மகனுக்கு ஆடம்பர திருமண விழா : ஜெயலலிதா படத்தை மறந்த பெண் மந்திரி - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மகனுக்கு ஆடம்பர திருமண விழா : ஜெ., படத்தை மறந்த பெண் மந்திரி

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (13)
Advertisement
மகனுக்கு ஆடம்பர திருமண விழா : ஜெ., படத்தை மறந்த பெண் மந்திரி

திருச்சி: முதல்வர் பழனிசாமி பங்கேற்ற, பெண் அமைச்சரின் மகன் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண விழா மண்டபத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் வைக்கப்படாதது, கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதியின் மகன், ஸ்ரீராம் திருமண நிச்சயதார்த்தம், நேற்று முன்தினம் இரவு, லால்குடி அமிர்தம் மஹாலில் நடந்தது. முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், எம்.பி.,
- எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட கட்சியினர் பலரும் பங்கேற்றனர்.

ஒட்டகங்கள் : முதல்வரை வரவேற்று, திருச்சி நம்பர் 1 டோல்கேட் முதல் திருமண மண்டபம் வரை கட்சி கொடி, வரவேற்பு பேனர், போஸ்டர் என, தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பேனர்கள், போஸ்டர்களில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா படமும்,
தற்போதைய முதல்வர் பழனிசாமி படமும் இடம் பெற்றிருந்தது. மண்டபத்துக்கு வெளியே, வந்தவர்களை வரவேற்க, இரண்டு யானை, குதிரை, இரண்டு ஒட்டகங்கள் ஆகியவை, நிற்க வைக்கப்பட்டன. மண்டபத்தில் வாசல் முதல் உள் அரங்கம் வரை, ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மணமக்கள் மேடையும், ஆடம்பரமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மணமகன் ஸ்ரீராம், இளவரசர் உடையில், சாரட் வண்டியில் மண்டபத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.மண்டபத்தின் உள்ளே வந்த அவருக்கு, இருபுறமும் இளம்பெண்கள் பூ துாவ, அதன் மேல் நடந்து வந்தார். மொத்தத்தில், நிச்சயதார்த்தம் மற்றும் திருமண விழா அனைத்தும், ராஜ குடும்பங்களில் நடப்பது போல, மிகவும் ஆடம்பராக இருந்தது.

கவலைப்படவில்லை : அதே நேரம், மண்டபத்தின் வாசல் வரைமட்டுமே, ஜெ., படங்கள்
இடம் பெற்றிருந்தன. மண்டபத்தில் வாசல் முதல், உள் அரங்கம் வரை எங்கும் ஜெ., படங்களை காணவில்லை. அதை பற்றி யாரும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.
'எங்களின் சுவாசம், வாழ்க்கை அம்மா போட்ட பிச்சை' என, ஜெ.,யை வர்ணித்து உருகி,
உருகி பேசும் பெண் அமைச்சர் வளர்மதியின் வீட்டு திருமண விழா அரங்கத்தில், பெயருக்கு கூட ஜெயலலிதா படம் இல்லாமல் இருந்தது, விழாவுக்கு வந்திருந்த கட்சியினர் மத்தியில்
கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
20-ஜூன்-201720:36:31 IST Report Abuse
Rajamani Ksheeravarneswaran திருமண மண்டபம் வரை ஜெயலலிதா படம் அதன் பின் மண்டபத்திற்குள்ளே யார் படமும் இல்லை. என்பது எப்படி தவறாகும் .? மங்கள காரியங்கள் நடக்கும் இடத்தில் இறந்தவர் படம் வைப்பது ஹிந்து மதத்தில் வழக்கம் இல்லை. அதனால் அம்மாவை கட்சியினர் மறந்துவிட்டனர் என்று கருதினால் எங்கு நோக்கினும் பிஜேபி அரசு அல்லது அரசியல் கூட்டங்களில் அதன் மூத்த தலைவர்களான அடல் பிஹாரி வாஜ்பாய் , அத்வானி படங்கள் வைக்கப்பட்டுள்ளதா ? மோடி அமித்ஷா படம் தவிர்த்து இந்த மாபெரும் இரு தலைவர்கள் படம் பிஜேபி அலுவலகத்திலேயே இருக்கிறதா? என்று சந்தேகம் .ஏதோ அம்மா மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பது போல் திமுக மற்றும் பிஜேபி அன்பர்களும் துடித்து போய் இங்கு கருத்துக்களை கூறியுள்ளனர். தமிழக மக்கள் மனதில் இருந்து புரட்சித்தலைவரையும், புரட்சித்தலைவியும் நீக்கிட எத்தனை மோடி வந்தாலும் முடியாது
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
20-ஜூன்-201716:47:11 IST Report Abuse
Balaji ஒருவர் ஜெ தவறு செய்துவிட்டார் என்று தொலைக்காட்சியிலேயே பகிரங்கமாக தெரிவித்தார்........ இன்னுமொருவர் ஜெ வின் மீது சுமத்தப்பட்ட வழக்கிற்குத்தான் சசிகலா சிறை சென்றுள்ளார் என்று சொன்னார்........ கடந்த 30 வருடமாக சதிகாரி இருந்ததால் தான் கட்சி கட்டுக்கோப்பாக இருந்ததாக தெரிவித்திருக்கிறார்......... இதையெல்லாம் விட இது ஒன்னும் பெரியதாக தெரியவில்லை.......... இந்த ஆடம்பர திருமணமாக நடத்தப்பட்டதை தான் கவனிக்க வேண்டியவர்கள் கவனித்து அவர் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்..........
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
20-ஜூன்-201716:08:01 IST Report Abuse
Rafi வரம்புக்கு மீறி புகழ்கின்றார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் தவறானவர்களாக இருக்க முடியும். இவர்களுடைய பூர்வீகம் எப்படி இருந்தது என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. அடிமட்டம் வரை வரம்புக்கு மீறி பணம் பார்த்தவர்களாகவே தெரிகின்றார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
20-ஜூன்-201714:45:08 IST Report Abuse
Baskar தினகரன் கொடுத்த பணம் வேலை செய்கிறது. இது திருமணம் அல்ல கூவத்துர் கொண்டாட்டம்
Rate this:
Share this comment
Cancel
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-201714:03:47 IST Report Abuse
நெல்லை மணி, 'எங்களின் சுவாசம், வாழ்க்கை அம்மா போட்ட பிச்சை' என, ஜெ.,யை வர்ணித்து உருகி, உருகி பேசியது எல்லாம் வெறும் நடிப்புதான். இப்போ ஜெயா உயிரோடு இருந்தால் ஜெயலலிதா படம் திருமண விழா அரங்கம் என்ன ... அறையிலும் கூட இருக்கும். இதெல்லாம் அரசியல்ல சகஜம்
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
20-ஜூன்-201713:39:17 IST Report Abuse
Ravichandran அதற்கு நன்றி எப்படி தெரியும். அம்மா அம்மா என்று உருகியது எல்லாம் சும்மா, பணம் கொடுத்தால் யாரையும் அம்மாவென கூப்பிடும் இப்போ அப்பா போடா ஆறாம்பிச்சிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201711:19:21 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி மக்களை முட்டாளாக்கி தகுதி இல்லாதவர்களை MLA -ஆக தேர்ந்தெடுக்கச் செய்து அவர்களுக்கு மந்திரி பதவி கொடுத்ததன் விளைவு இது. தமிழ் நாட்டின் தலை எழுத்து. பெரியார் சொன்ன திராவிட கொள்கைகளை ஓட்டுக்காக வளைக்கும் கட்சிகளை மக்கள் விழிப்புணர்வுடன் ஒதுக்கித் தள்ளும் வரை இது போன்ற ராஜா வீடு திருமண திருவிழாக்களை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
pius - Nagercoil,இந்தியா
20-ஜூன்-201709:48:52 IST Report Abuse
pius அவள் மூஞ்சியை பார்த்தால் அசல் தமிழ் பட வில்லி மாதிரி இருக்கும், அப்போ நிச்சயதார்த்தமும் அப்படித்தான இருக்கும்...................
Rate this:
Share this comment
Cancel
Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201708:35:51 IST Report Abuse
Susil யார் வீட்டு கல்யாணம் சொர்ணக்காதானே
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201708:32:07 IST Report Abuse
Srinivasan Kannaiya வளர்மதி மறைந்த மதியை மறக்கவில்லை... ஆனால் பிழைக்க தெரிந்தவர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை