ஐ.எஸ்., பிடியில் சிக்கியதா கேரள மாநில கிராமம்?| Dinamalar

ஐ.எஸ்., பிடியில் சிக்கியதா கேரள மாநில கிராமம்?

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (23)
Advertisement
கேரளா, கிராமம், முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் இளைஞர்கள், ஐ.எஸ். பயங்கரவாதம்,  இஸ்ரேல், எகிப்து, பாலஸ்தீனம்,  சர்ச்சை, காஸா, பஷீர், Kerala, Village, Chief Minister Pinarayi Vijayan, Marxist Communist, Muslim youth, IS terrorism, Israel, Egypt, Palestine, controversy, Gaza, Bashir,

காசர்கோடு: இஸ்ரேல் - எகிப்து இடையே உள்ள, பாலஸ்தீனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய பகுதியான, காஸா முனையின் பெயரை, கேரளாவில் உள்ள ஒரு கிராம சாலைக்கு சூட்ட, அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த பல முஸ்லிம் இளைஞர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

காசர்கோடு மாவட்டம், படானே கிராமத்தில் இருந்து மட்டும், 21 இளைஞர்கள், இந்தியாவில் இருந்து வெளியேறி, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கேரள கிராமத்தில் பெருகும் ஐ.எஸ்., ஆதரவு

இந்நிலையில், படானே கிராமத்தில் உள்ள ஒரு தெருவுக்கு, பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியை குறிப்பிடும் வகையில், காஸா சாலை எனப் பெயர் சூட்ட, அப்பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அதிகாரப்பூர்வமற்ற விழா ஒன்றையும் அவர்கள் நடத்திக் காட்டியுள்ளனர்.

இந்த விழாவில், காசர்கோடு மாவட்ட பஞ்சாயத்து தலைவர், பஷீர் பங்கேற்றது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், 'கடைசி நேரத்தில் விழாவில் கலந்து கொள்ளும்படி என்னை அழைத்தனர். மற்றபடி, சர்ச்சைக்குரிய பெயர் சூட்டப்படும் விஷயம் எனக்கு தெரியாது' என, பஷீர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த இளைஞர்களின் சொந்த கிராமத்தில் உள்ள தெருவுக்கு, 'காஸா சாலை' என பெயர் சூட்டப்பட்ட விஷயம், புலனாய்வு அமைப்புகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த மேலும் பலர், பயங்கரவாத பாதையில் சென்றிருக்கலாம் என, புலனாய்வு அமைப்புகள் அச்சப்படுகின்றன.
இதற்கிடையே, காசர்கோடு நகராட்சி எதிர்க்கட்சித் தலைவர், ரமேஷ் கூறுகையில், ''படானே கிராம சாலைக்கு, அதிகாரப்பூர்வமற்ற முறையில், காஸா பெயரை சூட்டியுள்ளனர். அந்த சாலைக்கு, காஸா என பெயர் சூட்ட வேண்டும் என, நகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதை கடுமையாக எதிர்ப்போம்,'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
20-ஜூன்-201712:52:51 IST Report Abuse
Ajaykumar ஹிந்துக்களே எப்போது விழித்துக்கொள்ளப்போகிறாய்?
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201711:31:46 IST Report Abuse
VIJAIANCHANDRAKUMAR There will be no voice from any parties against this except BJP,there are so many ppl in INDIA obsessed with ISIS, PAKISTAN, Kashmir,plz feel free to leave this country and go to these places,indian government should sponsor for journey
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
20-ஜூன்-201710:16:42 IST Report Abuse
P. SIV GOWRI இது எல்லாம் கம்யூனிஸ்ட் ஆட்சி ஆதரிக்கும். அவர்களை காசாவில் போய் செட்டில் ஆகட்டும்
Rate this:
Share this comment
Cancel
Kalai Mahal - Madurai,இந்தியா
20-ஜூன்-201710:00:29 IST Report Abuse
Kalai Mahal இந்த ராஜா & சீதாராம் எல்லாம் எங்க பயனாக இது எல்லாம் கண்ணனுக்கு தெரியாது இதற்கு பதில் கொஞ்சம் சொல்லுங்க
Rate this:
Share this comment
Cancel
kuruvi - chennai,இந்தியா
20-ஜூன்-201709:35:54 IST Report Abuse
kuruvi முளையிலேயே கிள்ளி எறி.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201709:03:49 IST Report Abuse
Swaminathan Nath அங்கு சிலருக்கு, நமது அரசாங்க உதவி வேண்டும், நமது உணவு வேண்டும், ஆனால் அன்பு மட்டும் வேறு நாட்டின் மீது
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201708:11:47 IST Report Abuse
kulandhaikannan அவ்வளவு சங்கடத்துடன் ஏன் இந்தியாவில் இருக்கிறார்கள். Ghaza விலேயே செட்டில் ஆகி விடலாமே
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
20-ஜூன்-201708:05:30 IST Report Abuse
s t rajan என்ன கேவலமடா இது. பரசுராமரும் மஹா பலியும் வாழும் புனித பூமியில் இந்த கொடுமை. இந்தியனாகப் பிறந்து இந்த கீழ்த்தரமான செயல் ? கேரளா அரசு உடனடியாக இந்தச் செயலை கண்டித்து அந்த பாவிகளை ஆயுள் தண்டனை அளித்து அந்த இடத்தின் பெயரை காந்தி கிராமம் என்று பெயர் மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும். இனிமேல் இஷ்டப் படி பெயரிடுவதை சட்ட பூர்வமாக கண்காணிக்க வேண்டும். சர்வாதிகாரிகள் பெயர்களை (உதாரணமாக ஸ்டாலின், ஜின்னா) தடை செய்ய வேண்டும். அப்படிப் பெயர் வைத்தவர்களை நாடு கடத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Raman - kottambatti,இந்தியா
20-ஜூன்-201708:28:48 IST Report Abuse
Ramanநீ என்ன இந்த நாட்டுக்கு ராஜாவா? இணையம் இருக்கு என்பதால் என்ன வென எழுதுவியா? இந்த செய்திகள் எவ்வளவு உண்மை என்று தெரியுமா? ஒரு செய்தி வந்தால் எந்த அளவுக்கு அது உண்மை என்று அறியக்கூட முடியாத ஜென்மம் நீ. நாடு கடத்த நீ யாருடா? உனக்கு இவ்வளவு திமிரா? போயி வேலையை பாருடா ......
Rate this:
Share this comment
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
20-ஜூன்-201712:51:24 IST Report Abuse
Ajaykumarராமன் அப்படிங்குற பேர மாத்துங்க அமைதி மார்க்கம்....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201707:52:28 IST Report Abuse
Srinivasan Kannaiya பெயரில் என்ன இருக்கிறது... காந்தி பெயரில் சாலைகள் பல இடங்களில் உள்ளன... அந்த தெருவில் உள்ளவர்கள் மது அருந்தாமல்.,புலாலை ருசிக்காமலா இருக்கிறார்கள்...
Rate this:
Share this comment
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
20-ஜூன்-201710:49:46 IST Report Abuse
ngopalsamiஎன்ன அண்ணாச்சி, பெயரில் என்ன இருக்கு என்று சாதாரணமா கேட்கிறீங்க. காந்திக்கும், காஸாவுக்கும் வித்தியாசம் தெரியலையா. காந்தினு பெயர் வைத்த சாலையில் வாழ்பவர்கள் காந்திபோல் வாழவேண்டுமென்று சட்டம் ஒன்றுமில்லை. அப்ப, காந்தினு பெயர் வைத்தவர்கள் காந்திபோலவே எல்லாவற்றிலும் வாழ வேண்டும் என்பீர்களா? நாட்டின் கொள்கைகளுக்கு புறம்பான ஒன்றை செய்யவேண்டாம் என்று சொன்னால் அதை கடைபிடிக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
20-ஜூன்-201705:31:40 IST Report Abuse
jagan அப்போ இஸ்ரேல் மாதிரி அந்த காஸா பகுதிக்குள்ள போக்குவரத்தை கவனிக்கவும்...மத்திய கிழக்கு நாடுகளிலேயே நியாமான ஒரே நாடு இஸ்ரேல் தான் பாவம் தனியா மாட்டிக்கிட்டாங்க, பாவம்...இந்தியா முடிஞ்ச உதவி செய்யவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை