ஆண்டுக்கணக்கில் கலெக்டராகவே கோலோச்சும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நீடிப்பு....!
ஆண்டுக்கணக்கில் கலெக்டராகவே
கோலோச்சும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்

தமிழகத்தில், ஆளுங்கட்சியில் தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, பல அதிகாரிகள் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு மாவட்டங்களில் கலெக்டர்களாக கோலோச்சி வருவது, இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆண்டுக்கணக்கில், கலெக்டர்,கோலோச்சும்,ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்


ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 'கலெக்டர் பதவி' வகிப்பதை பெருமையாக கருதுகின்றனர்.
அதிகாரம் மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற பதவி இது.
அந்தளவுக்கு, மக்களுடன் நேரடி தொடர்பிலுள்ள இப்பதவி மூலம், அரசு திட்டங்களை கொண்டு சேர்க்க முடியும். மக்கள் மத்தியில், நல்ல பெயர் பெற்று புகழ் பெற முடியும்.

இந்த அரிய வாய்ப்பு, இளம் அதிகாரிகளுக்கு எட்டாத வகையில், சிலஅதிகாரிகள் தொடர்ந்து, ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் வரை பல்வேறு மாவட்டங்களில் கலெக்டர்களாக பணியை தொடர்கின்றனர்.

யார் அவர்கள்ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹரிஹரன், விருதுநகரில் 23.7.12 முதல் 27.12.14, திண்டுக்கல்லில்

29.12.14 முதல் 25.7.16, தற்போது கோவையில் 4.7.16 முதல் கலெக்டராக தொடர்கிறார்.
கே.எஸ்.பழனிச்சாமி தேனியில் 6.6.11 முதல் 27.12.14, திருச்சியில் 29.12.14 முதல் 31.5.17, திருப்பூரில் 31.5.17 முதல் கலெக்டராக தொடர்கிறார்.
வெங்கடாசலம் திண்டுக்கல்லில் 29.9.12 முதல் 28.12.14, தேனியில்28.12.14 முதல் கலெக்டராக தொடர்கிறார்.
சுந்தரவள்ளி சென்னையில் 4.3.13 முதல் 21.1.16, திருவள்ளூரில் 22.1.17 முதல் கலெக்டராக தொடர்கிறார்.
சம்பத் சேலத்தில் 5.7.15 முதல் 3.4.16, பிறகு அதே மாவட்டத்தில் 4.6.16 முதல் கலெக்டராக தொடர்கிறார். இதற்கு முன் சிவகங்கை, விழுப்புரத்தில் கலெக்டராக பணிபுரிந்துள்ளார்.
எல்.சுப்பிரமணியன் மதுரையில் 7.7.13 முதல் 21.1.16, பிறகு சென்னை வருவாய் நிர்வாக இணை ஆணையராக மாற்றப்பட்டு பிறகு 8.9.16 முதல் விழுப்புரம் கலெக்டராக தொடர்கிறார்.
விவேகானந்தன் தர்மபுரி கலெக்டராக 8.7.13 முதல் தொடர்கிறார். இவர்கள் பதவி மூப்பு, பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்றவர்கள்
நேரடி ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீரராகவ ராவ் திருவள்ளூர் கலெக்டராக 31.10.12 முதல் 21.1.16, பிறகு 22.1.16 முதல் மதுரை கலெக்டராக பணியில்தொடர்கிறார். இப்படி பலரும் கலெக்டராகவே தொடர்வதால், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு தள்ளி போவதாக இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் புலம்புகின்றனர்.

முறையிட்டும் பயனில்லை:


வருவாய்த்துறை அலுவலர் சங்க பொது செயலர் பார்த்திபன் கூறியதாவது: தலைமை செயலாளராக ஞானதேசிகன் இருந்த போது,

Advertisement

இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இதுகுறித்து முறையிட்டனர். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை.
கலெக்டர்கள், பல ஆண்டுகளாக அதே பதவியில், ஒரே மாவட்டத்தில் தொடர்வதால் தேவையில்லாத சில பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இளம் அதிகாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில், நிர்வாக நலன் கருதி முதல்வர் பழனிச்சாமி, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டுமே ஒருவருக்கு கலெக்டர் பணி என்பதை நிர்ணயித்து முறைப்படுத்த வேண்டும், என்றார்.

மூன்றாண்டுகளுக்குள் மாற்றம்


அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது: அடிப்படை பணியாளர் முதல் ஆட்சியாளர் வரை, மூன்றாண்டுகளுக்குள் பணி மாற்றம் செய்யப்படுவது வழக்கம். சீனியர் ஐ.ஏ.எஸ்., அலுவலர்கள், கலெக்டர்களாக தொடர்வது இந்த ஆட்சியில் தான் நடக்கிறது. இது முறையற்ற நிர்வாகத்திற்கு வழிவகுக்கும், என்றார்.

-நமது சிறப்பு நிருபர்-


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
20-ஜூன்-201709:31:07 IST Report Abuse

Chanemougam Ramachandiraneஇந்த நிலை புதுவையில் ரொம்ப மோசம் இவர்களை மாற்ற மக்களால் தேர்ந்தெடுத்துபவர்கள் முன் வர மாட்டார்கள் ஏன் என்றால் விசயம் தெரிந்தவர்கள் இருந்தால் தான் கொள்ளை அடிக்க முடியும் .மத்திய அரசில் 3 வருட பணியில் இருந்தால் மாற்றும் செய்யணும் என்று இருந்தும் இதை கண்டும் காணாது போல் மாநில அரசும் மத்திய அரசு உள்ளது

Rate this:
sam - Doha,கத்தார்
20-ஜூன்-201709:13:29 IST Report Abuse

samஅதிமுக கட்சி மாவட்ட செயலாளர்கள் இருக்கும் போது, எதற்கு ஒரு IAS பதவி உள்ள மாவட்ட செயலாளர்கள்

Rate this:
Ravichandranraju - ooty,இந்தியா
20-ஜூன்-201709:09:16 IST Report Abuse

RavichandranrajuNilgiris 4 yrs

Rate this:
Ravichandranraju - ooty,இந்தியா
20-ஜூன்-201709:06:34 IST Report Abuse

RavichandranrajuWhat about Nilgiris may be the longest

Rate this:
Ravichandranraju - ooty,இந்தியா
20-ஜூன்-201709:05:41 IST Report Abuse

RavichandranrajuEnglish

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201708:59:00 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇதெல்லாம் ஒரு ....முடிந்துவிடும்...

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
20-ஜூன்-201700:42:09 IST Report Abuse

ramasamy naickenஇவர்களை மாற்றுவதற்கு பதில், இவர்களின் டவாலிகளை (ஆங்கிலேயர் காலத்து) நீக்கிவிட்டால், தானாக அந்த பதவியில் இருந்து ஓடி விடுவார்கள்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement