10 பேரை திருமணம் செய்த பலே 'கல்யாண ராணி'| Dinamalar

10 பேரை திருமணம் செய்த பலே 'கல்யாண ராணி'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
10 பேரை, ஏமாற்றி, திருமணம், மணக்கோலம், சிக்கிய, 'கல்யாண ராணி'
Share this video :
10 பேரை திருமணம் செய்த 'கல்யாண ராணி' கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் 10 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய 'கல்யாண ராணி'யை மணமேடையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.


'மணமகன் தேவை' விளம்பரம் செய்த பெண்


கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கரைப்பகுதியை சேர்ந்தவர் ஷாலினி (32). கடந்த சில தினங்களுக்கு முன்பு, கணவனை இழந்த பெண்ணுக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்து இருந்தார். இந்த விளம்பரத்தை பந்தளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பார்த்து அதில் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். எதிர் முனையில் ஷாலினி பேசினார். அப்போது தான் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், முதல் கணவர் இறந்து விட்டதால் தனக்கு இது 2வது திருமணம் என்றும், விரைவில் கேரள ஐகோர்ட்டில் வேலை கிடைக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.


திருமணம் செய்து கொள்ள முடிவு



இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அப்போது ஷாலினி தனக்கு பெரிய அளவில் உறவினர்கள் யாரும் கிடையாது. திருமணத்தி்ற்கு ஒருசிலர் மட்டுமே வருவர் என்று கூறியுள்ளார். அதன்படி நேற்று காலை பந்தளம் அருகே ஒருகோயிலில் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டு இருந்தன. மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் அங்கு திரண்டு இருந்தனர். மணப்பெண் அலங்காரத்தில் ஷாலினி கோயிலுக்கு வந்தார்.


திருமணம் நிறுத்தம்



திருமண கூட்டத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் ஷாலினியை கண்டு அதிர்ச்சியடைந்தார். மணக்கோலத்தில் வருவது தனது நண்பர் ஒருவரின் மனைவி போல் இருக்கிறதே? என சந்தேகமடைந்தார். உடனே செல்போனில் தொடர்பு கொண்டு நண்பரை வரவழைத்தார். விரைந்து வந்து மணக்கோலத்தில் ஷாலினி இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தே போனார். உடனே மணமகனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தன்னை ஷாலினி திருமணம் செய்து ஏமாற்றியதை கூறினார். உடனே திருமணம் நிறுத்தப்பட்டது.


மணக்கோலத்தில் கைது



இது குறித்து பந்தளம் போலீசிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். அதில் ஷாலினி திருமண மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரை போலீஸ் ஸ்டேசன் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுகி்டும் தகவல்கள் வௌியாகின. பணம், நகைக்கு ஆசைப்பட்டு இதுவரை 10 பேரை ஷாலினி ஏமாற்றி திருமணம் செய்துள்ளதும், ஆரன்முளா, செங்கனுார் ஆகிய போலீஸ் ஸ்டேசன்களில் ஷாலினி மீது திருமண மோசடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.


சொகுசாக வாழ ஆசை


கல்யாண ராணி ஷாலினிக்கு ஒரு குழந்தை உள்ளது. சொகுசு வழக்கை வாழ ஆசைப்பட்டு இந்த வழியை கையாண்டுள்ளார். மணமகன் தேவை என்ற விளம்பரம் கொடுத்து பல ஆண்களை தனது வலையில் விழ வைத்துள்ளார். திருமணம் முடிந்த சில நாட்களில் கையில் கிடைக்கும் பணம் மற்றும் நகையுடன் எஸ்கேப் ஆகி விடுவதை அவர் வாடிக்கையாக கொண்டு இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201708:01:18 IST Report Abuse
Srinivasan Kannaiya ஷாலினிக்கு எல்லாம் மறத்து போய் இருக்கும் ...............................
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201708:00:14 IST Report Abuse
Srinivasan Kannaiya வெட்கம், மடம், நாணம்,பயிர்ப்பு என்ற குணங்களை அறியாதவர் ஷா.......லினி.......
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201707:57:48 IST Report Abuse
Srinivasan Kannaiya ஜொள்ளர்கள் இருக்கும் வரை கல்யாண ராணி காட்டில் மழைதான்...
Rate this:
Share this comment
Cancel
JAYARAMAN - CHENNAI,இந்தியா
20-ஜூன்-201706:24:52 IST Report Abuse
JAYARAMAN Immediate registration after marriage should be made compulsory. Aadhaar necessary for registration of marriage. "Not married " certificate from register office is necessary before marriage, for both male and female. All marriage register offices should be interlinked through computer.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201706:21:22 IST Report Abuse
Giridharan S இந்த மூஞ்சிய பார்த்தா பத்து பேரு மயங்கின மாதிரி தெரியல. குடி போதையில் ஏமாந்து தளி கட்டியிருப்பாங்க சாமி ஏமாந்த ஆம்பளைங்கள மீட்க சொல்லுங்க ப்ளீஸ்
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
20-ஜூன்-201704:08:46 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பெண்ணா அல்லது பேயா? வியப்பாக உள்ளதே. பெண் என்றால் பேயும் இறங்கும் என்ற பழமொழியை நிரூபித்துள்ளாள்>>>>
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201703:17:22 IST Report Abuse
அப்பாவி ஆண், பெண் இருவருக்கும் சம உரிமை...
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-ஜூன்-201702:00:10 IST Report Abuse
Mani . V முப்பத்தி இரண்டு வயதுக்குள்ளேயே இவர் பத்து முறை திருமணம் செய்துள்ளார் என்றால் இந்த அம்மணி பயங்கர தில்லாலங்கடிதான். இந்த "கல்யாண ராணி" மிக அதிகமாக தமிழ் டிவி சீரியல்கள் பார்த்து இருப்பார் என்று தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
N. Sridhar - Kanchipuram  ( Posted via: Dinamalar Windows App )
20-ஜூன்-201700:28:27 IST Report Abuse
N. Sridhar நல்ல வேளை நான் தப்பினேன். இல்லை என்றால் நானும் பலிகடா ஆகி இருப்பேன்.
Rate this:
Share this comment
Cancel
zakariya - LONDON,யுனைடெட் கிங்டம்
20-ஜூன்-201700:21:33 IST Report Abuse
zakariya இவளுகளை சொல்லி குற்றமில்லை கேரளாவில் மிகவும் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னார்கள் .கேவலம் சிரிப்பாக இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.