பதிவு செய்த நாள் :
ஜனாதிபதி வேட்பாளர், தலித் சமூகம், ராம்நாத் கோவிந்த், பீஹார் கவர்னர், பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தேர்தல் கமிஷன்,  ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு , காங்கிரஸ் தலைவர் சோனியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சீதாராம் யெச்சூரி, President candidate, Dalit community, Ramnath Govind, Bihar Governor, Ramnath Govind, Prime Minister Narendra Modi, President Pranab Mukherjee, Election Commission, Rajnath Singh, Arun Jaitley, Venkaiah Naidu, Congress leader Sonia, Communist general secretary, Seetharam Yechury

ஜனாதிபதி தேர்தலுக்கான, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் வேட்பாளராக, பீஹார் கவர்னர் ராம்நாத் கோவிந்த், 71, அறிவிக்கப்பட்டுள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்க, பிரதமர் மோடி, வியூகம் வகுத்து வருகிறார். வரும், 22ல் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், தங்களின் முடிவை எதிர்க்கட்சிகள் அறிவிக்க உள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர், தலித் சமூகம், ராம்நாத் கோவிந்த், பீஹார் கவர்னர், பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தேர்தல் கமிஷன்,  ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு , காங்கிரஸ் தலைவர் சோனியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சீதாராம் யெச்சூரி, President candidate, Dalit community, Ramnath Govind, Bihar Governor, Ramnath Govind, Prime Minister Narendra Modi, President Pranab Mukherjee, Election Commission, Rajnath Singh, Arun Jaitley, Venkaiah Naidu, Congress leader Sonia, Communist general secretary, Seetharam Yechury

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலை, 24ல் முடிவுக்கு வருகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், ஜூலை, 17ல் நடைபெறும் என, தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்க, ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஆலோசித்து வந்தன.போட்டியின்றி, எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன், ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க, மத்தியில் ஆளும், பா.ஜ., முடிவு செய்தது. கூட்டணி கட்சிகள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக, மூத்த அமைச்சர்கள், ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு தலைமையிலான குழுவை, பா.ஜ., அமைத்தது.இந்தக் குழுவினர், காங்கிரஸ் தலைவர் சோனியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட கட்சித் தலைவர்களை சந்தித்து, ஆதரவு கோரினர். பா.ஜ., தலைவர் அமித் ஷாவும், பல்வேறு கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.'வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காத வரை, ஆதரவு தருவது குறித்து எந்த முடிவையும் தெரிவிக்க முடியாது' என, எதிர்க்கட்சிகள் கூறின. 'ஹிந்துத்துவா கொள்கை உள்ளவருக்கு ஆதரவு அளிக்க மாட்டோம்' என்றும் எதிர்க்கட்சிகள் கூறின.இந்த சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு, வரும், 28, கடைசி நாள் என்பதால், வேட்பாளரை இறுதி செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ.,வின் பார்லிமென்ட் போர்டு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.இந்தக் கூட்டத்துக்குப் பின், பா.ஜ., தலைவர் அமித் ஷா, நிருபர்களிடம் கூறியதாவது:
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக, பீஹார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்படுகிறார். தலித் மக்களின் நலனுக்காக போராடி வரும் கோவிந்தை, ஜனாதிபதியாக தேர்வு செய்ய எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என, முழுமையாக நம்புகிறோம். வேட்பாளர் தேர்வு குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர்

மன்மோகன் சிங் உள்ளிட்டோரிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்; அவர்களது ஆதரவையும் கேட்டுள்ளார். இது குறித்து, விவாதித்து பதில் அளிப்பதாக, அவர்கள் கூறியுள்ளனர்.பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் தகவல் தெரிவித்து, ஆதரவு கேட்டுள்ளோம். வரும், 23ல், ராம்நாத் கோவிந்த், வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முயற்சித்து வந்தன. தற்போது, பா.ஜ., வேட்பாளரை அறிவித்துள்ளது. இதையடுத்து, ''ஜனாதிபதிவேட்பாளர் குறித்து முடிவெடுக்கும் கூட்டம், 22ல் நடக்கும்,'' என, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர், சரத் யாதவ், நேற்று தெரிவித்தார்.

தலித் தலைவர்

ஜனாதிபதி வேட்பாளராக, பா.ஜ.,வால் அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், தலித் மக்களின் நலனுக்காக நீண்ட காலம் போராடியவர். உத்தர பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான அவர், மத்திய அரசின் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். இரண்டு முறை, ராஜ்யசபா எம்.பி.,யாகவும், பல்வேறு பார்லிமென்ட் நிலைக் குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டவர்.இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், இரண்டாவது முறையாக, தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர், ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைக்கும். இதற்கு முன், 1997ல், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த, கே.ஆர்.நாராயணன், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எம்.பி.,க்களுக்கு அழைப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோரை, 50 பேர் முன்மொழிய வேண்டும்; 50 பேர் வழிமொழிய வேண்டும். இதற்காக, டில்லிக்கு வரும்படி, கட்சியின் பல்வேறு, எம்.பி.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தற்போதைய சூழ்நிலையில், தங்கள் வேட்பாளர் வெற்றிக்கு தேவையான ஓட்டுகள், பா.ஜ.,விடம் உள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன், போட்டியின்றி ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என, பா.ஜ., விரும்புகிறது.இந்த நிலையில், ''துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளரை நிறுத்துவது குறித்து முடிவு ஏதும் செய்யப்படவில்லை,'' என, பா.ஜ., தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

முதல்வர்கள் ஆதரவு


ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோருடன், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தொலைபேசியில் பேசினார். அதைத் தொடர்ந்து, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம்

Advertisement

கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோரிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் ஆதரவு கோரினார்.தன்னிடம் பேசிய பிரதமர் மோடிக்கு, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்தார். சந்திரபாபு நாயுடுவும், தன் ஆதரவை தெரிவித்தார்.மத்தியிலும், மஹாராஷ்டிராவிலும், பா.ஜ., கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள, சிவசேனா, 'இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்' என, அறிவித்துள்ளது. ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவருமான, நவீன் பட்நாயக்கும், பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

உ.பி.,யில் இருந்து முதல் ஜனாதிபதி


பெயர் : ராம்நாத் கோவிந்த், 71.
பிறந்த தேதி : அக்டோபர் 1, 1945.
குடும்ப தொழில் : விவசாயம்
சொந்த ஊர் : தேராபூர், கான்பூர் தெகத் மாவட்டம், உத்தர பிரதேசம்.
கல்வித் தகுதி : பி.காம்., - எல்.எல்.பி., பட்டம், கான்பூர் பல்கலைக் கழகம்.
திருமணம் : மே 30, 1974.
குடும்பம் : மனைவி சவீதா
குழந்தைகள் : மகன் பிரஷாந்த், மகள் ஸ்வாதி.வழக்கறிஞர் பணி :1971: டில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு.
1978: சுப்ரீம் கோர்ட்டில், 'அட்வகேட் ஆன் ரெக்கார்டு' பணி.
1979: டில்லி ஐகோர்ட்டில், மத்திய அரசு வழக்கறிஞர்.
1980 - 1993: சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசின் ஸ்டேன்டிங் கவுன்சில்.பார்லிமென்ட் பணி:* 1994 ஏப்ரலில், உத்தர பிரதேசத்திலிருந்து முதன்முறையாக ராஜ்யசபாவுக்கு தேர்வு. தொடர்ந்து இரண்டு முறை ராஜ்யசபாவுக்கு தேர்வாகி, 2006 மார்ச் வரை, 12 ஆண்டுகளாக எம்.பி., பதவி. பார்லிமென்ட் முக்கிய குழுக்களில் உறுப்பினராக இருந்தார்.
* எம்.பி.,யாக இருந்தபோது, உள்துறை, பெட்ரோலியம், சமூக நலம், சட்டம் மற்றும் நீதி, எஸ்.சி., - எஸ்.டி., நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிலைக்குழுக்களில் பணி.
* 2002ல் இந்தியாவின் பிரதிநிதியாக ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் பேசினார். பா.ஜ., செய்தி தொடர்பாளராகவும் இருந்தார்.
கடந்த 2015 ஆக., 8ல் பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால், கே.ஆர்.நாராயணனுக்கு பின் தலித் பிரிவை சேர்ந்த இரண்டாவது ஜனாதிபதி என்ற பெருமை பெறுவார். உ.பி.,யில் இருந்து நிறையபிரதமர்கள் வந்துள்ளனர். முதன்முறையாக அம்மாநிலத்தை சேர்ந்தவருக்கு ஜனாதிபதி வாய்ப்பு கிடைத்துள்ளது.- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (60+ 261)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Brain Alpha - Kuwait City,குவைத்
20-ஜூன்-201718:47:17 IST Report Abuse

Brain Alphaதமிழ் நாட்டிலே யாரும் தகுதி உள்ளவர் தேர்தெடுக்கலாம் .......

Rate this:
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201718:41:48 IST Report Abuse

Venkiசாமுண்டிக்கா லக்ஷணப்படி நல்ல ரப்பர் ஸ்டாம்ப்பை போல சிறப்பாக செயல் படுவார், ஏன் கிரண் பேடியையோ அல்லது அத்வானியையோ மோசடி தேர்வு செய்யவில்லை ?

Rate this:
Chandrasekar - Manglaore ,இந்தியா
20-ஜூன்-201717:19:54 IST Report Abuse

Chandrasekarஇவர் IAS தேர்விலும் தேர்ச்சி பெற்றவர் என்பது ஆச்சரியமூட்டும் கூடுதல் சிறப்பு.

Rate this:
kmish - trichy,இந்தியா
20-ஜூன்-201716:44:25 IST Report Abuse

kmishஇந்த அரசியல் வாதிங்க ஜாதி மதம் பார்க்க கூடாதுன்னு சொல்லுவான்கா ஆனா இவன்க மட்டும் சொல்லிகிட்டே இருப்பான்ங்க இதுல வேற தலித் தலித் ன்னு சொல்லாம ஜனாதிபதி வேட்பாளார்ன்னு சொல்லுங்கய்யா

Rate this:
Balaji - Khaithan,குவைத்
20-ஜூன்-201714:36:08 IST Report Abuse

Balajiஇவரை தேர்ந்தெடுத்திருப்பது வரவேற்க வேண்டியது தான்........ சொல்லப்போனால் இப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பாஜக ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம்........ தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் சிறுபாண்மையினருக்கும் தோழன் என்று காட்டிக்கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி இப்போது அவர்களும் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவரையோ அல்லது சிறுபாண்மை சமூகத்தவரையோ தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கியிருக்கிறது பாஜக........... ஜாதியை வைத்து அரசியல் செய்ய பாஜகவும் தெரிவருகிறது என்பது வெளிப்படுகிறது............

Rate this:
Ravichandran - dar salam ,தான்சானியா
20-ஜூன்-201713:51:59 IST Report Abuse

Ravichandranமிகுந்த அனுபவம் மிக்க மனிதர் நல்ல படிப்பாளி, தேச பக்தி மிகுந்தவர். கேடு கெட்ட அரசியல் வியாபாரிகள் இருப்பதால் தான் பி ஜி பி அவரை தலித் சமுதாயம் என கூற வெடி இருக்கிறது. இந்தியாவில் யாருக்கும் ஜாதி சான்றிதழ் கொடுக்கவேண்டாம் என்பதே என் விருப்பமும் செதில்கள் ஒழிய வேண்டும்மென்றல் சாதி அடையாளப்படுத்தி அங்கீகாரம் செய்யும் அரசின் சான்றிதழை நிறுத்தவேண்டும். வரும் காலம் ஒரே இனமாக திகழமுடியும், அதைவிட்டு விட்டு நான் இன்ன சாதி என்று சான்றிதழ் வாங்கிக்கொண்டு என்னை தளி என ஒதுக்குகிறார்கள் என கூப்பாடு போடுவது வீண். குப்பையில் போடும் நாளே தேசத்திற்கு நல்ல நாள்

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
20-ஜூன்-201713:08:49 IST Report Abuse

தேச நேசன் அமித் ஷாவை சிறுபான்மையினர் என்பதற்க்காகவோ மோதி மற்றும் ராஜ்நாத் சிங்கை பிராமணரல்லாதோர் என்பதற்காகவோ தேர்ந்தெடுக்கவில்லை. இருந்தாலும் அவர்களுக்கில்லாத அதிகாரம் அங்கு  பாஜக வில் வேறு  யாருக்குமில்லையே.அதுபோல ராம் கோவிந்தைதேர்ந்தெடுத்தபோதும்   நடுநிலையாகத்தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.சாதியை விசாரித்துப் பழகுவதும் பேதம் பார்ப்பதும் அவர்களுக்குப் பயிற்சியளித்த RSS  இல் 92  ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்துவிட்டார்கள் 

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
20-ஜூன்-201712:48:21 IST Report Abuse

ganapati sbஅத்வானிஜி தான் தலைவராக இருந்த போதே தன திட்டமிட்ட உழைப்பால் கொண்டுவந்த கூட்டணிகளால் பெற்ற வெற்றியின் போதே தன்னை பிரதமராக முன்னிறுத்திக்கொள்ளாமல் வாஜ்பாயை பிரதமராக்கிய தன்னலமற்றவர் . மற்றவர் உழைப்பில் வரும் ஜனாதிபதி பதவியை விரும்பியிருக்க மாட்டார். தான் உயர்வதை விட தன்னை சேர்ந்தவர்களும் தான் வளர்த்த தொண்டவர்களும் தலைவராக வளர்வதை விரும்பும் அத்வானியின் ஆசியை பெற்றே அம்பேத்கர் போல மெத்த படித்த திறமையுள்ள ராம்நாத் அறிவிக்கப்பட்டிருப்பார் . அடுத்த ஜனாதிபதியான ராம்நாத்திற்கு வாழ்த்துக்கள் .

Rate this:
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-201718:34:29 IST Report Abuse

Indianசீ சீ இந்த பழம் புளிக்கும்.. அவர் வரக்கூடாது என்பதற்காகத் தானே சிபிஐ யை வைத்து வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்ட்து மோடியால்.. கொஞ்சமாவது அறிவுள்ள எல்லோருக்கும் இது புரியும்...

Rate this:
Ganesh - chennai,இந்தியா
20-ஜூன்-201709:58:57 IST Report Abuse

GaneshCongress can make Rahul Gandhi as it's candidate. If he wins, then he can keep rejecting all the bills that Modi passes, and that way, congress can continue doing what they were doing to India in the past 70 years.

Rate this:
yak - gdansk,போலந்து
20-ஜூன்-201709:38:33 IST Report Abuse

yakஐயாமாரே, எனக்கு ஒரு சந்தேகம். இந்த தலீத் தலீத்ங்கறாங்களே அப்டின்னா என்ன? அவங்க எங்க இருக்காங்க? நாட்டுல எத்தனையோ பேரு ப்லாட்போர்ம்ல வாழறாங்க அவங்களையெல்லாம் விட்டுட்டு இவங்களா தேர்ந்தெடுப்பங்களாம். அவரு தலித்னு வேற சொல்வார்களாம். இதெல்லாம் எதுக்கு? இந்த சமுதாயத்துல எல்லாரும் ஒன்னு தான் எல்லார் உடம்புலயும் ஓடறது சிகப்பு ரத்தம் தான். ஜாதி மத பேரை சொல்லாமல் இவங்களுக்கு அரசியல் பண்ணவே தெரியாதா? இதுக்கு பேரு தான் ஜனநாயகமா? எல்லா அரசியல்வாதியையும் ஓடவிட்டு உதைச்சா மட்டும் தான் இந்த ஜாதி மதம் ஒழியும்.

Rate this:
Manoharan Murali - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201712:19:26 IST Report Abuse

Manoharan Muraliஆமாங்கடா, ஜாதி ரிசர்வேசனுக்கு வேணும், காலர்ஷிப்புக்கு வேணும், இடஒதுக்கீட்டுல வேலை வாங்க வேணும், கல்லூரில இடம் கிடைக்க வேணும், அரசியல் செய்ய வேணும், மதத்தை மாத்திக்கிட்டாலும் அரசு உதவி பெற ஜாதியை பின்னாடி ஒட்டிவெச்சுக்க வேணும், அதுக்கு வேணும்.. இதுக்கு வேணும்.. வீணாப்போன காங்கிரஸ் காரங்க 60 வருஷம் வச்சு செஞ்சதா ஒரு சுனா பானாவும் கேக்க மாட்டானுவ, திருட்டுக்கட்சிக் காரனுவ 40 வருசமா தமிழ்நாட்டை ஜாதி-ஓட்டு நாடா மாத்துனது மட்டுமில்லாம ஓசிக்கு கையேந்துற சோம்பேறி ஜனங்களா மாத்தினத்தைப்பத்தி கேக்க மாட்டாங்க. ஆனா பா ஜா க எதைச் செஞ்சாலும் எதிர்க்கணும்னுட்டு துண்டை ஒதறிக்கிட்டு ஓடி வந்துருவானுக. மொதல்ல ஜாதி சர்டிபிகேட் பதிவை துவக்கப் பள்ளிக்கூடத்துல இருந்தே ஒழிங்கடா.. அப்புறம் பேசுவோம் ஜாதிய பத்தி எவன் பேசுறான்னுட்டு......

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
20-ஜூன்-201714:29:09 IST Report Abuse

Karuthukirukkanவீனா போன காங்கிரஸ் இதெல்லாம் செய்தது என்று தானே ஓட்டு கேட்டு வெற்றி பெற்றது இந்த கட்சி ??? இவனுகள விட ஜாதி அரசியல் செய்யுற கட்சி வேற ஏதாவது இந்த நாட்டுல இருக்கா கண்ணா ? எல்லா மாநிலத்திலும் எந்த ஜாதி காரன் பெரிய ஆதிக்கம் செலுத்துறானோ , அங்க போய் மத ஜாதி சங்கத்தை எல்லாம் சேத்தி தேர்தல்ல நின்னு வெற்றி பெற வேண்டியது .....

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
20-ஜூன்-201714:33:09 IST Report Abuse

Karuthukirukkanதமிழ்நாடு மக்கள் ஓசிக்கு கையேந்தரங்களா ?? அடேய் நீங்க ஆளுற மாநிலத்துல பாதி தமிழ்நாடு போன்ற வளமுள்ள மாநிலங்கள் சம்பாரிக்கும் பணத்தில் வாழுறது தான் .. அளவா பொங்கு .. ஒரு ரூபாய் இட்டிலியை பத்தி பேசுறியா ?? அப்போ எதுக்கு யா இதை காப்பிய அடிச்சு அன்னபூரணி உணவகம்னு உத்தர ப்ரதேஷ்ல ஆரம்பிச்சிருக்கு ஒரு அறிவாளி தேசியவாதி ??...

Rate this:
நரி - Chennai,இந்தியா
20-ஜூன்-201720:09:16 IST Report Abuse

நரிஉங்களுக்கு பங்கனப்பள்ளி பிடிக்குமா ருமானி பிடிக்குமா. கடவுளே ஜாதி வச்சுத்தான் படைச்சிருக்கான்னு நினைக்கிறேன்...

Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்