மாலை நேரங்களில் மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாலை நேரங்களில் மழை

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மாலை நேரங்களில் மழை

தென்மேற்கு பருவ மழை, தமிழகத்தை கடந்து, வட மாநிலங்களை நோக்கி தீவிரம் அடைந்துள்ளது. அதனால், சில தினங்களாக, சென்னை உட்பட பல இடங்களில் வெயில் அதிகரித்தாலும், நேற்று காலை முதல் வெயில் குறைந்தது. மாலையில், பெருங்களத்துார், தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லுார், கிண்டி, நந்தனம் உள்ளிட்ட இடங்களை சுற்றி, பலத்த மழை பெய்தது.
'இன்னும் இரு தினங்களுக்கு, சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை, 35 டிகிரி செல்சியசாக குறையும்; மாலை மற்றும் இரவு நேரங்களில், லேசான மழை பெய்யும்' என, வானிலை மையம்
தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலையுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், செங்குன்றத்தில், 2; சோழவரத்தில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.

- நமது நிருபர்-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
20-ஜூன்-201710:03:15 IST Report Abuse
Ramaswamy Sundaram இதை வுடுங்கப்பு....கர்நாடகாவில் காவிரி பிடிப்பு பகுதிகளான பாக்க மண்டலா கூர்க் போன்ற இடங்களில் மழை சக்கை போடு போடுகிறதாம்....அதனால் காவிரியில் நீர்வரத்து பெருகும்.....இது நல்ல செய்தி....ஆனால் நாதஸ் பண்ணின திருட்டுத்தனத்தால் அந்த மழை நீரை கபினி ஹேரங்கி கே ஆர் எஸ் போன்ற அணைகளில் கர்நாடகாக்காரன் தேக்கிவிடுவானே? தமிழின துரோகிக்கு அன்றைக்கு கொடுத்த ஆதரவு எப்படி கால காலமாக தீமை விளைவிக்கிறது பாருங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை