சொன்ன பேச்சு கேட்காத பழனிச்சாமி : பாடம் புகட்ட நினைக்கும் தினகரன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சொன்ன பேச்சு கேட்காத பழனிச்சாமி : பாடம் புகட்ட நினைக்கும் தினகரன்

Updated : ஜூன் 19, 2017 | Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.,க்கள்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் கோபத்தில் இருக்கிறார் அ.தி.மு.க.,வின் துணை பொதுச் செயலர் தினகரன்.
இது குறித்து, அவரது ஆதரவாளராக இருக்கும் எம்.எல்.ஏ., ஒருவர் கூறியதாவது:
எனது உத்தரவுப்படி, துவக்கத்தில் நடந்து வந்த முதல்வர் பழனிச்சாமி, நான் ஜெயிலுக்குப் போய் விட்டு வந்த பின், மருந்துக்கும் கூட, என்னிடம் பேசவில்லை. முன்பு, போனில் பேசிக் கொண்டிருந்தவர், இப்போது அதையும் செய்வதில்லை. என்னை சந்திக்கும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களிடம். எனது வருத்தத்தை தெரிவித்து, அவர்கள் மூலம், முதல்வர் பழனிச்சாமிக்கு எனது உள்ளக் குமுறல்களை தெரிவித்து வருகிறேன். ஆனால், மொத்தமாக என்னையும், சசிகலாவையும் குடும்பத்தினரையும் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என நினைக்கும் கும்பலில், முதல்வர் பழனிச்சாமியும் தீவிரமாக இருந்து செயல்படுவதுதான் வருத்தமாக இருக்கிறது.
பழனிச்சாமி இப்படி செயல்படுவார் என முன் கூட்டியே தெரிந்திருந்தால், பன்னீர்செல்வத்தையே முதல்வராக இருக்க அனுமதித்திருப்போம் என, தன்னை சந்திக்க வரும் எம்.எல்.ஏ.,க்களிடம் ஆதங்கத்தை கொட்டுகிறார் தினகரன்.
இப்படி அவர் சொல்லக் கேட்ட எம்.எல்.ஏ.,க்களில் சிலர், முதல்வர் பழனிச்சாமி செயல்பாடுகள்; எண்ணங்கள் குறித்து தினகரன், தங்களிடம் சொன்ன கருத்துக்களையெல்லாம், முதல்வரை சந்திக்கும்போதெல்லாம் சொல்லியிருக்கின்றனர். அதன் மீது எந்த சலனத்தையும் அவர் காட்டாமல் இருந்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பது குறித்து, தினகரன் தீவிர சிந்த்னையில் இருப்பதோடு, முதல்வர் மீது கடும் கோபத்திலும் இருக்கிறாராம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N. Sridhar - Kanchipuram  ( Posted via: Dinamalar Windows App )
20-ஜூன்-201700:05:42 IST Report Abuse
N. Sridhar நீயே ஒரு மகா திருடன். வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்று நிரூபணம் ஆகி கொண்டிருக்கின்றது. எல்லாம் நன்மைக்கே. நீ அனுபவிக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ பாக்கி உள்ளது. இதுதான் ஆரம்பம்.
Rate this:
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
19-ஜூன்-201723:31:16 IST Report Abuse
GUNAVENDHAN "என்நன்றி கொன்றாருக்கும் உய்வுண்டாம் , உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு " , என்று வள்ளுவன் எப்பவோ சொல்லிச்சென்றுள்ளார் . பதவி கையில் கிடைத்த பின் ஏற்றி விட்ட ஏணியையே எட்டி உதைப்பதால் என்ன நேரும் என்பதை வெகு சீக்கிரம் உணருவார்கள் செய்நன்றி கொன்றவர்கள் .
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
19-ஜூன்-201720:53:19 IST Report Abuse
rajan அது எப்படி? எங்க அண்ணன் கோடிகளை கொட்டி புடிச்ச பதவியாச்சே அதை காப்பாத்திக்க என்னமா ராபகலாய் தூக்கமில்லாம புரண்டுகிட்டு இருக்காரு.கொட்டினதை அள்ள வழி எங்கேன்னு பார்ப்பாரா இல்ல பார்ப்பன அக்ரஹாரத்தையா பார்ப்பார்களா? அதுதான் தொப்பியை கழற்றி வீஸீட்டாரு.
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
19-ஜூன்-201719:28:17 IST Report Abuse
Varun Ramesh ஜெயிலுக்குப்போய் வந்த ஜெயலலிதாவிடம் எல்லோரும் பேசினார்கள். ஆனால், நீங்கள் சிறை சென்று திரும்பினால், உங்கள் தியாகத்தை புரிந்து கொள்ள நாதியில்லை என்னே கலிகாலம்? ஆறு மனமே ஆறு
Rate this:
Share this comment
Cancel
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201718:09:11 IST Report Abuse
Maverick இந்த கள்ளகும்பலை அப்படியே வலை வீசி புடிச்சி ஒரு லாரியில் ஏத்தி பாகிஸ் தான் பார்டர் பக்கம் போயி தொறந்து விடுங்கப்பா... இவனுங்க பண்ணுற அட்டூழியம் தாங்க முடியல... என்ன இன்னும் ராஜா காலத்து ஆட்சி நடக்குது ன்னு நினைச்சிகிட்டு இருக்கிறானுங்க போலே..
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai,இந்தியா
19-ஜூன்-201717:28:05 IST Report Abuse
krishna அண்ணாதிமுக என்பது ஒரு மாபியா கும்பல்.அதன் கொள்ளை கூட தலைவியை தீர்த்து கட்டி சசி கொள்ளை அடிக்க நாக்கை தொங்க போட்டு ரெடி அனா பொது காளி திங்க பொய் விட்டால்.பின்னர் எக்ஸ் என்ற பினாமியை ttv aati வைத்தார்.ttv திஹார் போனவுடன் பினாமிக்கு தைரியம் வந்து கூடவே நற்கலி அசையும் வந்து விட்டது.சட்டு புட்டுன்னு அடிச்சுகிட்டு பொய் தொலைங்கப்பா.தங்க முடியல்ல உங்க thollai
Rate this:
Share this comment
Cancel
Stephen Jawahar - Trivandrum,இந்தியா
19-ஜூன்-201716:46:32 IST Report Abuse
Stephen Jawahar போங்கடா வெங்காயங்களா... நீங்களும் உங்க தினகரனும்
Rate this:
Share this comment
Cancel
Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா
19-ஜூன்-201716:43:39 IST Report Abuse
Murukesan Kannankulam தினகரன் நல்லவரா? இல்லை கெட்டவரா ? டிவியில் ஒரு பேச்சி அரங்கம் அமைத்து விவாதிக்கலாம்.
Rate this:
Share this comment
Soosaa - CHENNAI,இந்தியா
19-ஜூன்-201718:41:09 IST Report Abuse
Soosaaநல்லவரா கெட்டவரா தெரியாது.. ஆனால் கொங்கு மக்கள் மன நிலை இதுதான். கிடைக்கும் வரை ஒரு மாதிரி கிடைத்த பிறகு ஒரு மாதிரி. அதனால் eps இப்படி இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - chennai,இந்தியா
19-ஜூன்-201716:37:17 IST Report Abuse
tamilselvan தினகரன் தீவிர சிந்த்னையில் இருப்பதோடு, முதல்வர் மீது கடும் கோபத்திலும் இருக்கிறாராம்.இவ்வாறு அவர் கூறினார். தினகரன் நீ கட்சி எம் ல ஏ நீ யார் உனக்கு கட்சி என் சமபத்த இருக்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை