விவசாயிகளுக்கு துரோகம்!| Dinamalar

விவசாயிகளுக்கு துரோகம்!

Added : ஜூன் 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
விவசாயிகளுக்கு துரோகம்!

மத்தியில் ஆளும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., அரசு, விவசாயிகள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 2014 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மறந்து, அவர்களுக்கு துரோகம் செய்கிறது.

ஜோதிராதித்ய சிந்தியா, மூத்த தலைவர், காங்.,

ஆதாயம் தேடக்கூடாது
!
யோகா பயிற்சியின் மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன; நானும், தினமும் யோகா பயிற்சி செய்கிறேன். ஆனால், இது குறித்து விளம்பரம் செய்வது கிடையாது. யோகாவைப் பற்றி, தேவையற்ற விவாதங்கள் நடத்துவதோ, அரசியல் ஆதாயம் தேடுவதோ கூடாது.

நிதிஷ் குமார், பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்

இது சரியான முடிவா?

பா.ஜ., தலித் பிரிவு தலைவராக இருந்த ஒரே காரணத்திற்காக, ராம்நாத் கோவிந்த், அந்தக் கட்சியின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அல்லது அத்வானி ஆகியோரில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியிருக்கலாம்.

மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை