பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜூன் 19, 2017
Advertisement
பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த, முன்னாள் அமைச்சர், பாண்டியராஜன் பேட்டி: பா.ஜ.,விற்கு, நாங்கள் ஒருபோதும் கருவியாக இல்லை. தமிழகத்தில், இன்னும், மூன்று மாதங்களில், பலம் பெறுவதாக கூறும், பா.ஜ., தற்போது பலவீனமாக இருப்பதைத்தானே காட்டுகிறது.


தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு பேச்சு:
எங்கள் ஆட்சியைப் பற்றி, எதிர்க்கட்சியினர் ஏதேதோ புலம்புகின்றனர். ஆனால், பழனிசாமி தலைமையிலான ஆட்சி, ஐந்து ஆண்டு காலமும் முழுமையாக நிறைவு பெறும். அதுமட்டுமல்ல, அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., வெற்றி பெறும்; பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும்.


தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:
ஸ்டாலினை, முதல்வர் கனவு துாங்க விடாமல் செய்கிறது. அதனால், அவர் துாக்கமின்றி தவிக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், சைக்கிள் கேப்பில் முதல்வராகி விடலாம் என, துடிக்கிறார். சட்டசபை உறுப்பினர்கள், ௧௨௩ பேரும் ஒற்றுமையாக இருப்பதால், அவரது கனவு பலிக்காது; அது, பகல் கனவாகத்தான் முடியும்.


பா.ஜ., ராஜ்யசபா, எம்.பி., இல.கணேசன் பேட்டி:
யார், எந்த உணவை உண்ண வேண்டும் என்பதை, எவராலும் திணிக்க முடியாது. குறிப்பாக, அரசு இதைச் செய்ய முடியாது. மாட்டிறைச்சியை உண்பதற்கோ, அதை ஏற்றுமதி செய்யவோ எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால், சிலர் இதை தவறாக கருதி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஜனநாயக நாட்டில், ஒரு கருத்தை ஏற்பதும், எதிர்ப்பதும் மக்களின் விருப்பம்.


தமிழக முதல்வர் பழனிசாமி பேட்டி:
அ.தி.மு.க., தற்போது, சில பிரச்னைகளை சந்தித்து வந்தாலும், மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மக்களின் தேவைகளை துணிச்சலோடு நிறைவேற்றி வருகிறது. ௧௪௦ ஆண்டுகளாக இல்லாத வறட்சி, தமிழகத்தில் நிலவி வரும் நிலையில், மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை செய்து வருகிறோம். சட்டசபையில், ௧௧௦ விதியில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

'அ.தி.மு.க.,வுல பிளவு இல்லைன்னு சொல்ற அதே நேரத்துல, பிரிஞ்சு போனா, பதவி பறிபோயிடும்னு மிரட்டுற மாதிரி பேசியே, சொச்ச பதவி காலத்தையும் ஓட்டிடலாம்னு நினைக்குறீங்களா' என கேட்க தோன்றும் வகையில், அ.தி.மு.க., சசிகலா அணியை சேர்ந்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி
:அ.தி.மு.க.,வில், அணி என்பது கிடையாது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள். பிரிந்து சென்றால், அவர்கள் பதவி பறிபோய்விடும். கருத்து வேற்றுமைகள் கட்சிக்குள் வருவது இயல்பு தான். ஆட்சியை காப்பாற்றுவது எங்கள் கொள்கை. இதில், எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை