அக்கம் பக்கம் | Dinamalar

சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Added : ஜூன் 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அக்கம் பக்கம்

கண் கெட்ட பின்!
கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கும், பிரதமர் மோடிக்கும் வியூகம் அமைத்து கொடுத்து, பலரது பாராட்டையும் பெற்றவர், பிரசாந்த் கிஷோர்.இதன்பின், பிரசாந்த் கிஷோருக்கு, நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி களிடையே கடும் கிராக்கி ஏற்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், அவரது வீட்டு வாசல் முன் காத்து கிடந்தனர்.'எங்கள் கட்சிக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுங்கள்; எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் தருகிறோம்' என, கெஞ்சினர். ஆனால், உ.பி., சட்டசபை தேர்தலுக்கு பின், எல்லாமே தலைகீழாகி விட்டது.உ.பி.,யில், பிரசாந்த் கிஷோர், காங்கிரசுக்கு அமைத்து கொடுத்த தேர்தல் வியூகம் பலிக்கவில்லை. அங்கு, காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால், பிரசாந்த் கிஷோரின் வீடு, வெறிச்சோடியது.அரசியல் கட்சி தலைவர்கள் யாருமே, அவரை அணுகாததால், விரக்தியில் இருந்தார், கிஷோர். இந்த நேரத்தில் தான், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான, ஜெகன் மோகன் ரெட்டி, பிரசாந்த் கிஷோரை அணுகியுள்ளார். 'எங்கள் கட்சிக்கு உதவுங்கள்; அடுத்த சட்டசபை தேர்தலில், ஆந்திராவில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும்' என, அவரிடம் கூறியுள்ளார்.ஜெகன் மோகனின் இந்த நடவடிக்கையை பார்த்து, ஆச்சர்யம் அடைந்துள்ள ஆந்திர மாநில அரசியல் கட்சி தலைவர்கள், 'பிரசாந்த் கிஷோரை யாருமே சீண்டாதபோது, ஜெகன் மோகன் மட்டும், அவரை தேடிச் செல்வது ஏன்; கண் கெட்ட பின், சூரிய நமஸ்காரம் தேவைதானா' என, முணு முணுக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை