ்ய பின்னணி| Dinamalar

ஜனாதிபதி தேர்தல்: சுவாரஸ்ய பின்னணி

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (9)
Advertisement
ஜனாதிபதி, தேர்தல், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, அப்துல் கலாம், டி.என்.சேஷன், புதுடில்லி, பீஹார் கவர்னர் ராம்நாத் கோவிந்த், பக்ருதீன் அலி,  பிரதமர் இந்திரா,  ராஜேந்திர பிரசாத், 
President, Election, VV Giri, Neelam Sanjeeva Reddy,  Abdul Kalam, TN Session, New Delhi, Bihar Governor Ramnath Govind, Bakhruddin Ali, Prime Minister Indira, Rajendra Prasad,

புதுடில்லி: நாட்டின், 15வது ஜனாதிபதி தேர்தல் ஜூலை, 17 ம் தேதி நடக்க உள்ளது. பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளராக தற்போதைய பீஹார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.


ஒரே ஒரு முறை போட்டியின்றி தேர்வு

இதற்கு முன் முன் நடந்த, 14 ஜனாதிபதி தேர்தல்களில், ஒரு முறை மட்டுமே போட்டியின்றி தேர்வு நடந்துள்ளது. அது, ஏழாவது ஜனாதிபதி தேர்தல்; போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர் நீலம் சஞ்சீவ ரெட்டி. ஜனாதிபதியாக இருந்த பக்ருதீன் அலி அகமது மறைவினால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய திடீர் தேர்தல் நடந்தது. இதில், நீலம் சஞ்சீவ ரெட்டி உட்பட, 37 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். அதில், 36 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், 1977 ம் ஆண்டு ஜூலை, 21ம் தேதி நீலம் சஞ்சீவ ரெட்டி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.வி.வி.கிரி வெற்றி எப்படி

பிற ஜனாதிபதி தேர்தல்கள் அனைத்திலும் போட்டி இருந்தது. அதில், 1969ம் ஆண்டு ஆக., 6ம் தேதி நடந்த ஐந்தாவது ஜனாதிபதி தேர்தல் தான் கடும் போட்டியை சந்தித்தது. இதில், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி ஆகியோர் போட்டியிட்டனர். அப்போது காங்கிரசில் பிளவு ஏற்பட்டு இருந்தது.

அப்போதைய பிரதமர் இந்திரா தலைமையிலான காங்., வி.வி.கிரியை ஆதரித்தது. அவருக்கு தேர்தலில், 4,01,515 ஓட்டுக்கள் கிடைத்தன. கிரியை எதிர்த்து போட்டியிட்ட ரெட்டியை ஆதரித்த அணி, 'சிண்டிகேட்' என, அழைக்கப்பட்டது. இத்தேர்தலில் ரெட்டி 3,13,548 ஓட்டுக்கள் கிடைத்தன. 87,967 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் கிரி வெற்றி பெற்றார்.


அப்போதைய தேர்தல் மன்னன்

இதேபோல், நான்காவது ஜனாதிபதி தேர்தலிலும் கடும் போட்டி காணப்பட்டது. இதில் ஜாகிர் உசேன், கோட்டா சுப்பாராவ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், ஜாகிருக்கு, 4.71 லட்சம் ஓட்டுக்கள்; சுப்பாராவுக்கு, 3.64 லட்சம் ஓட்டுக்கள் கிடைத்தன. மிக அதிகபட்சமாக இந்த தேர்தலில் தான், 17 பேர் போட்டியிட்டனர். அவர்களில் பல வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.

முதல் ஜனாதிபதி தேர்தல், 1952ம் ஆண்டு மே, 2ம் தேதி நடந்தது. இதில் ராஜேந்திர பிரசாத் உட்பட, ஐந்து பேர் போட்டியிட்டனர். இதில், ராஜேந்திர பிரசாத்துக்கு, 5.60 லட்சம் ஓட்டுக்கள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட கே.டி.ஷா என்பவருக்கு ஒரு லட்சத்திற்கும் குறைவான ஓட்டுக்கள் கிடைத்தன.

இரண்டாவது ஜனாதிபதி தேர்தல், 1957ஜூலை, 6ம் தேதி நடந்தது. இதில், மூன்று போட்டியிட்டனர். ராஜேந்திர பிரசாத், 4.60 லட்சம் ஓட்டுக்கள் பெற்று மீண்டும் ஜனாதிபதியானார். அப்போதைய தேர்தல் மன்னன் சவுத்ரி ஹரி ராமுக்கு, 2,672 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தன.

இந்த ஹரி ராம், முதல் நான்கு ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டார். 1967ம் ஆண்டு மே, 6ம் தேதி நடந்த தேர்தலில் அவருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. அதன் பிறகே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை அவர் கைவிட்டார்.புதிய சட்டம்

இப்படி தேவையில்லாத நபர்கள் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவதை தவிர்க்க, 1974ம் ஆண்டு, ' ஒவ்வொரு வேட்பாளரையும், 10 மக்கள் பிரதிநிதிகள் முன்மொழிய வேண்டும்; 10 பேர் வழிமொழிய வேண்டும்' என, சட்டம் கொண்டு வரப்பட்டது.

இது, 1997 ம் ஆண்டில் மீண்டும் திருத்தப்பட்டது. அதன்படி, 10 பேர் முன்மொழிய வேண்டும்; 50 பேர் வழிமொழிய வேண்டும் என கொண்டு வரப்பட்டது. டிபாசிட் தொகையும், 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.


கடந்த, 1997 ம் ஆண்டுக்கு பிறகு நடந்த, நான்கு ஜனாதிபதி தேர்தல்களிலும், நேரடி போட்டி தான் காணப்பட்டது. 1997 ஜூலை, 14ல் நடந்த, 11வது ஜனாதிபதி தேர்தலில் கே.ஆர்.நாராயணன் வெற்றி பெற்றார்; டி.என்.சேஷன் தோல்வி அடைந்தார். 2002ம் ஆண்டு ஜூலை, 15ம் தேதி நடந்த, 12வது ஜனாதிபதி தேர்தலில், அப்துல் கலாம் வெற்றி பெற்றார்; லட்சுமி செகால் தோல்வி அடைந்தார்.

2007 ம் ஆண்டு ஜூலை, 19ம் தேதி நடந்த, 13வது தேர்தலில் பிரதீபா பாட்டீல் வெற்றி பெற்றார்; பைரோன் சிங் ெஷகாவத் தோல்வி அடைந்தார். 2012ம் ஆண்டு ஜூலை, 19ம் தேதி நடந்த, 14வது ஜனாதிபதி தேர்தலில், பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றார்; பி.ஏ.சங்மா தோல்வி அடைந்தார்.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanu Srinivasan - Chennei,இந்தியா
19-ஜூன்-201721:27:08 IST Report Abuse
Thanu Srinivasan திரு அப்துல் கலாம் அவர்களை விட சிறந்தவர் டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்கள். திரு காலம் அவர்கள் சிறந்த பண்பாளர்தான். ஆனால் ஸந்தர்பவாதமாக செயல்பட்டவர். உறுதியான முடிவை எடுக்க தவறியவர். Office. Of profit bill என்ற மசோதா வந்த போது அதற்கு சம்மதம் (Accent) அளிக்காமல் மூன்று மூன்று முறை திருப்பி அனுப்பி தாம் அரசியல் வாதிகளுக்கு சாதகமாக செயல் படாதவர் போன்று காட்டி கொண்டார். இருத்தேழு சதவீத இட. ஒதுக்கீடு மசோத வந்தவுடன் மறு பேச்சின்றி ஒப்புதல் வழங்கினார். பத்தாண்டுகளுக்கு பின்பு இட ஒதுக்கீட்டை குறைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு எதிராக, அறுபது ஆண்டுகளுக்கும் பின்பு இட ஒதுக்கீடு வலியுறுத்தபடுவதை பற்றி ஒரு ஆட்ஷேபணையையும் எழுப்பவில்லை. தலித்தான அப்போதைய உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன்கூட எதிர்தார். ஆனால் கலாம் அவர்கள் ஸந்தர்பவாதமாக நடந்து கொண்டார். அடுத்த படியாக தாம் மரண தண்டனையை ஆதரிக்கவில்லை என்றார்.அவர் ராஷ்ட்ரபதியாக இருந்தபோது கருணை மனுக்களில் எவ்வித முடிவுகளையும் எடுக்காமல் பொறுப்பை தட்டி கழித்தார். எஸ்.ட்டி. ஸ்ரீநிவாஸன்
Rate this:
Share this comment
Cancel
19-ஜூன்-201720:45:56 IST Report Abuse
ArunKChandran If you dont know plz dont comment stupidly.. Abdul kalam Sir is great. Im not saying anything for that. plz check about R.k.Narayanan Sir. see his simplicity. he also great personality. surf in Google about him.
Rate this:
Share this comment
Cancel
JAYARAMAN - CHENNAI,இந்தியா
19-ஜூன்-201719:38:32 IST Report Abuse
JAYARAMAN From which year, the method of ing PRESIDENT by voting by MPs and MLAs only, started?
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-ஜூன்-201718:33:24 IST Report Abuse
Kasimani Baskaran ஜனாதிபதிகளில் முதுகெலும்பு உள்ளே ஒரே ஆள் தங்கமான கலாம் மட்டுமே...
Rate this:
Share this comment
Cancel
kmish - trichy,இந்தியா
19-ஜூன்-201718:18:52 IST Report Abuse
kmish உங்க வசதிக்கு ஏத்த மாதிரி பண்ணுங்க , நீங்க சொகுசா வாழ்றதுக்கு எங்க வரிப்பணம்
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
19-ஜூன்-201717:17:14 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam Dr.S.Radhakrishnan also added dignity and respect for the post.
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
19-ஜூன்-201717:03:07 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM அப்துல் கலாம் தவிர வேறு எந்த ஜனாதிபதியும் சிறந்தவராக தென்படவில்லை....
Rate this:
Share this comment
Cancel
ramesh - Srivilliputtur,இந்தியா
19-ஜூன்-201716:36:46 IST Report Abuse
ramesh ' இவர் எத்தனையாவது ஜனாதிபதி ? ' என்பதற்கு ஆங்கில மொழிபெயர்ப்பு தெரியுமா ? தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள் .......
Rate this:
Share this comment
Magesh - Riyadh,சவுதி அரேபியா
19-ஜூன்-201717:46:06 IST Report Abuse
Mageshwhat number President is Dr.Abdul Kalam?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை