'டவுட்' தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
   'டவுட்' தனபாலு

காங்., ராஜ்யசபா, எம்.பி., ப.சிதம்பரம்: இந்திரா பிரதமராக இருந்த போது, நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார். அது தவறு என்பதை அவரே ஒப்புக்கொண்டார். நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட சூழலை நினைத்து பார்த்தால், அது சரியென்றே கருத வேண்டியுள்ளது.

டவுட் தனபாலு: தான் செய்த சரியான செயலை, இந்திரா தவறுன்னு ஒப்புக் கொண்டார்னு சொல்ல வர்றீங்களா... அப்படீன்னா, நெருக்கடி நிலை பிரகடனப்படுத்திய காலத்தில், இந்திரா இயல்பை மீறி ஏதோ பெரும் நெருக்கடியில் இருந்தாரோ என்ற, 'டவுட்'டை ஏற்படுத்திட்டீங்களே...!

-பா.ஜ.,வைச் சேர்ந்த மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ்:
முந்தைய, காங்., -- தேசியவாத காங்., தலைமையிலான ஆட்சியில், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதை, மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, பொதுமக்களிடம் அம்பலப்படுத்துவோம்.
டவுட் தனபாலு: இந்த ஊழலை நீங்க எப்போ கண்டுபிடிச்சீங்க... நாலு நாளைக்கு முன்னாடி, 'ஜூலைக்குள் விவசாயிகளின் பயிர்க் கடன்களை ரத்து செய்யலைன்னா, ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம்'னு, சிவசேனா மிரட்டுது... அதெல்லாம் ஊழலுக்கு தான் வழிவகுக்கும்னு திருப்பிச் சொல்ல முடியாம தான், இப்போ திடீர்னு பழைய கணக்கைப் பத்திப் பேசறீங்களோ என்ற, 'டவுட்' ற்படுதே...!


-மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:
அ.தி.மு.க., ஆட்சியை கலைக்க வேண்டும் என, ஸ்டாலின் கூறுகிறார். காற்றுள்ள போதே துாற்றிக் கொள் என்ற பழமொழியை ஸ்டாலின் பின்பற்ற நினைக்கிறார்; அது நடக்காது.
டவுட் தனபாலு: ஆட்சி நிலைப்பதும், கலைவதும் உங்க கையில் தான் இருக்கா... அப்படீன்னா, 'அ.தி.மு.க., அரசை எக்காரணம் கொண்டும் கவிழ்க்க விடமாட்டோம்... அது, தன் ஐந்தாண்டு கால ஆட்சியை பூர்த்தி செய்யும்... எங்களை மீறி எதுவும் நடக்காது'ன்னு வெளிப்படையாக சொல்ல வேண்டியது தானே... அதைச் சொல்ல விடாமல் உங்களை எது தடுக்குது என்ற, 'டவுட்' வருதே...!

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை