ஜல்லிக்கட்டில் தராத பரிசை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மல்லுக்கட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் தராத பரிசை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மல்லுக்கட்டு

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மதுரை, அலங்காநல்லுார்.  ஜல்லிக்கட்டு,   பரிசு,  மதுரை கலெக்டர்,  போலீஸ், கலெக்டர் வீரராகவ ராவ், ராயல் புல்லட், பெருமாள் கோயில் காளை, Madurai, Alankanallur. Jallikattu, Gift, Madurai Collector, 
Police, Collector Veeragara Rao, Royal Bullet, Perumal Temple Bull

மதுரை, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில், சிறந்த காளையாக அறிவிக்கப்பட்டும், பரிசு வழங்காமல் நான்கு மாதங்களாக இழுத்தடிப்பாக கூறி, மதுரை கலெக்டர் அலுவலகத்தை காளையுடன் முற்றுகையிட்ட கிராமத்தினர் போலீஸ் வேனை மறித்தனர்.
பிரசித்தி பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு பிப்., 10ம் தேதி நடந்தது. 400க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் சிறந்த மாடு பிடி வீரர்கள், பிடிபடாத காளைகளுக்கு கலெக்டர் வீரராகவ ராவ், விழா கமிட்டி சார்பில் பரிசுகளை வழங்கினார்.
பிடிபடாத சிறந்த மூன்றாவது காளையாக, மதுரை அனையூர் பெரியஇளங்கான் வளர்க்கும், பெருமாள் கோயில் காளையை விழா கமிட்டியினர் அறிவித்தனர். இதற்காக விழா முடிந்ததும், மூன்றாவது பரிசாக கேடயம், ராயல் புல்லட்டிற்கான சாவி வழங்கப்பட்டது. இதுவரை புல்லட் வழங்கப்படவில்லை. புல்லட் வழங்க கோரி கிராமத்தினர் பல முறை, விழா கமிட்டியினர் மற்றும் கலெக்டரிடம் முறையிட்டனர்.
நேற்று காளையுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காளையை அழைத்து வந்த அழகுமலையை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதை கண்டித்து, கிராமத்தினர் வேனை மறித்து
முற்றுகையில் ஈடுபட்டனர். வேறுவழியின்றி கைதானவரை போலீசார் விடுவித்தனர்.
அவர்கள் கலெக்டர் வீரராகவ ராவிடம் முறையிட்டனர். கலெக்டர், ''மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசுகள் அறிவிக்கப்படவில்லை. விழா கமிட்டியினர் தான் அறிவித்தனர். அவர்கள் தான் பொறுப்பு. இதுகுறித்து விழா குழுவினரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்,'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூன்-201708:13:32 IST Report Abuse
kulandhaikannan ஜல்லிக்கட்டுக்கு போராடியவர்களிடம் வசூல் செய்து கொள்ளவும்
Rate this:
Share this comment
babu - Nellai,இந்தியா
20-ஜூன்-201711:12:13 IST Report Abuse
babuபோடா முட்டாள்..... எதற்காக போராடினோம் என்பதை மறந்தாயா.....
Rate this:
Share this comment
babu - Nellai,இந்தியா
20-ஜூன்-201711:16:23 IST Report Abuse
babuஒரு மாவட்ட கலெக்டர், ''மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசுகள் அறிவிக்கப்படவில்லை. விழா கமிட்டியினர் தான் அறிவித்தனர். அவர்கள் தான் பொறுப்பு " என்று இப்படி தான் பொறுப்பற்ற தனமாக பதில் அளிக்க வேண்டுமா.... இதற்கு தான் இவர் கலெக்டர் படித்து வந்தார்? ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் முன் அதிகாரி என்பவர் தான் எங்கு செல்கின்றோம், எதற்காக செல்கின்றோம் என்று முறையாக விசாரிக்காமல் செல்வது தான் அழகா.... தங்கள் பதவியை அதிகாரத்தை மட்டும் நியாபகம் கொண்டுள்ள அதிகாரிகள் பொது மக்களின் எண்ணங்களையும் கொஞ்சம் நியாபக படுத்திக்கொள்ளுங்கள்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை