டீ கடை பெஞ்ச்| Dinamalar

டீ கடை பெஞ்ச்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
   டீ கடை பெஞ்ச்

அதிகாரிகளை மிரட்டும் அமைச்சர் மகன்

''வேளாண் துறையில, விளைச்சலை அள்ளுறாரு பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர் பாய்.
''யாருங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.
''வேளாண்மை
துறையின் கீழ் இயங்குற, நீர்வடிப்பகுதி
மேம்பாட்டு முகமையின், பெரம்பலுார் மாவட்ட அதிகாரியை தான் சொல்றேன்...
''மாவட்டத்துல இருக்கிற கிராமங்கள்ல, குட்டைகளை ஆழப்படுத்துறது, வரத்து கால்வாய்களை துார்வார்றது, புதிய பண்ணை
குட்டைகள் அமைக்கிறதுன்னு எதையும் செய்யாம, செஞ்சதா கணக்கு காட்டி, பல லட்சம் ரூபாயை, 'ஸ்வாகா' பண்ணிட்டாரு பா...
''இது போக, பண்ணை குட்டை அமைக்க, விவசாயிகளிடமும், வசூல் நடத்தியிருக்கார்... ஏதாவது விசாரணை வந்தா, சமாளிக்கிறதுக்காக, பணிகள் நடந்ததா, போலியா ஆவணங்கள் தயாரிச்சு, படங்களோட பக்காவா பைல்கள் தயாரிச்சு
வச்சிருக்காரு பா...''
''சக அதிகாரிகளிடம், 'இந்த இடத்துக்கு வர்றதுக்கே, பல லட்சம் அள்ளி கொடுத்திருக்கேன்... இப்பவும், உயர் அதிகாரிகளுக்கு, 'கமிஷன்' வெட்டிட்டு தான் இருக்கேன்... என்னை ஆட்டவோ,
அசைக்கவோ முடியாது'ன்னு ஜம்பமா பேசுறாரு...'' என்ற அன்வர் பாய், ''அண்ணாதுரை வர்றாரு... ஒரு ஏலக்காய் டீ போடுங்க பா...'' என, நாயருக்கு குரல் கொடுத்தார்.
''ரெண்டு பேர்ட்டயும் மாட்டிண்டு முழிக்கறா ஓய்...'' என, அடுத்த விஷயத்திற்குள் நுழைந்தார் குப்பண்ணா.
''யாரு வே...''
என்றார் அண்ணாச்சி.''மதுரை அதிகாரிகள் தான்... மாவட்டத்துல, ராஜு, உதயகுமார்னு ரெண்டு அமைச்சர்கள் இருக்கா... இவாளுக்கு இடையில, பனிப்போர் நடந்துண்டு இருக்கறது... அதனால, ஏட்டிக்கு போட்டியா நிகழ்ச்சிகளை நடத்தி, அதிகாரிகளை அழைச்சு,
இம்சை படுத்தறா ஓய்...''சமீபத்துல, ஒத்தக்கடையில, விவசாயிகளுக்கு வண்டல் மணல் எடுக்க அனுமதி வழங்கற நிகழ்ச்சி நடந்தது... இதுல, ரெண்டு அமைச்சர்களும் கலந்துக்கறதா இருந்தது...
''ஆனா, ராஜு மட்டும் தான் வந்தார்... உதயகுமார் புறக்கணிச்சுட்டார்... அடுத்து, அவர் தனியா நிகழ்ச்சியை நடத்திடுவாரோன்னு, அதிகாரிகள் கலக்கத்துல இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''அதிகாரிகளை நேர்ல வரும்படி, மிரட்டுறாருங்க...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அந்தோணிசாமி.
''யாரு வே...'' என்றார் அண்ணாச்சி.
''மத்திய மாவட்டத்துல இருக்கிற அமைச்சரின் மகனை தான் சொல்றேன்... அப்பாவின், 'வரவு - செலவு' விவகாரம் எல்லாத்தையும், மகன் தான்
பார்த்துக்கிறாருங்க...
''எல்லா அதிகாரிகளும் தன்னை வந்து பார்க்கணும்னு மகன் உத்தரவு போட்டிருக்கார்... ஏதாவது சிபாரிசுன்னா, சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரி, இவரை வந்து பார்த்து, சிபாரிசை ஏத்துக்கிட்டு போகணும்... வராத அதிகாரியை காய்ச்சி
எடுக்குறாருங்க...''அதுவும், வயசு வித்தியாசம் பார்க்காம, ஏகவசனத்துல தான் பேசுறார்... இதனால, அவர் மேல அதிகாரிகள் எரிச்சல்ல இருக்காங்க... மகனை அமைச்சர் தட்டி வச்சா நல்லதுங்க...'' என, முடித்தார்
அந்தோணிசாமி.தெருவில் சென்ற சிறுவனை நிறுத்திய அண்ணாச்சி, ''தம்பி ஜவஹர், வீட்டுல உங்கப்பா நடராஜன் இருக்காராடே...'' என கேட்க, சிறுவன் தலையை ஆட்டிவிட்டு ஓட்டம் பிடித்தான்.

Advertisement

மேலும் டீ கடை பெஞ்ச் செய்திகள்:

அக்டோபர் 21,2017

அக்டோபர் 20,2017

அக்டோபர் 19,2017

அக்டோபர் 18,2017

அக்டோபர் 17,2017

அக்டோபர் 16,2017


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
20-ஜூன்-201719:06:00 IST Report Abuse
chinnamanibalan அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை காற்று உள்ள போதே தூற்றி கொள்ளும் பணியை நன்கு செய்கிறார்கள்.மொத்தத்தில் தமிழகம் கொள்ளை போகிறது.
Rate this:
Share this comment
Cancel
T.Ramanathan - Colombo,இலங்கை
20-ஜூன்-201713:50:06 IST Report Abuse
T.Ramanathan The concerned minister is a shame to the people of Trichy.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-ஜூன்-201710:04:00 IST Report Abuse
D.Ambujavalli கொஞ்ச நாள் போகட்டும் அமைச்சரே 'மண்டி ' போட்டு வீட்டில் உட்கார்ந்துவிடுவார் அதிகார ருசி வெல்லம்போலத்தான் இனிக்கும் இப்போது
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
20-ஜூன்-201702:50:35 IST Report Abuse
ramasamy naicken வெல்ல மண்டி நூறு கோடி டார்கெட் போட்டு வேலை செய்து கொண்டு இருக்கின்றான். பின்பு மகன் இப்படி தருதலையாகத்தான் இருப்பான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.