மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி | பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (19)
Advertisement
நரேந்திர மோடி, Narendra modi, மோடி, Modi, யோகா, Yoga,  புதுடில்லி, Delhi, பிரதமர் நரேந்திர மோடி, Prime minister Modi, மத்திய அரசு, Central government, சர்வதேச யோகா தினம், International yoga day, முதல்வர் யோகி ஆதித்யநாத்,Chief Minister Yogi AdityaNath, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,, Home Minister Rajnath Singh, அமைச்சர் வெங்கையா நாயுடு, Minister Venkaiah Naidu, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், External Affairs Minister Sushma Swaraj

புதுடில்லி: சர்வதேச யோகா தினமான, நாளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், உ.பி.,யில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், மத்திய அமைச்சர்கள் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அரசு அமைந்த பின், மூன்றாம் ஆண்டாக, நாளை, சர்வதேச யோகா தினம், நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.


லக்னோவில் மோடி தலைமையில் யோகா

ஏற்பாடு :

இதையொட்டி, மத்திய அமைச்சர்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, யோகா நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்க உள்ளனர். மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ள மாநிலங்களின் முதல்வர்கள் அனைவரும், தங்கள் சொந்த மாநிலங்களில், சர்வதேச யோகா தினத்தன்று, யோகா சிறப்பு நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உ.பி.,யில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தலைமை :

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இமாச்சலில், சுஜான்பூர் திரா பகுதியில் நடக்கும் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், யோகா நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்கிறார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மணிப்பூரிலும், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையிலும் பங்கேற்கின்றனர்.

தலைநகர் டில்லியில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர், யோகா நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்க உள்ளனர்.


சுற்றுப்பயணம் :

யோகா தினம் முடிந்தவுடன், மத்திய அமைச்சர்கள் அனைவரும், முன்னாள் பிரதமர் இந்திராவால் பிரகடனப் படுத்தப்பட்ட, 42வது அவசர நிலை தினத்தை நினைவு கூரும் வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் சென்று, சிறப்புக் கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். முந்தைய காங்., பிரதமர்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த அத்துமீறல் சம்பவங்கள் குறித்து, மக்களிடம் தங்கள் கருத்துக்களை, அமைச்சர்கள் பேச உள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
20-ஜூன்-201716:13:45 IST Report Abuse
அறிவுடை நம்பி சும்மா சொல்லக்கூடாது.. புதுசு புதுசா ஸீன் போடறதுல இவனுங்களே அடிச்சுக்கவே முடியாது.. நல்லா கவனிச்சு பாருங்க...இவனுங்க ஸீன் எல்லாமே மக்களுக்கு எந்தவிதத்திலும் ப்ரயோஜனப்படாத சீனாதான் இருக்கும்....
Rate this:
Share this comment
yaaro - chennai,இந்தியா
20-ஜூன்-201718:07:20 IST Report Abuse
yaaroசுத்த பேத்தல் .. ஜூன் 21 உலக யோகா தினம் ஆகி இது மூணாவது வருஷம்... இதுல என்ன "புதுசு புதுசா சீன் " ???...
Rate this:
Share this comment
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
20-ஜூன்-201712:08:05 IST Report Abuse
mrsethuraman பிஜேபி கையில் பொறுப்பை கொடுத்து 3 வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் எத்தனை நாளைக்கு காங்கிரஸ் ஐ குறை கூறிக்கொண்டிருப்பீர்கள்? விவசாயிகளின் பிரச்னையை கண்டு கொள்வதே இல்லை இந்த அரசு.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201710:13:13 IST Report Abuse
Giridharan S தமிழ்நாட்டிலே கேப்டன் தலைமையில் யோகா
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
20-ஜூன்-201710:00:49 IST Report Abuse
ஜெயந்தன் காங்கிரஸின் அவசர நிலை பிரகடனத்தை விட இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201709:59:08 IST Report Abuse
எப்போதும் வென்றான் யோகாவை இந்துமதத்தின் அடையாளமாக ஆக்கும் முயற்சி இது...உலகம் முழுவதும் வேறு வேறு பெயர்களில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எல்லோரும் செய்து கொண்டிருந்ததுதான்...
Rate this:
Share this comment
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201712:06:51 IST Report Abuse
நாஞ்சில் நாடோடியோகா இந்தியாவின் அடையாளம்......
Rate this:
Share this comment
Cancel
எமன் - எமபுரம்,அன்டார்டிகா
20-ஜூன்-201709:29:51 IST Report Abuse
எமன் மோடிஜி பிரம்மாண்ட யோகா பன்றதனால மட்டும் நாட்ல இருக்கிற பிரச்சினை தீர்ந்திடாது. கொஞ்சம் நாட்டு மக்களுக்கு என்ன வேணும்கறதையும் கவனிங்க.
Rate this:
Share this comment
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
20-ஜூன்-201709:13:52 IST Report Abuse
பாமரன் இன்னாடாயிது... இந்த வருஷம் சபாஷ் மற்றும் சபாஷ்ஜி போடுரவங்க எண்ணிக்கை ரொம்ப கம்மியாகிடிச்சு????? பேமெண்ட் பிராப்ளமா இருக்குமோ????
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
20-ஜூன்-201710:25:23 IST Report Abuse
Shriramஉங்களுக்கு கிளி மாதிரி வந்துருது போல ,, எல்லாத்துக்கும் எதிர்ப்பு காட்டி கக்குறீங்கோ கருத்த,,,...
Rate this:
Share this comment
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
20-ஜூன்-201710:59:00 IST Report Abuse
பாமரன்அட என்ன தம்பி உங்களுக்காக கவலைப்படுறதைக்கூட தப்பா புரிஞ்சிக்கறீங்க???...
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
20-ஜூன்-201712:10:10 IST Report Abuse
Shriramநன்றி அண்ணா...
Rate this:
Share this comment
Cancel
Abraham David - Tuticorin ,இந்தியா
20-ஜூன்-201706:30:10 IST Report Abuse
Abraham David Nothing is there to boost so they blame 100 years old events. Shame on you
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
20-ஜூன்-201706:21:06 IST Report Abuse
Sanny யோகாவுக்கு பிஜேபி என்னமோ தாங்கள் தான் சொந்தக்காரன் மாதிரி செயல்படுது, நாங்கள் படிக்கும் காலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ராமகிருஷ்ண மிஸ்ஸனுக்கு படிக்கப்போகும்போது அங்கு யோகா கற்று தருவார்கள் அந்தக்காலத்தில், மேல்நாடுகளில் இன்றும் பிரபலமாக தான் இருக்கு, இப்பவும் ஜிம் செய்வதை நிறுத்தி பல ஆஸ்துமா, மலசிக்கல்கள், மனஉளைச்சல் போன்றவற்றில் இருந்து விடுபட, வராமல் இருக்க யோகாவுக்கு போகிறார்கள். அண்மையில் கின்னஸ் சாதனை யோகா மூலம் ஒருவர் செய்தார், அதாவது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கறுப்பினத்தவர், Yogi Coudoux என்று பெயர். வயது 60 மேல், 183 இறாத்தல் எடையும் 6 அடி உயரமும் கொண்டவர், இவர் 43 வருடமாக யோகா கற்று, அதோடு யோகா வகுப்புகள் நடத்துபவர், அண்மையில் இவர் 5 லீட்டர் தண்ணீர் கொள்ளும் அளவுள்ள கண்ணாடி பேழையில் (அதாவது 15.7 x 16.9 x 20.9 cm) தனது உடலை மடக்கி ஒடுக்கி உள்ளே போகிறார், கண்ணாடி பேழை மூடப்பட்டு மேலே ஒரு சிறு வட்டவடிவில் துவாரம்,அதனுள்ளே தண்ணீர் ஊற்றி நிரப்பப்படுகிறது, அதனுள்ளே அவர் 5 நிமிடத்துக்கு இருக்கிறார், பின் அவர் சைகை செய்ய கண்ணாடி பேழை திறக்கப்படுகிறது, மெதுவாக உடலை வெளியே எடுத்து வந்து மூச்சு விடுகிறார், இது ஒரு கின்னஸ் சாதனையானது, youtube இல் பார்க்கலாம், அந்த காலத்தில் இந்தியாவில் யோகிகள் தான் இந்த யோகாவில் பல சாதனைகள் செய்தார்கள். இப்போ இந்தியாவில் யாரும் இருக்கிறார்களோ தெரியாது. யோகாவுக்கு அரசியல் சாயம் பூசாமல், கல்வியில், பாடசாலையில் ஒரு அங்கமாக செயல் பட்டாலே போதும்.
Rate this:
Share this comment
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201712:28:47 IST Report Abuse
நாஞ்சில் நாடோடிபிஜேபி காரர்களுக்கு யோகா பிடித்து இருக்கிறது. அவர்கள் அதை செய்கிறார்கள், வளர்க்கிறார்கள். உங்களுக்கு பிடித்தால் நீங்கள் செய்யுங்கள். ஏன் பொறாமை? மேல்நாட்டில் மட்டும் தான் யோகா பிரபலம் ஆகவேண்டுமா? யோகா உங்களுக்கு மட்டும்தான் பயன்படவேண்டுமா? நம் நாட்டு யோகா கலை நமக்கு பயன்பட வேண்டாமா?...
Rate this:
Share this comment
Cancel
குரங்கு குப்பன் - chennai,இந்தியா
20-ஜூன்-201706:17:22 IST Report Abuse
குரங்கு குப்பன் அருமை ஜி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை