பக்க வாத்தியம் | Dinamalar

சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

பக்க வாத்தியம்

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பக்க வாத்தியம்

நொந்து போன அதிகாரிகள்!

மதுரையில், போக்குவரத்து போலீஸ், வட்டார போக்குவரத்து துறை சார்பில், ஆட்டோ டிரைவர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற ஆட்டோ டிரைவர்கள் சிலரை, தங்களின் அனுபவங்களை கூற அழைத்தனர்.அவர்களில் ஒருவர், 'ஆட்டோ டிரைவர்கள் என்றால், உங்களுக்கு கேவலமாக போய் விட்டதா. எனக்கு வயது, 47. என் மகன் வயதில் இருக்கும் போலீஸ்காரர் ஒருவர், டேய்... நில்லுடா... என, என்னை தரக்குறைவாக பேசுகிறார்.'எங்களை மதித்து, முதலில் மரியாதை கொடுங்கள்; மற்றதை பேசி கொள்ளலாம். ஆட்டோக்களால் தான் விபத்து ஏற்படுகிறது என, உங்களால் சொல்ல முடியுமா. எதற்கெடுத்தாலும் எங்களையே குற்றம் சொல்வதை நிறுத்துங்கள். இல்லையென்றால், இந்த கூட்டத்தை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறுகிறோம்' என, எகிறி குதித்தார். அதேபோல, மற்றவர்களும் போலீசார் மீது புகார் தெரிவித்தனர்.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால், 'ஏன்டா இவங்களை பேச அழைத்தோம்' என, நொந்து கொண்டனர் அதிகாரிகள்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201710:53:39 IST Report Abuse
Giridharan S உண்மைதான் இப்போ வேலைக்கு வந்த பசங்களாலே இந்த மாதிரி பேச்சுக்கள் அதிகம். இதை கட்டுப்படுத்த வேண்டும். இது எல்லா இடத்திலேயும் அன்றாடம் நடக்கிற விஷயம் தான். இதை உயர் அலுவலர்கள் கட்டாயம் கட்டு படுத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-ஜூன்-201709:58:43 IST Report Abuse
D.Ambujavalli போலீசுக்கு சொந்தமான ஆட்டோக்களின் டிரைவர்களை மட்டும் வரவழைத்திருக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை